Posted by Haja Mohideen
(Hajas) on 8/21/2015 6:05:29 AM
|
|||
"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்!" நமது கலாச்சார மரபுகளைக் கட்டிக் காத்தக் "கோட்டை!" ஏர்வாடி தெற்கு மெயின்ரோட்டில் அமைந்திருக்கும் பழமையும், புதுமையும் கலந்த லெப்பைவளவு பள்ளிவாசலின் புகைப்படங்கள் தான் இவை.
இதற்கு "முகாம் பள்ளிவாசல்" என்ற பெயரும் உண்டு. சுமார் 400 வருடங்களுக்கு முன் வாஸ்கோடகாமா -வின் தலைமையில் இந்தியாவை அடிமைப்படுத்த வந்தனர் போர்த்துகீசியர்கள். நாடு பிடிக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடற் போர் புரிந்து, குஞ்சாலி மரைக்காயரின் படையில் தளபதியாகவும், முக்கிய வீரராகவும் இருந்து வீரப் போர் புரிந்த காயல்பட்டிணம் சகத் மரைக்காயரின் மகன் வழிப் பேரரும், கி.பி 1674 -ல் ஏர்வாடிக்கு வருகைத் தந்த இறைநேசரும், சீர்திருத்தச் செம்மலுமாகிய சலாஹுத்தீன் அப்பா அவர்களின் மண்ணறை இப்பள்ளிவாசலின் வளாகத்தில் தான் உள்ளது. இறைநேசர் சலாஹுத்தீன் அப்பா அவர்களின் வருகைக்கு சுமார் 570 ஆண்டுகளுக்கு முன்பே ஏர்வாடியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழும் இப்பகுதியில், பொதுவாக ஏர்வாடியின் எல்லா பள்ளிவாசல்களிலும் நோன்பு காலத்தில் முஸ்லிம்களால் காய்ச்சி விநியோகிக்கப்படும் நோன்பு கஞ்சியை வாங்குவதற்காக வருகைதரும் இந்து நண்பர்களின் வருகை ஏர்வாடியின் மற்ற பள்ளிவாசல்களை விட இங்கேயே அதிகமாக இருக்கும். வரலாற்றுச் சிறப்பும், நல்ல சமூக நல்லிணக்கப் பாரம்பரியமும் கொண்ட லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல் ஏர்வாடியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |