Posted by S Peer Mohamed
(peer) on 6/26/2015 2:50:01 AM
|
|||
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் அன்புச் சகோதரர்களே இன்ஷா அல்லாஹ் நமது ஈமான் சார்பில் இப்தார் நிகழ்ச்சி வரும் வெள்ளி ( 26.06.2015) அன்று நடைபெற உள்ளது. அனைத்துச் சகோதரர்களும் தவறாது கலந்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நாள் - 26.06.2015 , வெள்ளிக்கிழமை நேரம் - மாலை 5.30 மணி இடம் - கராச்சி தர்பார் ரெஸ்டாரெண்ட் வாகன வசதி தேவையுடையவர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்புக் கொண்டு முன்னரே தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அமீர் புஹாரி - 050 2950887
நிகழ்ச்சி நிரல் மாலை 5.30 - 5.45 - கிராஅத் மற்றும் விளக்கம் 5.45 - 6.15 - ஈமான் , ஜகாத் கமிட்டி மற்றும் மக்தப் கமிட்டி பணிகள் மற்றும் செயல்பாடுகள் - ஒரு பார்வை 6.15 - 6.45 - சிறப்புரை -- சகோதரர் காயல் ஜகரியா - 6.45 - 6.55 நிறைவுரை குறிப்புகள் 1. இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்குவதற்கு வசதியாக அனைவரும் மாலை 5.15 க்குள் அரங்கத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பரஸ்பர நலன் விசாரிப்புகள் மற்றும் தனிப்பட்ட செய்திகள் ஆகியவற்றை கூட்டம் தொடங்குவதற்கு முன் பரிமாறிக் கொள்ளலாம். தொழுகை எவ்வாறு சரியான நேரத்தில் நடத்தப்படுகிறதோ அவ்வாறே முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளும் சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். 2. ADCB மெட்ரோ ஸ்டேசனிலிருந்து மனாமா சூப்பர் மார்க்கெட் வரும் வகையில் உள்ள வழியில் வெளியேற வேண்டும். கராச்சி தர்பார் உணவகம் ஸனா பேஸன் பின்புறம் உள்ளது. 3. இப்தார் முடிவடைந்ததும் மக்ரிப் தொழுகையினை பள்ளியில் தொழுதுவிட்டு வந்ததும் உணவு பரிமாறப்படும். 4. தங்களின் சந்தா தொகையினை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 5. இப்தார் செலவுகளுக்காக நன்கொடை அளிக்க விரும்புவோர் சகோதரர் முஹைதீன் 050 3694402 அவர்களைத் தொடர்புக் கொள்ளவும் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |