திருக்குரான் பின்பற்ற சொல்லும் இயற்கை மருத்துவ முறைகள்.! - பாகம் -1

Posted by Haja Mohideen (Hajas) on 9/7/2015 2:15:52 AM

 

நபிகள் நாயகம் வழியாக திருக்குரான் பின்பற்ற சொல்லும் இயற்கை மருத்துவ முறைகள்.! - பாகம் -1

1. பூண்டு

புண்கள் ஆறிட பூண்டை பால் விட்டு அரைத்து புண்கள், வெயில் கொப்பலங்களில் வைத்தால் விரைவில் ஆறிவிடும். புண் ஆணையைக் கூட வெளியாக்கிவிடும். இன்னும் அநேக மருத்துவ குணங்கள் பூண்டிற்கு உண்டு. ஆனால் மூல வியாதியஸ்தர்கள் பூண்டை உபயோகிக்ககூடாது.
1. பக்காவாததிற்கு நல்லது. இதை வேகவைத்து வைகொப்பளித்தால் பல்வலி நீங்கி பற்கள் உறுதிப்படும். நவாச்சாரத்துடன் கலந்து வேன்குஷ்டத்திற்கு பத்துப் போட்டால் அது குணமாகும்.
2. பல தண்ணீர்களை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பூண்டு சாப்பிட்டால் போதும். அந்தத் தண்ணீரால் எந்த தீமையும் ஏற்படாது.
3. தேள், பின்பு கடித்து விட்டால் பூண்டைத் தட்டி கடிவாயில் பத்துப் போட்டால் குணமாகி விடும்.

2. மருதோன்றி இலை

வயிற்றுவலி, தலைவலி நீங்க
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு தலைவலிக்குமானால் மருதொன்றியை அரைத்து தலைக்கு பத்து போடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் ஆணையால் இது நிச்சயம் பலன் தரும் என்றும் கூறுவார்கள்.

3. அத்திப்பழம்

உடல் அழகு பெற
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

4. அதிமதுரம்

தொண்டைவலி நீங்க
பால்குடி பருவத்தில் குழந்தைக்கு தொண்டையில் ஒருவித அடைப்பு போன்ற வியாதி ஏற்படும். அதைப் போக்குவதற்காக தாய்மார்கள் அரபிய நாட்டில் குழந்தையின் வாயில் விரலை விட்டு அழுத்துவார்கள். (நம் நாட்டிலும் சில இடங்களில் இப்படி செய்வதுண்டு) இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இது மிகவும் தீங்கானது என்பதை உணர்ந்து “தங்களுடைய குழந்தைகளுக்கு தொண்டை வியாதி ஏற்பட்டால் விரல்விட்டு அழுத்தி வேதனை செய்யாதீர்கள். அதற்குப் பகரமாக அதிமதுரக்குச்சியை உபயோகப்படுத்துங்கள்” என்று அருளிய ஹதீஸை அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மாதத்தீட்டு ஒழுங்காக வர
சில பெண்களுக்கு சரியாக மாதாமாதம் தீட்டு வராமல் கஷ்டப்படுவார்கள். அவ்வாறே சில பெண்கள் தீட்டுக்காலத்தில் வயிற்று வழியால் சிரமப்படுவார்கள். அப்போது அதிமதுரக்குச்சியைச் சாப்பிட்டு வந்தால் தீட்டு சரியாக வர ஆரம்பித்து விடும். வயிற்று வழியும் நீங்கி விடும்.

5. முள்ளங்கி.!

பசி உண்டாக
முள்ளங்கியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
1. தாதுபலம் மிகப்பலமாக இருக்கும்.
2. கிட்னியில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல வலுவேட்படுத்தும்.
4. முடி உதிர்வதைத் தடுத்து அது நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும்.
6. முள்ளங்கியைத் தட்டி தேள், பாம்பின் கடிவாயில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி விடும்.
7. இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.
8. முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
9. முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்து லேகியமாக்கி வைத்துக்கொண்டு திமமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெறுவதற்கு இதைவிடச் சிறந்த மருந்து இனியொன்று இல்லை.

6. மாதுளம்பழம்

ஷைத்தான் விரண்டோட
எந்த வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்) மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
கண்ணோய் நீங்கிட
மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது.
இரத்தம் சுத்தமாக
இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும்.
1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.
2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.
3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.

7. சுரைக்காய்

மூளை பலத்திற்கு
சுரைக்காய் சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும் அது வளர்ச்சி அடையும் ஒரு சமயம் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் “ஆயிஷா! நீ சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து) அதிகமாக சமை. அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும் தரும்” என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்.
மூத்திரம் கோளாறுகள் நீங்க
பல காய்கறிகள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிரியமாக உண்டிருக்கிரார்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம் கொண்டு பிரியமாக உண்டிருக்கிறார்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச் சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிடுவதில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அலாதிப் பிரியம் இருந்தது. சுரைக்காய் சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் மூத்திரக் கோளாறுகளை நீக்கும்.

8. வெள்ளரிக்காய்

உடல் பருமனாக
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பல மருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களை உண்ணக்கொடுத்தார்கள். அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை. பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து எனக்கு உண்ணக கொடுத்தார்கள். அதனால் சில நாட்களில் நான் பருமனாகி விட்டேன். (பொதுவாக ஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த உணவாகும்)

9. இஞ்சி, சுக்கு

ஜலதோஷம் நீங்கிட
கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சமஅளவு கலந்து மூன்று நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் பறந்து விடும்.
1. சுக்கு, வெள்ளைப்பூண்டு, குறுமிளகு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, தட்டி பொடியாக்கி தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் மூலக்குரு நீங்கி விடும். அதன் வேர் அப்படியே அடியோடு அறுந்து விடும்.
2. சுக்கைத் தட்டி பாலில் கலந்து குடிக்க வேண்டும். அதையே மேனியில் தேய்க்கவும் செய்தால் பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.
3. வாந்தி வருவது போன்று தோன்றினால் சுக்கை கொஞ்சம் வாயிலிட்டால் உடனே வாந்தி நின்று விடும்.
10. தயிர், மோர், வெண்ணை, நெய்

தாதுபுஷ்டிக்கு
பேரீச்சம்பழமும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும்.
1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விழ மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும்.
2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித் தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளிய ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

11. காளான்

கண்ணோய் குணமாகிட
ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு சமயம் சில ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வருகை தந்து “காளான் பூமியின் அம்மை நோய்” என்று முறையிட்டார்கள். அப்போது “காளான் (பாலைவனத்தில் பனூ இஸ்ராயீல் சமூகத்தாருக்கு அல்லாஹ் வழங்கிய மேலான உணவான) “மன்” எனும் உணவு வகையைச் சேர்ந்ததாகும். அதன் நீர் கன்னோயகளை குணப்படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். இதற்குப் பின்பு நான் நான்கு ஐந்து காளான்களை பிடுங்கி கசக்கி சாறெடுத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்திருந்தேன். எனது அடிமைப் பெண்ணுக்கு அடிக்கடி கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அப்போது கண்கள் வலிக்கவும் செய்தன. அதற்கு இந்த காளான் நீரை கண்ணுக்கு இட்டு வந்தேன். குணமாகி விட்டது னென்று அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

12. எள்

தொண்டை வறட்சி நீங்கிட
எள் சாப்பிட்டால் வறட்சி, கரகரப்பு நீங்கி விடும். குரல் இனிமையாக இருக்கும்
1. எள்ளுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை சுறுசுறுப்படையும்.
2. நரம்புத்தளர்ச்சி நீங்கி பலம் பெரும், மேனி மினுமினுப்பாக இருக்கும்.
3. முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர்ச்சி அடையும்.
4. நல்லெண்ணையை உணவில் ஊற்றிச் சாப்பிட்டால் குடல் புண்களை ஆற்றும். உடல் உஷ்ணத்தை தனித்து விடும்.
5. கர்ப்பம் தரிக்காதிருக்க எள் கைகண்ட மருந்தாகும். உடலுறவு கொண்ட பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் எள்ளும் சர்க்கரையும் சேர்த்து (எள்ளுருண்டை) சாப்பிட்டால் கர்ப்பறையில் சேர்ந்துள்ள விந்தின் ஜீவா அணுக்களை கலைத்து விடும். அதனால் கருத்தரிக்க மாட்டாது. மேலும் உடலுறவு கொள்ளும் போது ஆண் உறுப்பில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு உறவு கொண்டாலும் கருத்தரிக்காது.

13. திராட்சைப்பழம்

இரத்தம் சுத்தியாக
திராட்சைப்பழம் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். உடலில் பலமும் தைரியமும் ஏற்படும். உடலில் சதைப்பிடிப்பு உண்டாகும். பித்தக்கோளாறுகளைப் போக்கி விடும். ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் “திராட்சைப் பழத்தை உண்ணுங்கள். அதன் கொட்டையை வீசி எறிந்து விடுங்கள். ஏனெனில் திராட்சைப்பழம் (ஷிஃபா) நோய் நிவாரணியாகும். அதன் கொட்டை நோயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளியதாக அறிவிக்கிறார்கள்.
அழகான தோற்றத்திற்கு
உலர்ந்த திராட்சை அதிகமான நோய்களை நீக்கும் சிறந்த மருந்தும் உயர்ந்த உணவுப் போருளுமாகும். ஒரு சமயம் உலர்ந்த திராட்சையை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு அது அவர்கள் முன்னால் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம் “இதைச் சாப்பிடுங்கள். இது கோபத்தைத் தனித்து விடும். கபத்தை வெளியேற்றி விடும். நல்ல நிறத்தை உண்டு பண்ணி அழகான தோற்றத்தை தரும். வாய் நாற்றத்தை போக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கி பலப்படுத்தும்” என்று கூறினார்கள் என தமீமுத்தாரமீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

14. பழரசம்

உடல் பலத்திற்கு
அன்னை ஆயிஷா ஸித்தீக்கா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் “நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காக காலையில் பழங்களைப் பிழிந்து ஜூஸ் செய்து வைப்போம். அதை மாலையில் அவர்கள் சாப்பிடுவார்கள். அவ்வாறே மாலையில் ஜூஸ் செய்து வைப்போம், அதை அவர்கள் காலையில் சாப்பிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் காலையிலும், மாலையிலும் பழங்களை பிழிந்த பாத்திரத்தை அவசியம் கழுவி வைப்போம்” என்று கூரினார்கள். இம்முறைப் பிரகாரம் பழரசம் சாப்பிடுவது உடலுக்கு நல்ல வலுவைத் தரும். மேலும், ஒரு தடவை ஜூஸ் பிழிந்து விட்டப் பாத்திரத்தைக் கழுவிய பின்புதான் அடுத்த தடவை ஜூஸ் பிழிய வேண்டும். அதுவே சுகாதாரமாகும். கழுவாமல் வைத்திருந்தால் பழங்களிலுள்ள சர்க்கரையின் காரணம் ஈ, எறும்பு மற்றும் காற்றிலுள்ள கிருமிகள் வேகமாக அந்தப் பாத்திரத்தை தொடுகின்றன. அதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு நோய் நொடிகள் விளைகின்றன.

15. சிர்க்கா

வயிற்றுக் கோளாறுகள் நீங்க
ஆயிரக்கணக்கான வயிற்றுக் கோளாறுகளை நீக்குவதிலும், இரைப்பையை சுத்தப்படுத்தி வலுவூட்டி, ஜீரண சக்தியை விரைவில் ஏற்படுத்துவதில் சிர்க்கா வல்லதாகும். குறிப்பாக மழைக்காலத்திலும், குளிர்க்காலத்திலும் நல்ல பலனைத்தரும். கருஞ்ஜீரகத்தை தட்டி சிர்க்காவில் கலந்து தேமல், கருந்தேமல், படர்தாமரை, ஊறல் போன்ற தொல் சம்பந்தப்பட்ட வியாதிகளில் தேய்த்து வந்தால் அவை குணமாகி விடும்.
ஆறாத புண்கள் ஆற
சிர்க்காவை பஞ்சு அல்லது துணியில் நன்கு நனைத்து ஆறாத புண்கள் நீண்ட நாட்களாக உள்ள புண்கள், புரையோடிய புண்களில் கட்டினால் வேதனை, வலி, வீக்கம் நீங்கி விரைவில் புண்கள் ஆறிவிடும். புண்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தாள் அல்லது சிருமூக்கு உடைந்து இரத்தம் வடிந்தாலும் சிர்க்காவை தடவினால் இரத்தம் வடிவது நின்று விடும்.

16. கஸ்தூரி

மரத்த நிலை நீங்க
சில நேரங்களில் இரத்த ஓட்டக் குறைவால் உடல் மரத்து விடும். அப்போதும் அந்த இடத்தில் கஸ்தூரியை கொஞ்சம் தேய்த்து விட்டால் மரத்துவிட்ட நிலை நீங்கி விடும்.
1. கஸ்தூரியை உபயோகிப்பது மற்றும் நுகர்வதால் நீர்த்துப்போன விந்து கட்டிப்பட்டு தாதுபலம் பெற்று நீண்ட நேர போக உகம் பெறலாம்.
2. மயக்கமுடையவருக்கு இதை நுகரச் செய்தால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார். இதயக் கோளாறுகளும் இதனால் நீங்கிவிடும்.
3. விஷ பொருட்களை உண்டுவிட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டி விட்டாலோ கஸ்தூரியை நீரில் கலந்து கொஞ்சம் குடித்தால் கடுமை குறைந்து விஷம் இறங்கிவிடும். மேலும் இதனால் உள்ளுறுப்புகள் பழம் பெறும்.

17. ரோஜாப்பூ
குல்கந்து
நல்ல நிறமும், மலர்ந்து விரிந்த பெரிய தரமும் உள்ள ரோஜா பூக்களின் இதழ்களை ஆய்ந்து புழு பூச்சிகள் இருப்பின் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தி பின்பு ரோஜா இதழ்களின் எடையைப் போன்று மூன்று மடங்கு எடை கற்கண்டு சேர்த்து இரண்டையும் சுத்தமான கல் உரலில் கொஞ்ச கொஞ்சமாக இட்டு இடிக்க வேண்டும். நன்கு இடித்து லேகிய பக்குவமான பின்பு வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்றில் ஒரு பங்களவு சுத்தமான நல்ல தேன் ஊற்றி நன்றாக கிளறி விட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே குல்கந்து. கடைகளில் விற்பதை வாங்குவதை விட நாமே தயாரித்துக் கொள்ளும்போது சுத்தமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இன்னும் ருசி வேண்டுமெனில் கசகசாவை இளஞ்சூட்டில் லேசாக வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் போஷாக்கிற்கு உன்னதமான டானிக்காகும் இது. இதை உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. இரத்த விருத்தி ஏற்படும். உடல் நன்கு மினுமினுப்பாகவும், தளதள என்றும் இருக்கும்.

18. அரிசி

இந்திரிய உற்பத்திக்கு
அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதை நேர தாம்பத்திய சுகத்தைத்தரும். அரிசியில் தண்ணீருக்குப் பகரமாக பாலூற்றிச் சமைத்து சர்க்கரை அல்லது கல்கண்டு சேர்த்து பாயாசமாக வைத்துச் சாப்பிட்டால் முகவீக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும். மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும். அரிசி உணவு பரக்கத் பெற்ற உணவாகும். ஆதலால் அதை உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.

19 . பருப்பு

மூளை வளர்ச்சி
பருப்பை உண்ணுங்கள்: அது பரக்கத் பெற்ற உணவாகும். அதனால் மூளை வளர்ச்சியடையும். இதயத்திற்கு மிகவும் நல்லது என்றும் 70 நபிமார்கள் பருப்பின் மூலம் பரக்கத் பெற்றிருக்கிறார்கள் அவர்களில் கடைசி (நபி) ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களாவார்கள் என்றும் அதனால் கண்வலி வராது என்றும் பெருமை எனும் கெட்ட குணம் பருப்பால் நீங்கி விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். பருப்பை அதிகம் உண்டால் பார்வை மங்கிவிடும். பருப்பைத் தட்டி அம்மை புண்களுக்கு வைத்தால் அது ஆறிவிடும்.

20. கரும்பு

கரும்பு சாப்பிடுங்கள்: அது வயிறு நிறைய உண்டவனுக்கு ஜீரணத்தை கொடுக்கும்! பசித்தவனுக்கு வயிறை நிரப்பும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
1. கரும்பு தாம்பத்திய சுகத்திற்கு நல்லது, நெஞ்சுவலிக்கும் நல்லது. மேலும் அதனால் இருமல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். ஆனால் அதனால் சிறுநீர் அதிகம் போகும் என்று கிதாபுல் பரக்கத் எனும் நூலில் கூறுகிறார்கள்.
2. மருந்தே இல்லாதவருக்கும் திராட்சை, கரும்பு, ஓட்டகப்பால் ஆகிய மூன்று மருந்துகள் போதும். எல்லா நோய்களையும் இவை நீக்கிவிடும் என்று இமாம் ஷாஃபி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.

21. குங்குமப்பூ

குங்கும நிறத்தில் குழந்தை பிறந்திட
கருத்தரித்த நான்காவது மாதத்திலிருந்து இரவில் தூங்கப்போகும்போது ரோஜாப்பூ குல்கந்து கொஞ்சம் சாப்பிட பின்பு ஒரு டம்ளர் பசும்பாலில் நயம குங்குமப்பூ கொஞ்சம் இட்டு கலக்கி சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு உறங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான இடையூறுகளுமின்றி சுகப்பிரசவம் ஏற்படுவதோடு குழந்தையும் குங்குமப்பூ நிறத்தில் அழகாகவும், புஷ்டியாகவும் கொழுகொழு என்றும் இருக்கும். கண்ட கண்ட டானிக்குகளையும் மருந்துகளையும் சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதோடு பணச் செலவுகளையும் ஏராளமாகச் செய்து சிரமப்படுவதை விட இது அற்புதமும், ஆரோக்கியமும் நிறைந்த கைகண்ட மருத்துவக் குறிப்பாகும். இதேமுறைப் பிரகாரம் ஏழுநாட்களுக்கு ஆண்கள் சாப்பிட்டால் நல்ல வண்ணமாக தாது புஷ்டி உண்டாகும்.

22. தர்பூசணி பழம்

1. கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பழத்தை அதிகமாக சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை அழகாகவும், புஷ்டியாகவும் இருக்கும்.
2. இந்தப்பழம் பசி தீர்க்கும் உணவும், தாகம் தீர்க்கும் தண்ணீருமாகும். மூளைக்கு குளிர்ச்சியை கொடுத்து அதை பலப்படுத்தும். முதுகந்தண்டில் தேவையான அளவு நீரை உற்பத்தி செய்யும். வயிற்றுத் தொந்தரவுகளை நீக்கி விடும். மேலும் தாம்பத்திய சுகத்தை அதிகப்படுத்தும் என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்.

23. முந்திரிப்பழம்

இரத்த சுத்திக்கு
இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முந்திரிப்பழம் முதன்மையானதும், கைக்கண்டதுமாகும்.
1. உடல் வளர்ச்சியடைவதற்கு தேவையான கொழுப்புச்சத்து இதில் தேவையான அளவிற்கு இருக்கிறது.
2. பித்த ராகத்தை போக்குவதற்கு தனிவல்லமை இதற்குண்டு.
3. முந்திரிப்பழம் ஒன்றை சாப்பிட்டாலே உடலில் பலஹீனமும், சோம்பலும் நீங்கி சுருசுருப்பாகும்.

https://www.facebook.com/groups/baithussalam/permalink/886786941390024/






Other News
1. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
2. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
3. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
4. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
5. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
6. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
7. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
8. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
9. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
10. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
11. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
12. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
13. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
14. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
15. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
16. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
17. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
18. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
19. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
20. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
21. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
23. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
24. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
25. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
26. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
28. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
29. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
30. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..