Posted by Haja Mohideen
(Hajas) on 6/3/2015 3:12:46 AM
|
|||
மேகி நூடுல்ஸ் மட்டும்தானா? உலகவரலாற்றை புரட்டிபோட்ட நிகழ்வு இரண்டாம் உலகப்போர், அதன்பின் அறிவியில் எவ்வளவு வேகமாக வளர்த்ததோ, அதற்கு இணையாக பயங்கரநோய்களும் வளர்ந்தன. பல நோய்களுக்கு மருந்தே இல்லை எனும் அளவில் அவை வியாபித்து நிற்கின்றன. நீர்,காற்று,மண் என சகலமும் நாளுக்குநாள் மாசடைந்து வரும் சூழல் ஒருபுறம் என்றால், மற்றொரு மிக முக்கிய காரணம் உணவு. 1950களில் போருக்குபின் பஞ்சம் தலைவிரித்தாடியது, உணவை பெருக்கியே ஆகும் சூழ்நிலை, போரில் மற்ற நாடுகளை போல பெரிதும் பாதிக்காத அமெரிக்கா இந்த முயற்சியில் முண்ணனியில் நின்றது. அதாவது உதவுகிறோம் எனும் பெயரில் ரசாயாணங்களை பரிட்சீத்துபார்ப்பது. அவசரமாக உணவுகளை பெருக்க கண்ணில்பட்ட ரசாயணங்களை எல்லாம் தூவி விவசாயத்தை கெடுத்த வெள்ளை இனம், தற்போது விழித்துகொண்டு இயற்கைவிவசாயம் என இயற்கைக்கு நகர்ந்துவிட்டது. ஆனால் மூன்றாம் நாடுகளில் தங்கள் ரசாயாண உரத்தையோ,பூச்சிகொல்லியையோ மூடவில்லை, செய்யவும் மாட்டார்கள். 1940களில் தொழில்துறையில் வேகமாக வளரவேண்டும்,உற்பத்தியை பெருக்கவேண்டும் அதற்கு மாடுகளைவிட அதிகமாக உழைக்கவேண்டும், என மாற்றபட்ட ஐரோப்பியர்களின் வாழ்க்கைக்கு குடும்பபெண்களும் வேலைக்கு செல்லதொடங்கினர். பெண்கள் சென்றுவிட்டால் யார் சமைப்பார்கள், உணவு சந்தை விஸ்வரூபமெடுத்தது, துரித உணவுகள் சந்தைக்குள் வந்தன, நோய்களும் வந்தது. சாண்ட்விச்,பர்கள்,பீசா,பாஸ்டா என ஐரோப்பிய உணவு வரிசையில் இன்னும் சிந்தித்தார்கள். வீட்டில் சமைப்பதில்லை, துரித உணவில் விட்டமின்கள் இல்லை. பட்டாணி போன்ற பயிறு வகைகளை உலர்த்தி காயவைத்து, நூடுல்ஸ் செய்தார்கள். நூடுல்ஸ் நல்ல உணவுதான், சீனர்களின் நூடுல்ஸ், ஜப்பானிய,கொரிய நூடுல்ஸ் எல்லாம் அரிசி மாவு பிராதானம். காய்கறி அல்லது அசைவ சூப்களில் நூடுல்ஸை வேகவிட்டு அவர்கள் உண்ணும் உணவு சத்தானது. தமிழகத்திலும்,ஈழத்திலும் மிக விருப்பாமான இடியாப்பமும் ஒரு நூடுல்ஸ் வகை. சொதி எனும் குழம்பில் மிதக்கவிட்டு நாம் உண்ணும் நூடுல்ஸ் அது. இதனை எல்லாம் கண்ணுற்றுதான் ஐரோப்பாவிலும் நூடுல்ஸ் செய்தார்கள், வியாபாரம் செய்யாவிட்டால் என்ன ஐரோப்பியர்? அப்படித்தான் ஒரு ஐரோப்பியரும் கோதுமை மாவு ஆலை வைத்திருந்தார், பின்னர் நூடுல்ஸ் கம்பெனி 1947ல் தொடங்கினார். அவர் பெயர் ஜூலியஸ் மேகி. பின்னாளில் அக்கம்பெனியின் நூடுல்ஸ் மேகி என அழைக்கபட்டது, நெஸ்லே அதன் வியாபார சந்தையாளர். அவசர உலகில் எல்லாம் அவசரமல்லவா? நூடுல்ஸ்,அதன் சுவை உப்பு எல்லாம் நாங்களே தருகின்றோம், என சொல்லி, சமைக்கும் விஷயத்தை எளிதாக்கினர். வேலைமுடிந்து வருகின்றீர்களா? தண்ணீர் கொதிக்கவையுங்கள், மேகியை போடுங்கள், உப்பை தூவுங்கள், 2 நிமிடத்தில் உணவுரெடி (அப்படியே உண்டால் 2 ஆண்டில் மரணமும் ரெடி) உலகெல்லாம் பரவியது மேகி, கூடவே படுபயங்கர ரசாயாண சாஸ் வகைகளையும் செய்து மேகி நிறுவணம் உலகெல்லாம் கால்பதித்திற்று. பார்த்து பார்த்து பக்குவமாய் செய்யும் ஊறுகாய் கூட ஒரு கட்டத்தில் கெட்டுவிடும், ஆனால் மிளகாய் சாஸ், தக்காளிசாஸ் கெட்டுபோவதே இல்லை, அவ்வளவு ரசாயாண சேர்க்கை. பாக்டீரியா வளர்ந்தால்தான் உணவுகெடும், எல்லா பாக்டீரியாக்களையும் கொன்றுவிட்டால்? அந்த உணவு கெடுமா? கெடாது. ஆனால் பாக்டீரியாக்களை கொல்லும் ரசாயாணம் மனிதனை மட்டும் வாழ்வாங்கு வாழ வைக்குமா? அந்தந்த நாட்டின் மக்கள் விருப்பம்போல செய்தார்கள். ஜப்பானில் ஒருவகை, மலசியாவில் ஒருவகை, தாய்லாந்தில் ஒருவகை, இந்தியாவில் ஒருவகை என அவர்கள் வியாபாரம் கிறிஸ்கெய்ல் சிக்சர் போல் தூள்பரத்திற்று. மேகி நூடுல்ஸ் கோதுமை மாவு உள்பட்ட சமாச்சாரம் (சிக்கன்,மாடு) அது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க மேல் ஒரு மெழுகு பூச்சு,கூடவே ரசாயாணம். இன்னும் சுவை கூட்ட ரசாயாண உப்புகள் என உடல் எதனை ஏற்றுகொள்ளகூடாதோ அதனை எல்லாம் சேர்த்தார்கள். இதன் முதல்கெடுதல் ஆண்மைகுறைவு, நரம்பு தளர்ச்சி, மிக முக்கியமாக கிட்னி பெயிலியர் (அவ்வளவு உப்புக்களையும் அதுதான் தாங்கும்), என ஏராளமான இழப்புகள். பெரியவர்களையே மெல்லகொல்லும் எனும்பொழுது சிறுவர்கள் எம்மாத்திரம். சுதந்திர இந்தியாதான், ஆனால் உணவுசந்தையை கூட அந்நியருக்கு விற்பனை செய்தாயிற்று. ஆபத்தான உணவுகளான பர்கரும்,பீசாவும் கரைக்கமுடியா கொழுப்புகளின் தாய்வீடு. கார்பனேட் செய்யபட்ட சர்க்கரை நீரான கோலாவும்,பெப்சியும் இன்னும் ஆபத்தானவை. இவற்றை எல்லாம் விரட்டாமல் எதிர்கால ஆரோக்கிய இந்தியா சாத்தியமே இல்லை. இல்லை என்றால் இன்னும் 40 ஆண்டுகளுக்குள் நோயாளிகளின் நாடு எனும் நிலையை இந்தியா எட்டும், நோயாளிகள் கூடினால் நாடு என்னாகும்? எப்படி மாறிவிட்டது உலகம், ஒரே காரணம் விழிப்புணர்வு என்பது இல்லை, இந்த உணவு நமக்கு ஏற்றதா? என்ற சிறிய யோசனை கூட இல்லை. மனித இனம் தான் வாழும் சூழலில் என்ன விளைகின்றதோ அதனைத்தான் உண்ணவேண்டும், அதுதான் ஆரோக்கியமானது என்பது இயற்கையின் விதி. 1950வரை தமிழகமும் அப்படித்தான் இருந்தது, ஏன் சப்பாத்தியோ பரோட்டாவோ ஆபிரகாம் காலத்து "நாண்"கூட அவனுக்கு தெரியாது. கம்பு,சோளம்,கேழ்விரகு,பழைஅரிசி கஞ்சி, களி இப்படித்தான் அவனது உணவு. பதநீர்,மோர்,கருப்புகட்டிநீர் இப்படித்தான் அவன் பானம் இருந்தது. அவன் 90 வயதுவரை நோயின்றி,மாரடைப்பு இன்றி,கண்ணாடி இன்றி ஏன் 6 மாதத்திற்கொருமுறை செக்கப் இன்றி, சர்க்கரை நோய் இன்றி வாழ்வாங்கு வாழ்ந்தான். மீறிவந்த நோய்களை எல்லாம் மிளகு,சுக்கு,திப்பிலி,ஓமம் என இயற்கை பொருட்களாலே விரட்டினான். வள்ளியூர் பகுதி கடைதெருவை பாருங்கள், 1950க்கு முன்னால் எங்காவது பரோட்டா எனும் மைதா+பாமாயில் கலவை இருந்ததா?, இன்று வெளிநாட்டு நச்சு கலவை பானமும், என்றோ செய்த பதார்த்தங்களும் கணக்கில் அடங்கா, கூடவே பாணிபூரி எனும் அளவிற்கு சென்றுவிட்டது, மேகி இல்லா பெட்டிகடைகள் கூட இல்லை. மிக மோசமாக இந்திய உணவுகள் அழிந்துகொண்டிருக்கும் பொழுதுதான், பீகார் கோர்ட் ஆச்சரியமாக மேகியை தடை செய்திருகின்றது. கூடவே அதனை விளம்பரபடுத்திய பாலிவுட் பிரபலங்களை சிக்கவைக்க முயற்சிகின்றது. பிந்தங்கிய படிப்பறிவில் பாதியை கூட எட்டாத அம்மாநிலம் காட்டியவழியில் உடனே முன்னணி கேரளமும் மேகியை தடை செய்கிறது. அருமை தமிழகமோ செயற்கைபால், செயற்கை சாராயம் என விற்றுகொண்டிருக்கும் தமிழகம் மேகிபற்றி மூச்சுவிடவில்லை. தமிழக அமைச்சரவை கடந்த 8 மாதமாக கோயில்கள்முன் மாற்றபட்டிருந்தது, தற்போது ஒரு இடைதேர்தல் தொகுதியில் "ஜனநாயக" கடமை ஆற்றிகொண்டிருக்கின்றது. விரட்டவேண்டிய உணவுவகைகளில் மேகி மட்டுமல்ல, பெப்சி,கோக், கெண்டகி கோழி,பர்கர் என ஏராளமான விஷயங்கள் உண்டு. கட்டுபடுத்தவேண்டிய விஷயங்களில் கரும்புசக்கை + ரசாயாணபாணம் (அதுதான் டாஸ்மாக்) , சர்க்கரை என ஏகபட்டவிஷயங்கள் உண்டு. பீகார் கோர்ட் கிளப்பியிருக்கும் இந்த புரட்சி எந்த அளவு பலனளிக்கும் என்பது பின்னர்தான் தெரியும், ஆனாலும் சிந்திக்கவைத்திருக்கின்றது அல்லவா?. இந்தியாவில் விளையும் உப்பு கூட தனக்கு லாபமானதாக இருக்கவேண்டும் என்பது வெள்ளையர் கொள்கை. பெயருக்கு சுதந்திரம்பெற்றோமே ஒழிய சகல வெள்ளைவியாபார கொள்ளையரிடமிருந்து நமக்கு விடிவே இல்லை. உண்ணும் உணவை கூட அவர்களா நிர்ணயிக்கவேண்டும்? நாகரீகம் என்பது வேறு, ஆரோக்கியமாக வாழ்வது என்பது வேறு. நாகரீகம் எனும் பெயரில் நமது ஆரோக்கியத்தை அழிக்கும் நாம் கொஞ்சம் விழித்துகொள்ளத்தான் பீகார் சொல்கின்றது. நூடுல்ஸை விடுங்கள், இடியாப்ப சொதிக்கு அதை ஈடுகட்ட முடியுமா? பழதமிழர் வேட்டியோ,கோவணமோ கட்டிய இனம்தான், அவன் சீதோஷ்ன நிலை அப்படி. ஆனால் அவனின் உணவு மகா ஆரோக்கியமானது. பழையசோற்று கஞ்சி, கொஞ்சம் தயிரும் வெங்காயமும் சேர்த்து உண்ணபடும்பொழ்து பெரும் ஆரோக்கிய உணவாகின்றது என்பது நவீன ஆராய்சிமுடிவு. ஆனால் ஓட்ஸ் எனும் குப்பையில்கூட போடமுடியா உணவுதான் இன்று தமிழகத்தில் பிரபலம். வெள்ளையன் புத்திசாலி, நிச்சயம் ஒருநாள் நமது பழைய சோற்று கஞ்சியை அழகான பாக்கெட்டில் அடைத்து "Delicious Old Rice Soup" என விற்பான். சீனர்களின் சத்துமிக்க உணவான நூடுல்ஸையே மேகி போல நச்சுகுப்பையாக மாற்றிவிட்ட இனம் அது. விழித்துகொள்ளாவிட்டால் பாக்கெட் 500ரூபாய் என வாங்கி குடிக்கும் தமிழகம். முன்னோர்கள் சாதாரணமாக குடித்த அந்த பானத்தை புதிதாக பார்க்கவும் செய்யும். அவ்வரிசையில் கேப்பைகளி,கம்மங்கூழ்,சோளக்காடி எல்லாம் ஐரோப்பிய பாக்கெட்டுகளில் நம்வீட்டு கதவை தட்டும். நமது நடிகை,நடிகர்களும், விளையாட்டு வீரர்களு அதற்கும் பணம் வாங்கிகொண்டு விளம்பரம் செய்வர். ஆழ்ந்த உறக்கத்திலும், சினிமாக்காரர்கள்,டிவிக்காரர்கள் சொல்வதெல்லாம் உண்மை எனும் நம்பிக்கையிலும் இருக்கும் தமிழனை ஒரு பீகாரிய நீதிமன்றம் விழிக்க சொல்கின்றது, தமிழனின் "முப்பாட்டன்" வாழ்ந்த சேரநாடும் அதனைத்தான் சொல்கின்றது. இனியும் விழிக்கவில்லை என்றால், சவப்பெட்டி கூட வெளிநாட்டு தயாரிப்பாகத்தான் இருக்கும், அதனையும் பணமாகத்தான் பார்ப்பது ஐரோப்பியவியாபார தந்திரம். இந்திய சவ ஊர்வலத்தில் கூட அவனுக்கு ஒரு பங்கு பணமாய் போகும், அவர்கள் அப்படித்தான், உலகை ஏமாற்றாமல் அவர்களால் வசதியாக வாழமுடியாது. https://www.facebook.com/groups/baithussalam/permalink/843021329099919/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |