Posted by Haja Mohideen
(Hajas) on 6/2/2015 4:40:12 AM
|
|||
அதிகம் காலாவதி உள்ள பொருட்களால் மனிதன் விரைவில் காலாவதி ஆகும் வாய்ப்பு அதிகம் – தென்றல் கமால்
கடையில் ஒரு பிரபல பிராண்ட் ரொட்டி பேக்கெட் ………. மிகப் பெரியது……… 10 நாள் வரை எக்ஸ்பைரி இருந்தது வாங்கி விட்டேன்
பொதுவாக பிரட் பேக்கெட்டுகள் 3 -4 நாட்களில் கெட்டு விடும் ஆனால் அது 10 நாள் பற்றாக்குறைக்கு பெரிதாக வேறு வாங்கி விட்டேன்.
பிறகு பேக்கரி தொழிலில் உள்ள என் நணபர் அவருடைய பொருட்கள் ஒரே நாளில் சாப்பிட வேண்டும் இல்லையென்றால் கெட்டுப் போகும் அவர்கள் விற்பது எல்லாம் பணக்காரர்களுக்குத் தான் எல்லா இடங்களிலும் கிடைக்காது என்ற போது திடுக்குற்று
நான் வாங்கிய 10 நாள் வாழ்வு உள்ள பிரெட் பற்றி விசாரித்த போது அவர் சொன்ன செய்தி
கமால்…… எங்கள் தயாரிப்புகள் (chemicals and preservatives) அற்றவை அதனால் ஒரே நாளில் உண்டு விட வேண்டும் அடுத்த நாள் வைத்தால கெட்டு விடும்.
அதிக நாள் வாழ்வு உள்ள பொருட்கள் என்றால் அவை கெட்டுப் போகக் கூடாது என்று அதில் (chemicals and preservatives) மிக அதிகம் சேர்ப்பார்கள். அதுவும் பெரிய சைஸ் என்றால் இயல்பாக மக்கள் விழுவார்கள்
நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பொருளுக்குத்தான் பலியாகி உள்ளீர்கள் என்றார்
ஆனால் அதனால் உடலுக்கு மிகப் பெரிய தீங்கு. ஆகவே குறைந்த வாழ்வு நாட்கள் உள்ள (லைஃப்) பொருட்களை உண்புதான் அறிவுடமை என்றார்.
ஒரு காலத்தில் எல்லா பொருட்களும் எந்தக் கலப்பும் இல்லாமல் தூய்மையாகப் பெற்று வந்தோம்
உதாரணத்திற்கு வீட்டிலே மிளகாயை வெயிலில் காய வைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம் அதைப் போல் தனியா கோதுமை என்று
தயிர் மற்றும பால் அன்றே கறந்தது அல்லது செய்தது வீட்டிக்கு வந்து அன்றன்று பால்காரர்கள் டைரக்டாக டெலிவரி செய்வார்கள்
ஆனால் இன்று எல்லாமே பேக்கெட்டில் ……….. பேக்கெட்டில் வருபவை எல்லாமே ……. கெட்டுப்போக க் கூடாது என்பதால் பாதுகாக்கவென preservatives கலந்து வரும் இது உடலுக்கு தீமை விளைவிக்கும்.
பேக்கெட்டு உணவுகளிலே வாழும் இந்தத் தலைமுறை விரைவில் வியாதிகளை சந்திக்கும் என்பதில சந்தேகமில்லை. இறைவன் காப்பானாக !
ஒவ்வொரு பேக்கெட்டிலும் நம் உடல் அறியாத உடலால் சீரணிக்க இயலாத வேதிப் பொருட்கள் (chemicals and preservatives)
அண்மையில் ஒரு பிரபல நூடுல்ஸில் அதிக அளவு காரீயம் (LEAD) இருந்த து கண்டுபிடிக்கப்பட்டது இது கேன்சர் உண்டாக்கும் அதைப் போல் ஒரு மிளகாய் தூள் பேக்கெட்டில் அதிக அளவு காரீயம் (LEAD) இருந்த து கண்டுபிடிக்கப்பட்டது இது கேன்சர் உண்டாக்கும்
ஆகவே அனைரும் கூடியமட்டும் பேக்கெட் பொருட்களை தவிருங்கள்.
பாக்கெட் இட்லி மாவு வாங்குவதை விட வீட்டில் அரையுங்கள்
பாக்கெட் கோதுமை மாவு வாங்குவதை விட மிஷினில் அரையுங்கள்
அதைப் போல் மிளகாய் மற்றும் தனியா இதனால் அந்த மாவு மிசின் அரவைத் தொழிலும் அழியாமல் காக்கலாம்
கடைகளில் பாரத்தால் சிறு பிள்ளைகள் சிப்ஸ் பேக்கெட்டையும் பெப்சி குடிப்பதையும் காணும் போது வயிறு பதறுகிறது.
உறுப்புகள் வளரும நிலையில் உள்ள அவர்களுக்கு இத்தகைய பொருட்களில் உள்ள கெமிக்கல் உறுப்புகளை பாதித்து கிட்னி பெயிலியர் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஆகவே பேக்கெட்டில அடைத்த மற்றும் அதிகம் காலாவதி உள்ள பொருட்களால் மனிதன் விரைவில் காலாவதி ஆகும் வாய்ப்பு அதிகம்
எனவே அவற்றை கூடிய மட்டும் தவிர்ப்போம் – தென்றல் கமால் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |