Posted by Mohamed Rafiq
(namaduoor) on 2/12/2015 8:56:16 AM
|
|||
திருநெல்வேலி : சிறுமியை கடத்தியதாக வழக்குபதிவு செய்யப்பட்ட சிறப்புபுலனாய்வுப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மதுரைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். தென்காசியை சேர்ந்தவர் ஹனிபா 35. அங்கு நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைதாகி தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இவரது மனைவி மெகராஜ் 30, மகள் சுமயா 9, ஆகியோர் மேலப்பாளையம் ஆமீன்புரத்தில் வசிக்கின்றனர். கடந்த எட்டாம் தேதி மாலையில், தாயார் மார்க்கெட் சென்றிருந்தார். வீட்டுமுன்பாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை போலீஸ் உடையில் வந்த ஒருவரும், இன்னொருவரும் அழைத்துச்சென்றுள்ளனர். நீண்டநேரம் சிறுமியை காணாமல் போனதால் தாயார் தவித்துப்போனார். அப்போது அவரது மொபைல் எண்ணுக்கு பேசியவர், தாம் உளவுத்துறை போலீஸ் எனவும் சிறுமி வீட்டுக்கு வந்துவிடுவாள் எனவும் கூறியுள்ளார். சற்று நேரத்தில் சிறுமி வீட்டுக்கு வந்துவிட்டார். இதுகுறித்து மெகராஜ் தமது உறவினர்களிடம் தெரிவித்தார். போனில் பேசிய நபர், மதஅடிப்படைவாதிகள் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் என தெரியவந்தது. திருச்சி சிறையில் இருக்கும் அவரது தந்தையை எப்போது சந்தித்தீர்கள், அவரை வேறு யாரெல்லாம் சந்திக்க வருவார்கள் என விசாரித்துள்ளனர். அவருடன் வந்தது உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவராம். எனவே இதுகுறித்து மெகராஜ், மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். தம் மகளை கடத்திச்சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரினார். மேலப்பாளையம் போலீசார், எஸ்.ஐ.யு.,சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதி: சிறுமியை அழைத்துச்சென்றவர்கள் விசாரணை என்ற பெயரில் தாக்கியுள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரித்தால் உண்மை நிலை வராது என எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். சிறுமி நேற்று நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்குதொடரப்பட்ட எஸ்.ஐ.,மனோகரன் மதுரைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். | |||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |