சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்பவர்கள் தி.நகர் பகுதியில் தங்க நேரிடும் போது நோன்பு வைக்க சஹர் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று திண்டாட வேண்டியதில்லை, யோசனை பண்ணவும் வேண்டியதில்லை?
ஆம் இருக்கவே இருக்கிறது, தி.நகரில் ஜி.என்.செட்டி சாலையில் ரோகினி தங்கும் விடுதி எதிரே உள்ள ''விருதுநகர் ஹலால் ஹோட்டல்''! ;;; நோன்பு காலங்களின் முப்பது நாட்களுக்கும் இங்கே விடிகாலை 3:30 முதல் அங்கே நோன்பாளிகளுக்கு சுவையான தரமிக்க அசைவ சாப்பாடு கிடைக்கும்! இன்னும் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்பதுதான்! இங்கே உணவருந்திவிட்டு வற்புறுத்தி பணம் கொடுத்தாலும் இதன் உரிமையாளர்கள் வாங்க மாட்டார்கள்! மாறாக ஸலாம் கூறி அனுப்புவார்கள்! இங்கேதான் தி.நகர் பகுதியில் போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்ற கடைகளில் பணிபுரியும் முஸ்லிம்கள் பலரும் நோன்பு வைக்க சாப்பாட்டுக்கு வருடந்தோறும் திரண்டு வருவது வழக்கம். இதை அறிந்த சில கடைக்காரர்கள் தங்கள் ஊழியர்களின் உணவுக்காக குறிப்பிட்ட தொகையை தர முன்வந்தும் அதை வாங்க மறுத்து விடுவார் விருதுநகர் ஹோட்டல் உரிமையாளர்! சஹருக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படும். பிற மதத்தினர் உணவுக்காக கடை திறந்திருக்கிறதே என்று வந்தால் பவ்யமாக அவர்களிடம் எடுத்து கூறி அனுப்பி வைத்துவிடுவார்கள் அங்குள்ளவர்கள்!
சராசரி ஒரு நாளைக்கு 250 லிருந்து 300 பேர்கள் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசமின்றி இங்கே உணவருந்தி விட்டு செல்வது ஆச்சர்யமான காட்சி! அல்ஹம்துலில்லாஹ்!
இதுபற்றி இந்த உரிமையாளர் எனக்கு பழக்கம் என்பதால் அவரிடம் சென்ற வருடத்தில் சந்தித்தபோது எப்படி? இத்தனை பேருக்கு அதுவும் இலவசமாக மாதம் முழுவதும் இந்த சர்வீஸ் செய்கிறீர்கள் என்று விசாரித்தபோது....
இந்த சென்னைக்கு சாதராண ஓட்டல் வைத்து பிழைக்க ஊரிலிருந்து வந்தோம்... அல்லாஹுவின் பெரும் கருணை கொண்டு இன்று சென்னையில் குறிப்பிடத்தக்க நிலையில் இருக்கிறோம்.. வேறொன்றும் இதுபற்றி சொல்வதற்கில்லை என்று கூறி நகர்ந்தார்!
இந்த ஹோட்டல் அதிபர் இந்த நோன்புகால சர்வீசுக்காக தம் லாபத்தில் ஒரு மாத தொகையை தனியாக எடுத்துவைத்து இதை செய்கிறாராம்! இன்னொரு பதிவில் இன்னும் சில தகவல் தொடரலாம்... இன்ஷா அல்லாஹ்.
As received
https://www.facebook.com/groups/emandubai/permalink/920907467973188/
|