பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.
இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார்.
கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது.
http://tamil.thehindu.com/tamilnadu/பிரபல-பாடகர்-நாகூர்-ஹனிபா-மறைவு/article7081783.ece
இசை முரசு அல்ஹாஜ் நாகூர் E.M. ஹனீஃபா அவர்கள் வஃபாத்தானார்கள்.
.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
.
08-04-2015 இன்று இரவு எட்டு மணியளவில் சென்னையில் இறையடிசேர்ந்தார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்! நாளை காலை நாகூர் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக!
.
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக! ஆமீன்!
.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.