Posted by S Peer Mohamed
(peer) on 3/11/2015 5:34:32 AM
|
|||
ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நெல்லை மாவட்டத்தில்¢ வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல் மற்றும் அங்கீகாரமளிக்கும் திட்டத்தினை செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் மு.கருணாகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துதல் மற்றும் அங்கீகாரமளிக்கும் திட்டம் கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒரு வாக்காளரின்¢ பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இருப்பதை தாமாக முன் வந்து தெரிவிக்க அனைத்து வாக்காளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் தவறாக உள்ள வாக்காளர் பெயர், முகவரி, உறவு முறை, புகைப்படம் ஆகிய விவரங்களை திருத்திட உரிய படிவங்களை சமர்ப்¢பிக்க இந்த சந்தர்ப்பத்தினை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆதார் எண் வருங்காலத்தில் தேர்தல் தொடர்பான மேம்பட்ட சேவைகளை அளித்திடும் பொருட்டு வாக்காளர் அவரது மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அவர்களது குடும்பத்தினரின் ஆதார் எண், செல்போன் எண், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவிக்கவேண்டும். மேலும், வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்களது குடும்பத்தினரின் ஆதார் எண், செல்போன் எண், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சிரமமின்றி தெரிவித்திடும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளமான தேசிய வாக்காளர் சேவை தளத்தில் பதிவு செய்திடலாம். தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் “1950“க்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவலை அனுப்பலாம். சிறப்பு முகாம்கள் மேலும் திருத்தங்கள் குறித்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் சமர்ப்பிக்கலாம். இந்த திட்டத்தின்படி ஏப்ரல் மாதத்தில் 12, 26-ந் தேதிகளிலும், மே மாதத்தில் 10, 24-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில் வாக்காளர்கள் அவர்களது பெயர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இருப்பதை நீக்கிவிட படிவம்-7ம், வாக்காளர் பட்டியலில் தவறாக உள்ள வாக்காளர் பெயர், உறவு முறை, புகைப்படம் ஆகிய விவரங்களை திருத்திட படிவம்-8ம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் எண், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உரிய படிவத்தில் ஆதார் எண் நகலுடன் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள், தாசில்தார்கள் தேசிய அளவிலான வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்தும் திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்தும் பொருட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நியமித்து, அவர்களின் இருப்பினை உறுதி செய்திட வேண்டும். தன்னார்வ தொண்டர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவரவர் பாகத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அடங்கிய விழிப்புணர்வு குழுக்களை அமைத்திட வேண்டும். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கிட வேண்டும். சிறப்பு முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான 6, 7, 8 மற்றும் 8 ஏ. ஆகிய விண்ணப்பப்படிவங்களை போதுமான அளவு இருப்பு வைத்திட வேண்டும். சிறப்பு முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணிநேரம் முழுவதும் கட்டாயம் பணியில் இருத்தல் வேண்டும். வருகிற 31-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் 10 சதவிகித வாக்காளர்களின் ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் பெயர் பட்டியலுடன் இணைத்திட அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.க.குழந்தைவேல், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் வி.விஷ்ணு, உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஸ்ரீநாத், உதவி கலெக்டர் (பயிற்சி) இரா.கோவிந்தராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) க.சீனிவாசன், நெல்லை உதவி கலெக்டர் பி.பெர்மி வித்யா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சி.கெங்கராஜ், முன்னோடி வங்கி மேலாளர் அழகர்சாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் இரா.உமாபதி, தேர்தல் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |