Posted by S Peer Mohamed
(peer) on 7/10/2015 6:34:47 AM
|
|||
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் கிருபையால் ஈமான் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி 26.06.2015 வெள்ளி அன்று துபையில், கராமாவில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக சகோதரர் ரபீக் ( Dnata) திருமறை வசனங்களை ஓதி விளக்கம் அளித்தார். திருக்குர்ஆனின் 19 வது அத்தியாயத்தின் 58 முதல் 60 வசனங்களை ( 19:59. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
அழகிய முறையில் ஓதிய சகோதரர் ரபீக், தொழுகையின் முக்கியத்துவத்தினை விளக்கினார்கள். பின்னர் ஈமானின் பணிகள் பற்றி சகோதரர் உவைஸ் தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய ஈமான் சார்பாக 41 நபர்களுக்கு மருத்துவ உதவியும் 17 திருமண உதவிகளும் வழங்கப்பட்டனர். அரசினர் பெண்கள் பள்ளிக்கு 20 டெஸ்க், பெஞ்ச்களும் ஈமான் சார்பாக வழங்கப்பட்டது. ஈமான் மக்தப் கமிட்டியின் பணிகள் : ஈமான் சார்பாக பிப்ரவரி 2014 அன்று பைத்துஸ்ஸலாம் பள்ளியில், பள்ளியுடன் இணைந்து மக்தப் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக ஆகும் வருமானத்திற்கு அதிகமான செலவுகளை மக்தப் கமிட்டி உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். தற்போது இந்த மக்தபில் 143 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு இந்த மக்தப் செயல்படுகிறது. தற்போது நவம்பர் 2014 அன்று மேல முஹல்லாவில் ஆரம்பிக்கப்பட்ட மக்தபில் 77 குழந்தைகள் பதிவு ஈமான் ஜகாத் கமிட்டி பற்றிய விபரமும் தெரிவிக்கப்பட்டது. 2012 டிஸம்பர் அன்று ஆரம்பிக்கப்பட்ட ஜகாத் கமிட்டி மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாதந்தோறும் 71 குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஜகாத் தொகைகளை வழங்க விரும்பும் சகோதரர்கள் ஜகாத் கமிட்டியைத் ( சகோதரர் முஹைதீன் 050-6769902) தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் சகோதரர் ஜகரியா (காயல்பட்டிணம்) ”குற்றவாளிக்கூண்டில் முஸ்லிம் ” என்றதலைப்பில் உரையாற்றினார். திருமறையின் 25 வது அத்தியாயத்தின் 30 வது வசனத்திற்கு விளக்கமாக “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்) அவர்களது உரை அமைந்தது. முஸ்லிம்கள் தங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து நன்மைகளை அதிகரிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும், குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையில் தங்களது வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் ஈமான் தொடங்கும்போது உறுதுணையாக இருந்த காயல்பட்டிணம் தாவூத் காக்கா சிற்றுரை நிகழ்த்தினார். 10 பேராக இருந்த ஈமான் இந்தளவு வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மனம் மகிழ்வதாக அவர் தனது உரையில் தெரிவித்தார். தற்போதுள்ள தனது சிறந்த நிலைக்கு காரணம் சகோதரர் அபுபக்கர் ஜின்னா என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்த அவர், ஈமான் வளர்ச்சிக்கு துஆ செய்தார். இறுதியாக சகோதரர் ஷம்சுதீன் ஷாபி நன்றியுரை நிகழ்த்தினார். கலந்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த சகோதரர் ஷாபி, தொடர்ந்து உறுப்பினர்களின் சந்திப்புகளுக்காக ஈத் ,இப்தார் சிறப்பு நிகழ்வுகள் தவிர மேலதிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் ஏறத்தாழ 150 ஏர்வாடி சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர். கராச்சி தர்பார் அந்த 3 மணி நேரம் குட்டி ஏர்வாடியாக திகழ்ந்தது என்றால் மிகையாகாது.
போட்டோக்கள்: http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=77_2015_UAE-Iftar-1 http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=77_2015_UAE-Iftar-2
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |