Posted by Haja Mohideen
(Hajas) on 8/7/2015 2:10:37 AM
|
|||
மும்பைக்குத் தூக்கு - அயோத்திக்குக் காப்பா?மும்பைக்குத் தூக்கு - அயோத்திக்குக் காப்பா? மின்சாரம் 1992 டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில், 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சங்பரிவார் - கரசேவகர் கும்பல் ஒரு பட்டப் பகலில் கொஞ்சம் கூடத் தயக்கமின்றிக் கூச்ச நாச்சமின்றி அடித்து உடைத்துத் தரை மட்டமாக்கினர். பிஜேபியின் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்த தலைவர்கள் இந்தப் பாசிச வன்முறை வெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கினர். நாடெங்கும் உயிர்ப் பலி 3000க்கு மேல்! பிற்காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் துணைப் பிரதமராகவிருந்த எல்.கே. அத்வானி, அதே போல பிற்காலத் தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சராக விருந்த முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பெருந் தலைவர்கள் அந்தக் கொடுஞ்செயல்களுக்கான திட்டம் தீ (வ)ட்டிகளாக இருந்தனர். அவர்கள்மீது இ.பி.கோ. 147, 153ஏ, 153பி, 295ஏ, 505, 120பி குரோத உணர்வுகளைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல் தேசிய ஒருமைப் பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல்,. ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல் என்கிற பிரிவுகளில் அத்வானி உள்ளிட்ட 48 பேர்மீது ரேபரேலி சி.பி.அய். நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறையின் எதிரொலியாக நடந்ததுதான் மும்பைக் கலவரம்; இது நடந்தது 1993 மார்ச்சு 12ஆம் தேதி இதில் பலியானவர்கள் 257 பேர். பாபர் மசூதி கொடூரம் நடந்த 96 நாட்களுக்குப் பின் அதன் எதிரொலியாக நடந்த குண்டு வெடிப்பில் நடந்த கோர நிகழ்வு இது. எதிரொலியாக நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தண்டனையும் வழங்கப் பட்டு விட்டது. கடைசியாக யாகூப் மேமன் கடந்த 30ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அவசர கெதியில் தூக்கி லிடப்பட்டது சரியானது தானா? நியாயம் தானா? என்ற கேள்விகள் எல்லாம் ஒரு பக்கத்தில் எதிரும் புதிருமாக நடந்து கொண்டு இருக்கின்றன அது ஓருபுறம் இருக்கட்டும். சட்டத்தின்மீதும் நியாயத் தின்மீதும், மனித உரிமைகள் மீதும் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் முன் ஒரு கேள்வி செங்குத்தாக எழுந்து நிற்கிறது. பாபர் மசூதி இடிப்புதான் மூல காரணம் - அதன் எதி ரொலிதான் மும்பைத் தாக் குதல். எதிரொலிக்கான காரண கர்த்தாக்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால், மூலவித்தான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கு விசா ரணை என்னாயிற்று? அந்தக் குற்றவாளிகள் - இதுவரை தண்டிக்கப் படாதது ஏன்? தண்டிக்கப்படாதது மட்டுமல்ல; இதில் சம்பந்தப்பட்ட பெருந் தலைவர்கள் ராஜ நடை போட்டு உல்லாசமாகத் திரிகிறார்களே! முதல் குற்றவாளி அத்வானி - அந்தக் குற்றத்திற்குப்பின் இந்தியாவின் உள் துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் ஆகிவிடவில்லையா - முரளி மனோகர் ஜோஷி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பவனி வந்தாரே - உமா பாரதியும் மத்திய அமைச்சராக வலம் வந்தாரே! நீதிபதி லிபரான் தலைமையிலான ஆணையமும் வாஜ்பேயி உள்ளிட்ட 68 பேர் - பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் என்று பட்டியல் போட்டுக் கொடுத்ததே! சட்டத்தின்முன் எல்லோரும் சமம் என்று நீட்டி முழங்கும் இந்த பிஜேபிகாரர்கள் லிபரான் ஆணையத்தின் அறிக்கையில் வாஜ்பேயி பெயர் இடம் பெற்றதற்காக நாடாளுமன்றத்தின் - இரு அவைகளையும் நடக்க விடாமல் முடக்கினார்களா இல்லையா? (இந்த யோக்கியர்கள் தான் காங்கிரஸ்காரர்கள் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் ரகளை செய்கிறார்களே, என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்; வெட்கக் கெட்ட பார்ப்பன ஊடகங்களும் இந்தக் கூட்டத்திற்குப் பக்கவாத்தியம் வாசிக்கின்றன). வாஜ்பேயி பேசியது என்ன? பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் (5.121992) உ.பி. லக்னோவில் வாஜ்பேயி என்ன பேசினார்? நாளைய தினம் அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள்மீது அமர்ந்து கொண்டு பஜனைப் பாடல்களைப் பாட முடியாது; மண்ணைச் சமப்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும் என்றாரே. அந்தப் பேச்சுக் குறித்து வாஜ்பேயிடம் அவுட்லுக் செய்தியாளர் கேட்டபோது நான் லக்னோவில் பேசியது உண்மைதான், அது நகைச்சுவைக்காகக் கூறப்பட்டது என்றல்லவா கூறினார். இப்படிப் பேசிய இந்த யோக்கியர் குற்றவாளியா இல்லையா? என்பது அறிவு நாணயமான கேள்விதானே! பிரதமராக பின்னாளில் இருந்த இந்த சிகாமணிதான் இப்படி என்றால் இவருக்கு அடுத்த நிலையில் உள்ள லால்கிஷன் அத்வானியின் தர்மம்தான் என்ன? இதோ அத்வானி பேசுகின்றார். பாபர் மசூதியை இடிக்க டிராக்டர் களோ, புல்டோசர்களோ தேவையில்லை. ஆளுக்கொரு தடியை எடுத்தால் காரியம் முடிந்து விடும். மத்தியப் படை நுழைய இடம் விடாமல் மசூதி வாசல்களை இழுத்து மூடுங்கள். ரிசர்வ் படையை மசூதிக்கு அருகில் வரவிடாமல் மசூதி வாசல்களை இழுத்து மூடுங்கள் பெஞ்சுகளைக் குறுக்கே போட்டு மறியுங்கள், அப்படியே உட்காருங்கள் என்று கரசேவர்கள் மத்தியில் எல்.கே. அத்வானி தூண்டினார் இதற்கான வீடியோ ஆதாரம் சி.பி.அய்.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிசினஸ் இந்தியா ஏட்டின் செய்தியாளர் ருச்சிராகுப்தா லிபரான் ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்துள்ளார். பத்திரிகை யாளர் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்து மாறு அத்வானியிடம் கேட்டுக் கொண் டேன். அத்வானியோ அசைந்து கொடுக்க வில்லை. மாறாக எனக்கும் இனிப்புக் கொடுத்தனர் என்றும் லிபரான் ஆணையத் தின் முன் சாட்சி கூறினாரே! அத்வானிக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெண் அய்.பி.எஸ். அதிகாரி அஞ்சு குப்தா ரேபரலி சி.பி.அய். நீதிமன்றத்தில் அளித்த சாட்சி (26.3.2010) என்ன? அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தி லிருந்து 150 முதல் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ராம்சுதா கஞ்ச் மஞ்ச் கட்டத்தின் மேல்தளம் மேடையாகப் பாவிக்கப்பட்டு, அங்கிருந்து சங்பரிவார் தலைவர்கள் கரசேவகர்களைத் தூண்டி விடும் வகையில் பேசிக் கொண்டிருந்தனர். 1992 டிசம்பர் 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நான் அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக அங்கு சென்றேன். பாபர் மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் திரும்பத் திரும்பப் பேசினர். இது கரசேவகர்களைத் தூண்டுவதாக இருந்தது. அந்த மேடையில் சங்பரிவார் தலைவர்கள் வினய் கட்டியார், உமாபாரதி, சாத்வி ரிதம்பாரா, ஆகியோரும் இருந்தனர். அவர்கள் கரசேவகர்களைத் தூண்டும் வகையில் பேசினர். மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து வருமாறு என்னை அத்வானி பார்த்து வரச் சொன்னார். நானும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தேன். அப்போது கரசேவைத் தொண்டர்கள் ஆக்ரோஷமாக மசூதியை இடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் மசூதியின் கோபுரத்தில் ஏறினர். அவ்வாறு ஏறும் போது கீழே விழுந்து சிலருக்குக் காயம் ஏற்பட்டது. இதை அத்வானியிடம் நான் கூறினேன். இதைக் கேட்டதும் மேடையிலிருந்து அந்த இடத் துக்குச் செல்ல அத்வானி விரும்பினார். சர்ச்சைக்குரிய இடத்தில் செல்வது குறித்து மூத்த அதிகாரிகளுடன் அத்வானி ஆலோ சனை நடத்தினார். தற்போதைய நிலையில் அந்த இடத் துக்குச் செல்லுவது நல்லதல்ல என்று அதிகாரிகள் யோசனை கூறினர். அதனை யடுத்து உமாபாரதியை சம்பவ இடத்துக்கு அத்வானி அனுப்பினார். உமாபாரதி திரும்பிவந்து கரசேவகர்கள் கைகளில் இரும்புத் தடிகளையும், கடப்பாறைக் கம்புகளையும் எடுத்துச் செல்வதாகவும் கூறினார். மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க நான் போலீஸ் கட்டுப்பாடு அறைக்குத் தொடர்பு கொண்டு படையை அனுப்புமாறு கூறி னேன். ஆனால் எனது பேச்சு எடுபட வில்லை. மசூதி இடிக்கப்படுவதைப் பார்த்து மேடையில் உள்ள தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கட்டடத்தை இடித்துத் தள்ளும்வரை தூண்டி விடும் வகையி லேயே தலைவர்களின் பேச்சு அமைந் திருந்தது. அங்கிருந்து போலீஸ் டி.ஜி.பி. தீட்சித் பாதுகாப்புக்கு அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்துப் பாராட்டினார். கரசேவகர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் முழு ஒத்துழைப் புக் கொடுத்ததற்காக உங்களது பெயர்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று போலீசாரிடம் போலீஸ் டி.ஜி.பி.யே சொன்னார். மசூதியின் கோபுரங்கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட பின் உமாபாரதியும், ரிதம்பராவும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இனிப்புகளையும் வழங்கினர். அவர்கள் அத்வானிக்கும், முரளி மனோகர் ஜோஷிக் கும் வாழ்த்துத் தெரிவித்தனர். எந்த தலைவரும் மசூதியை இடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அஞ்சு குப்தா அய்.பி.எஸ். சாட்சியம் அளித்த பின்னர் குற்றச் சாட்டப்பட்டோர் தரப்பு வழக் குரைஞர் குறுக்கு விசாரணை செய்தார். (தினமணி 27.3.2010). இவ்வளவு ஆதாரங்கள் அலை அலை யாக அணி வகுத்து நின்றும் இவர்கள்மீது ஒரு தூசுகூட விழவில்லையே! இதில் கடைந்தெடுத்த வெட்கக் கேடு என்ன தெரியுமா? சட்டத்தின் சந்து பொந்து களில் நுழைந்து இந்த வழக்கிலிருந்து அத்வானி வெளியேற்றப்பட்டதுதான்; ரேபரலி நீதிமன்றம்தான் இதற்கு வழி விட்டது. பிறகு மேல் முறையீட்டில்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அத்வானியை மீண்டும் வழக்குக்குக் கொண்டு வந்தது. ஒருபடி மேலே சென்று நாடாளுமன்றத் தில் சுஷ்மா ஸ்வராஜ் (இன்றைய வெளி யுறவு அமைச்சர்) என்ன சொன்னார் தெரியுமா? லிபரான் ஆணையின் அறிக்கை மீதான விவாதத்தில் இரண்டாம் நாளன்றுதான் அப்படி ஆவேசமாகக் கத்தினார். நான் சவாலாகவே கூறுகிறேன். நாங்கள்தான் பாபர் மசூதியை இடித் தோம் என்ன தண்டனை தருவீர்கள் உங்களால் எங்களைத் தண்டிக்க முடியுமா னால் தண்டித்துப் பாருங்கள் என்றாரே (தினமலர் 9.12.2009). இதற்கு மேலும் எந்த ஆதாரத்தை நீதி மன்றங்கள் தேடிக் கொண்டு இருக்கின்றன? யாகூப் மேமனைத் தூக்கிலிடுவோர் - அதற்காக சட்டத்தையும், நியாயத்தையும் புரட்டுபவர்கள் பாபர் மசூதி இடிப்பு என்ற உலகின் முன் இந்தியாவைத் தலைகுனிய வைத்த அராஜகத்தின் சொந்தக்காரர் களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன? நாடே கேட்கிறது - ஏன் உலகமே கேட்கிறது? பதில் என்ன? பதில் என்ன?? பதில் என்ன???
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |