Posted by Haja Mohideen
(Hajas) on 5/7/2015 3:36:24 AM
|
|||
ஏர்வாடி:
எல்லா நேரமும் எல்லாம் கிடைத்தால், அதில் ஓர் சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாலோ என்னவோ, அதிலும் தட்பவெட்ப சூழ்நிலைக்குத் தக்கவாறு அவற்றின் பலன்களையும் இணைத்தே தருவது அவனது இணையற்ற வல்லமையின் வெளிப்பாடு. ஏர்வாடி தெற்கு மெயின்ரோடு பழைய போஸ்ட் ஆபீஸ் முன்னுள்ள பெரிய வேப்பமர நிழலில் சீசனுக்கு தகுந்தவாறு நடைபெறும் வியாபாரம் தினமும் கலைகட்டுகிறது. இவ்விடத்தில் விற்பனைக்கு குவிக்கப்படும் பொருட்களை வைத்தே இப்போது என்ன சீசன்? என்பதை அறிந்து கொள்ளலாம். கொய்யா, சப்போட்டா, பலா (சக்கை பழம்) கரும்பு, என்று அந்தந்த சீசனில் கிடைப்பவற்றை தள்ளு வண்டியிலும், குட்டி யானையிலும், தரையிலும் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த இடத்தில் தற்போது நொங்கு மற்றும் மாம்பழம் விறுவிறுப்பாக விற்பனையில் உள்ளது.
ஏர்வாடியில் சீசனுக்கு தகுந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் முக்கிய இடமாக பழைய போஸ்ட் ஆபீஸ் அருகிலுள்ள இந்த இடம் தற்போது மாறிவருகிறது.
புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டால் இது போன்ற வியாபாரங்களால் இவ்விடம் இன்னும் கலைகட்டலாம். புகைப்படங்கள் & தகவல்கள்: https://www.facebook.com/permalink.php?story_fbid=485223864967827&id=386252861531595
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |