Posted by Haja Mohideen
(Hajas) on 8/27/2015 2:26:30 AM
|
|||
நமது முன்னோடிகள் யார்? இமாம்களின் வழி நடப்போம்! இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி, குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது. இதோ உங்கள் சிந்தனைக்கு........ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது. மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும். மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. அந்த நான்கு வழிமுறைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே.. அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும். 1. ஹனபி மத்ஹப் = 2. மாலிகி மத்ஹப் = 3. ஷாபி மத்ஹப் = 4. ஹன்பலி மத்ஹப் = மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின் காலங்களும் கிட்டத்தட்ட ஒரே காலம்தான் . மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால் நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் ஏற்ப்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்! ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது. புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை. மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று. (ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான். ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும்! ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய ஹதீஸ் நூல்களைத் தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!! அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்! 1. ஸஹீஹ் அல் புகாரி = 2. ஸஹீஹ் முஸ்லிம் = 3. அபு தாவூத் = 4. திர்மிதீ= 5. நஸாயீ = 6. இப்னு மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு மாஜா (ரஹ்).
ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள். பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள். எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா? மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும் இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள். மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள் சகோதரர்களே! சிந்தியுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |