.
தமிழ்நாட்டில் திருவாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியை
முதல் முதலாக பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தீவிரமாக ஆதரித்து,
பிரபலப்படுத்திய பெருமை துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களையே சாரும்.
பாரதீய ஜனதா கட்சியிலும் கூட – மோடிஜி பிரதமர் வேட்பாளராக
அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக தன் செல்வாக்கு அனைத்தையும்
பயன்படுத்தினார் சோ.
எல்.கே.அத்வானியை மிகவும் பிடிக்கும் என்றாலும் கூட, மோடிஜி
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், பாஜக ஆட்சியைப் பிடிக்க
வாய்ப்புகள் அதிகம் என்று சோ நம்பினார். ஆட்சியில் மிகப்பெரிய
மாற்றத்தைக் கொண்டு வந்து, இந்தியாவின் வளர்ச்சி வேகம் பிடிக்க
மோடிஜி செயல்படுவார் என்று சோ மனப்பூர்வமாக நம்பினார்.
ஆனால் நடந்தது ….? மோடிஜி தலைமையிலான பாஜக அரசு மத்தியில்
அதிகாரத்தைப் பிடித்தது என்னவோ உண்மை. ஆனால் – மற்ற எதுவுமே
எதிர்பார்த்தபடி நடக்கவில்லை… மூத்த தலைவர்கள் – முக்கியமாக
அத்வானிஜி தொடர்ந்து அவமதிக்கப்படுவது குறித்து சோ வருந்துகிறார்.
மோடிஜியின் ஏடாகூடமான போக்கு – அகந்தை கூடிய உளறல் பேச்சு…
எதுவுமே சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை….
“சோ” பாவம் என்ன செய்வார்…?
அவர் எதிர்பார்த்தது போல் மோடிஜி இல்லை…
நாம் ஏமாந்தது போலவே தான் அவரும் ஏமாந்திருக்கிறார்.
நாம் உடனே வெளிப்படையாக விமரிசிக்கத் துவங்கி விட்டோம்….
ஆனால் – அவரால் அப்படிச் செய்ய முடியுமா …?
இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே விமரிசனம் தளத்தில்
“………வெளிநாட்டில் போய்
உளறுவதில் யார் மானம் போகிறது …?” – என்கிற தலைப்பில்
ஒரு இடுகை வெளிவந்தது. அதில் ஒரு சிறிய பகுதி –
—————————————————–
சில தலைவர்களுக்கு – தான் வெளிநாட்டிற்கு சென்றாலோ,
அல்லது வெளி நாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்தாலோ,
பித்தம் தலைக்கேறி விடுகிறது. என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம்
என்றே அறியாமல் உளறிக்கொட்டுகிறார்கள்,
என்னென்னவோ செய்கிறார்கள்….
கனடாவிற்குச் சென்றபோது மோடிஜி வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டத்தில்
பேசினார். கிட்டத்தட்ட முழு பேச்சும் சுயதம்பட்டம். இந்தியா அப்படி
இருந்தது – இப்படி இருந்தது. நான் வந்து தான் அத்தனையையும்
சுத்தப்படுத்தி இருக்கிறேன் – என்கிற வகையில் – இந்தியாவில்
தேர்தல் கூட்டங்களில் பேசியதை எல்லாம் இப்போது அந்நிய நாட்டு
ஆடியன்சிடம் போய் பேசுகிறார்.
——————————————————–
ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருக்கும் ஆசிரியரை –
மோடிஜி இன்னும் “படுத்தி” விட்டார்…
பொறுக்க முடியாமல், முதல் முறையாக,
லேசாக மோடிஜியை கிண்டல் செய்து –
ஆனால் நாம் மேலே கூறியுள்ள அதே கருத்துக்களை பிரதிபலித்து –
ஆசிரியர் சோ அவர்கள் இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில்
அட்டைப்பட கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறார்….
கார்ட்டூன் கீழே உங்கள் பார்வைக்கு –
https://vimarisanam.wordpress.com/2015/04/22/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/