Posted by Haja Mohideen
(Hajas) on 6/24/2015 8:07:23 AM
|
|||
ரமலான் - புனித ரமலான் ஸஹர் செய்வதின் சிறப்பு எனதருமை சகோதரர்களே! அல்லாஹு தஆலாவின் வெகுமதிகளும்,பேருபகாரங்களும், எந்த அளவு இருக்கின்றன என்பதை பாருங்கள்.நோன்பின் பரக்கத்தினால் ஸஹர் நேர உணவையும் இந்த உம்மத்தினருக்கு நன்மைக்குரியதாக ஆக்கித் தந்துள்ளான். அதிலும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹு தஆலாவும், அவனின் மலக்குகளும் ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்.(தபரானி) ஸஹர் என்பது ஸுப்ஹுக்குச் சமீபத்தில் உள்ள நேரத்தில் சாப்பிடும் உணவு. அதாவது ஃபஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடறு தண்ணீரையாவது குடியுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்று நபிகளார் (ஸல்)அவர்கள் சொன்னதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்) நமக்கும், வேதக்காரர்களுக்கும் இடையே நோன்பு நோற்பதில் வித்தியாசம் ஸஹர் சாப்பிடுவதுதான், என்றும் அன்பிற்குரிய சகோதரர்களே! ஹாஃபிழ் இபுனு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ஸஹர் சாப்பிடுவதால் பலவகையான பரக்கத்துகள் உண்டாகின்றன. சுன்னத்தை பின் பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாறு செய்தல், இன்னும் வணக்கங்கள் செய்ய சக்தி பெறுதல், வணக்கத்தின் உற்சாகம் அதிகமாகுதல், பசி அதிகமானால் உண்டாகும் தீய குணத்தைத் தடுத்தல், அந்த நேரத்தில் தேவையுள்ள யாசகர் வந்தால் உதவி செய்தல், பக்கத்து வீட்டார் எழ்மையுடையவராக இருந்தால் அவருக்கு உதவுதல், குறிப்பாக அந்த நேரத்தில் துஆ ஏற்கப்படுதல்,ஸஹரின் பரக்கத்தால் துஆச் செய்யும் நல்லுதவியும் கிடைத்துவிடுதல், மேலும் அந்நேரத்தில் திக்ரு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தல் போன்ற பல வகையான நன்மைகள் ஏற்படுகின்றன, பிலால் (ரலி) அவர்கள் இரவில் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும்வரை நீங்கள் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் பிலால் (ரலி) மற்றும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் ஸஹரின் கடைசின் நேரத்தில் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ரின் தொழுகைக்கானதல்ல, மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பு.அதன் பின்னர் ஃபஜ்ர் நேரம் வந்ததும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும். பிலால் (ரலி) அவர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வதின் நோக்கம் தூங்கிக் கொண்டிருப்பவகள் எழுந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் பிறகு ஸஹர் செய்வார்கள் மேலும் இரவு முழுவதும் வணக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் இவ்வறிவிப்பை கேட்டவுடன் வீடு திரும்பி ஸஹர் சாப்பிடக்கூடும் காரணம் சஹாபா பெருமக்கள் நேரத்தின் புனிதத்தை அறிந்தவர்கள். ஸஹர் நேரம் என்பது முஸ்லிம்களுக்கு இறைவன் தந்த மாபெரும் அருட்கொடை அதில் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்புமிக்கது. ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அருள் நிறைந்த ஸஹ்ரே வருக! வருக! என்று வரவேற்பார்கள். அல்ஹம்துலில்லாஹ் ஸஹ்ரை நாமும் வரவேற்போம் இறைவனின் அருளை பெறுவோம். https://www.facebook.com/photo.php?fbid=437863686392819&set=gm.878932808844083&type=1&permPage=1 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |