ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பு, அமீரகம்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இந்த மடல் தங்களை உயரிய ஈமானுடனும் சீரிய உடல் நலத்துடனும் சந்திக்கட்டுமாக.... நமது பெருநாள் சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் பெருநாள் தினத்தன்று ( 24.09.2015, வியாழன்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விபரம் இடம் : லேண்ட் மார்க் ஹோட்டல் நாஸர் ஸ்கொயர் தேரா, துபை ( பனியாஸ் ஸ்கொயர் மெட்ரோ மிக அருகில் ஹபீப் பேங் மற்றும் மஸ்ஜித் அருகில்) நேரம் - மதியம் 12 முதல் 2 மணி வரை விருந்து ( ஹோட்டலில் வைத்து நடைபெறுவதால் 2 மணி வரை விருந்திற்கான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைவரும் 12 மணிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம் )
பின்னர் ஈத் சிறப்பு நிகழ்ச்சியாக குழந்தைகள் நிகழ்ச்சி, வினாடி வினா மற்றும் சகோதரர் ஹுசைன் பாஷா MBA M.Phil தயாரித்து வழங்கும் அகமும் புறமும் என்ற சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். தங்களின் வருகையை தங்களது ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடமோ அல்லது வாட்ஸ் அப் ( 055-5590487) மூலமாகவோ வரும் திங்கள் கிழமைக்குள் ( 21.09.2015) உறுதி செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சில முக்கிய குறிப்புகள் 1. வாகனத்தில் வருபவர்கள் நாஸர் ஸ்கொயரில் உள்ள கட்டிட கட்டண நிறுத்தங்களையும் ( building parking) பயன்படுத்தலாம். Gold Souq மற்றும் Fish Market லும் பார்க் செய்து விட்டு வரலாம். ஒரு வாகனத்தின் ஓட்டுனர் , பார்க்கிங் போடச் செல்லும் போது தன்னுடன் வருபவர்களை ஹோட்டலில் இறக்கி விட்டு பின்னர் பார்க்கிங் போடலாம். மெட்ரோவில் வருவது சிறந்தது 2. நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் ஆரம்பித்து முடிப்பதற்கு வசதியாக அனைவரும் சரியான நேரத்தில் வருகைத் தந்து ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். 3. பெண்களுக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4. ஹோட்டலின் மேல் தளத்திலும் தொழுகை அறை உள்ளது. 5. நிகழ்ச்சி நன்முறையில் நடைபெற துஆ செய்துக் கொள்ளுங்கள்.
6. சகோதரர் ஹுசைன் பாஷா நடத்தவுள்ள நிகழ்ச்சி குடும்பத்தினரிடையில் புரிந்துணர்வையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி. அபுதாபி, துபாய், ஷார்ஜா, ரியாத், தம்மாம், சிங்கப்பூர், குவைத், பஹ்ரைன், மஸ்கட் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் ஏர்வாடி மக்களுக்காக துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்...
https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/1075237562488254/
|