Posted by Haja Mohideen
(Hajas) on 5/11/2015 1:17:47 AM
|
|||
ஏர்வாடி பேரூராட்சி - தீன் தெரு சிமிண்ட்சாலை ஏர்வாடி பேரூராட்சி 11வதுவார்டு,2வது மற்றும், 3வது குறுக்குத்தெருக்களில்(தீன் தெரு) சிமிண்ட்சாலை அமைக்கும் பணி நிறைவுபெற்றது. நாங்கள் பொறுப்பேற்றபோது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த பகுதிகளில், குடிநீர்வசதி, வாறுகால் வசதி, மின்விளக்குகள், சிமிண்ட்சாலை என அத்தனையும் நிறைவேற்ற்யுள்ளோம்.
பெருமளவில் மக்கள் குடியேரியபின்னும், ஒரு ஆட்டோகூட நுழையமுடியாத இந்த பகுதிகளில், இடையூராக இருந்த மின்கம்பங்களை மாற்றி, ஆக்ரமிப்புகளை அகற்றி இன்று வாகனங்கள் உள்வந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஸதக்கத்துல்ஜாரியாவை எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி நிறைவேற்றச் செய்த ஏக இறைவனுக்கு நன்றி! https://www.facebook.com/eruvadi.townpanchayat/posts/1586934194894146
ஏர்வாடி பேரூராட்சி நிர்வாகத்தினர் யாவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
நல்லறங்கள் தொடர நன்றிகளோடும், பாராட்டுகளோடும்........ ஏர்வாடி ஆறாவது தெரு தீன் சந்து மக்களின் கோரிக்கையை ஏற்று சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்ததன் மூலம் அவர்களின் சிரமங்கள் கலைந்த நமது ஏர்வாடி பேரூராட்சி தலைவர் திரு.M.A. ஆசாத் அவர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர், குறிப்பாக இப்பகுதி கவுன்சிலர் ஆகியோருக்கும், இதற்கான முயற்ச்சிகளை முன்னெடுத்த நல்ல இதயங்கள் யாவருக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் கோடி.
சமூக அக்கறை கொண்ட நம் நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த பிப்ரவரி 07/2015 அன்று "ஆறாவது தெரு, தீன் சந்து மக்களின் அவதியும், ஆதங்கமும்!" -எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தோம்.
பலரின் முயற்சியும், பேரூராட்சியின் நடவடிக்கையும் நல்ல மாற்றத்தைத் தந்துள்ளது. இந்த சிமிண்ட் சாலை மட்டுமின்றி இந்த தெருவின் அடிப்படைத் தேவைகளான வாறுகால், மின்விளக்கு, குடிநீர் வசதி, வாகனங்கள் உள்ளே சென்றுவர இடையூறாக பாதையில் நட்டப்பட்டிருந்த மின்கம்பங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் தெருவுக்குள் சென்றுவரும் வசதி போன்றவற்றையும் தற்போதைய பேரூராட்சி நிர்வாகமே நிறைவேற்றித் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் பணியாற்றுவது அவர்களின் கடமை. என்றாலும், இலஞ்சமும், ஊழலும் பெருக்கெடுத்து ஓடும் தேசத்தில்,
உங்கள் பணிகள் மென்மேலும் சிறந்து விளங்க -அதனால் நமது ஊர் வளர்ந்து ஓங்க நல் வார்த்தைகளோடு நம் நல்வாழ்த்துக்கள்!
https://www.facebook.com/permalink.php?story_fbid=486482924841921&id=386252861531595 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |