Posted by S Peer Mohamed
(peer) on 3/7/2015 10:36:40 AM
|
|||
பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூறும் ஹிஜாபின் ஊடாகவும் சாதனைகளை செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார் ஃபாத்திமா! வறுமையான குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே ஆர்வ மிகுதியால் விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம். இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்த பல நல்ல உள்ளங்கள் இவரது படிப்பு செலவை ஏற்றுக் கொண்டன. ஐந்து வருடம் சிறப்பாக படித்து இன்று ஒரு பெண் விமானியாக வலம் வருகிறார் ஃபாத்திமா. Andra Pradesh Aviation Academy மூலமாக தனியார் விமான ஓட்டிக்கான சான்றிதழை மார்ச் 2003 அன்று பெற்றுக் கொண்டார். 200 மணி நேரம் விமானியாக பறந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இவ்வளவு பெரிய படிப்பு படித்தும் தனது ஹிஜாபை இது வரை கழட்டவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னேறுவதற்கு முக்காடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். மேற்கொண்டு படிப்புக்காக இவருக்கு 30 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. கூலி தொழிலாளியான இவரது தந்தையால் முடியாது. எனவே அரசு உதிவியினை எதிர் நோக்கி காத்துள்ளார். இவருக்கு உதவி கிடைக்கவும், இன்னும் எந்த உயரத்தை எட்டினாலும் இதே போல் இஸ்லாம் காட்டித் தந்த வழியில் நடைபோடவும் நாமும் பிரார்த்திப்போம். இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமையையும் ஃபாத்திமா பெறுகிறார். வாழ்த்துக்கள் சகோதரி.... தகவல் உதவி |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |