Posted by Haja Mohideen
(Hajas) on 4/26/2015 5:04:57 AM
|
|||
பாராட்டப்பட வேண்டிய பணி! இன்று ஏர்வாடி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மக்கள் சங்கமம் நிகழ்ச்சியின் கண்காட்சி இது வரை ஏர்வாடி வரலாற்றில் இல்லாத ஒரு புதிய அணுகுமுறையாகும். இதற்கு முன் சில கண்காட்சிகள் நடத்தப்பட்டிருந்தாலும் இந்த கண்காட்சி அவற்றிலிருந்து முற்றிலும் நீங்கி தனித்துவம் பெறுகிறது. ஏர்வாடியின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர்கள், ஏர்வாடியில் ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தவர்கள், லெப்பைமார்கள், ஏர்வாடியில் வாழ்ந்த கொடையிலும், கல்வியிலும், சேவையிலும் சிறந்தவர்கள், ஏர்வாடியின் கல்வி நிலையங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணக்கஸ்தலங்கள், வியாபார நிறுவனங்கள் என ஊரைப் பற்றிய வரலாறுகள், பழைய நினைவுச் சின்னங்கள், மேலும் இந்திய முஸ்லிம்களின் வரலாறு, பாபரி மஸ்ஜித் வரலாறு என நெஞ்சைத் தொடும் கண்காட்சியாக இது அமைந்தது என பலரும் பாராட்டுகின்றனர். கண்காட்சியைக் கண்டு வந்த ஆறு வயது மகன் அஹ்மது பாபரி பள்ளிவாசலை யார் வாப்பா இடிச்சா? எதுக்காக இடிச்சாங்க? இடிச்சவங்களை போலீஸ் துப்பாக்கியால சுடலையா? நாம அதை எப்போ கட்டுவோம்? -என்று சில அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த போது இக்கண்காட்சி ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் உணர முடிந்தது. உண்மையில் இது சமூகத்தை சக்திபடுத்துதலின் ஓர் முக்கிய அங்கமே என்பதை உரக்கச் சொல்லிவிட்டது அவனின் கேள்விகள். இது ஒரு மிகச் சிறந்த முயற்ச்சி மற்றும் துவக்கம். நம்முடைய வரலாறுகளை நாமே அறியாமல் இருப்பது மிகப் பெரும் அபத்தமாகும். அந்த அபத்தத்தை போக்கும் முதல் படியாக பாப்புலர் பிரண்டின் இந்த கண்காட்சியை நாம் பார்கிறோம். இதற்காக பாடுபட்ட உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நமது வரலாறுகள், கலாச்சார மரபு சார்ந்த பண்பாடுகள், கலைகள் போன்றவற்றைப் பாதுகாக்கும் பணி நிரந்தரமாகத் தொடரவும், அவைகள் முறையே ஆவணப்படுத்தப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளை சென்றடையவும் தாங்கள் தனிக் கவனமெடுக்க வேண்டும் என்பதையும், அதற்காக நாம் உங்களுடன் தோள் கொடுத்து துணை நிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://www.facebook.com/nellaieruvadi.sunnathjamath/posts/697504390376259 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |