Posted by Haja Mohideen
(Hajas) on 10/18/2015 2:27:01 AM
|
|||
தூது ஆன்லைனில் வெளியாகியுள்ள லெப்பைவளவுத் தெரு சகோதரர் தம்பி உதுமான் தவ்ஃபீக் (OK நகர்) அவர்களின் கட்டுரை. மாஷாஅல்லாஹ்! தம்பி தவ்ஃபீகுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும். *** கட்டுரை *** ""இந்தியா எனும் கூட்டுக் குடும்பம்"" – உதுமான் தவ்ஃபீக் - இந்தியா ஒட்டுமொத்த உலகிற்கும் திறமை வாய்ந்த பணியாளர்களையும் தொழில் முனைவர்களையும் அளிக்கும் வளமான நாடு. வேறு வார்த்தைகளில் வர்ணிக்க வேண்டும் என்றால் பல உள்வலத் திறமைகளையும் பல சமூகங்களையும் அடக்கிய ஒரு கூட்டுக் குடும்பம். ஒரு கூட்டுக் குடும்பம் சிறந்த வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கடமையான உழைப்பை உழைத்தே தீர வேண்டும். சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை யும் கண்ணியத்தையும் அளித்தல் வேண்டும். சிறந்த குடும்ப உறுப்பினரின் மீது பிற உறுப்பினர்கள் பொறாமை கொள்ளவோ அவரின் உரிமை மற்றும் உடமையை பறித்தல் கூடாது. இவ்வாறு செய்வதால் அந்த குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாய் அமையும் . இது போல் அமைந்தால் மட்டும் தான் இந்தியா எனும் கூட்டுக் குடும்பம் சிறந்த வளர்ச்சியை அடைய முடியும். ஆனால் நம் நாட்டிலோ நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மத துவேஷ கருத்துக்களை விதைக்கும் சங்க பரிவார இந்துவ வாதிகளால் நம் நாடு நூறு ஆண்டுகள் பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உதாரணமாக உத்திர பிரதேச மாநில டாத்திரியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக பொய் கூறி ஒரு முஸ்லிம் குடும்பத்தை தாக்கி அஹ்லாக் என்ற முதியவரை கொலை செய்தது பாஸிச கும்பல். அஹ்லாகின் மகன் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இது மட்டுமல்லாமல் 2006 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் தன் நிலத்தின் உரிமையை கேட்ட சுரோகா என்ற பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டு கொலை செய்ய பட்டனர் . மேலும் கூற வேண்டும் என்றால் இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் சேக் போன்ற பல அப்பாவி மக்களை பட்டியலிடலாம். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பாதிப்பை இன்னும் வரை உணர வில்லை என்பதே மேலும் வேதனை தருகிறது. பொதுவாக சிறந்த எழுத்தாளர்கள் தங்களுக்கு கொடுங்கோள் ஆட்சியாளர்களால் வழங்கப்படும் சலுகைகளை மறுத்தாக வரலாற்றில் படித்திருக்கிறோம் . அதை அசோக் வாஜ்பாயின் செயலால் நாம் இன்று காண்கிறோம். உண்மையில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு இந்துக்கள் மீதோ இந்து மதத்தின் மீதோ பாசம் கிடையாது சேஷமுத்திரம் கலவரத்தின் போது கொழுத்தப்பட்ட தேர் யாருக்கு சொந்தமானது? அதில் இருந்ததும் இந்து தேய்வ சிலைகள் அல்லவா?! அவர்களுக்கு தேவை வர்ணாசிரம் மட்டுமே என்பது தான் உண்மை. இன்று பசுவிற்கு கோசம் போடும் கூட்டம் டெல்லியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சப்ரடர்ஜுங் மருத்துவமனையின் தவறான பரிசோதனையால் உயிர் இழந்த சிறுவன் அமன் சர்மா என்ற மனித உயிருக்கு கோசம் போடதது ஏன்? அநீதி இழைத்து பா ஜ கா அரசு என்றதாலா… இன்று “மத சக்கிப்பு தன்மை ” வேண்டும் என்று கூறும் ராஜ்நாத்சிங் மத துவேஷத்தை பேச்சில் பரப்பும் பா ஜ க MP களின் நாவை முதலில் கட்டுபடுத்தட்டும் இந்திய கூட்டுக் குடும்பம் வளர்ச்சியடைய முதலில் தேவை “மத சக்கிப்பு தன்மை ” அல்ல மத வெறி பிடித்த RSS க்கு மனித தன்மை முதல் தேவை. அது கிடைக்கும் வரை அவர்கள் உடலால் மட்டும் தான் மனிதர்கள். மனிதனை மதம் என்ற கண் கொண்டு பாராமல். இறைவனின் படைப்பு என்றும் பல உறவுகள் என்றும் நாம் காணும் போது இந்திய கூட்டுக் குடும்பத்தில் வளர்ச்சி வானலாவ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |