Posted by S Peer Mohamed
(peer) on 12/4/2015 11:33:27 PM
|
|||
மதரசாக்களில் தீவிரவாதம் இல்லை மனிதநேயம் தான் போதிக்கபடுகிறது என்பதை சாட்சியம் பகிரும் காட்சிகள்… சென்னை பிலாலியா அரபி மதரஸா மாணவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக உணவுகள் தயாரித்து பாதிக்கபட்ட சென்னை மக்களுக்கு வினியோகிக்கும் காட்சி..
எங்களுக்கு பிடித்தது அசைவம்தான் என்றாலும் அசைவம் பிடிக்காதவர்களுக்கும் உதவி சென்று சேர அவர்களின் உணவுஉரிமையை மதித்து சைவத்திலும் பிரியாணியை சுவையாய் செய்துகொடுத்த மாண்பாளர்களுக்கு என் பாராட்டுகள்.
மீட்பு பணியில் நம் சொந்தங்கள்! சென்னை வெள்ள நிவாரன பணியில் நம் சமூகத்தினர் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதில் TNTJ, Popular Front, SDPI, TMMK, MMK ஆகிய கட்சி, இயக்க செந்தங்களுடன் நம் சமூக மக்கள் பொதுமக்களுக்கு தேவையான ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றனர்.
முஸ்லிம்களின் உதவியை கண்டு மெய்சிலிர்த்து பாராட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா!
அரசு நிறுவனங்களை மிஞ்சும் விதத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சென்னை மக்களுக்காக நிவாரண பணிகள் ஆற்றி வருகின்றனர். இஸ்லாமிய அமைப்புகளையும் அதன் தொண்டர்களையும் பொறுத்தவரை . யாருடைய பாராட்டையும் எதிர்பார்த்து அறபணிகளை செய்வதில்லை தங்களை படைத்த இறைவனுக்கு அஞ்சியும் அவனிடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்துமே முஸ்லிம் மீட்பணிகள் உட்பட அனைத்து நல்லறங்களையும் செய்கின்றனர் இன்று தமிழக முதல்அவர்கள் விடுத்துள்ள செய்தி ஒன்று ஜெயாபிளஸ் தொலைகாட்வியில் ஒளிபரப்பு செய்யபட்டது. அதில் தன்னலம் மறந்து மீட்பு பணியில் இறங்கியுள்ள இஸ்லாமிய அமைப்புகளையும் கட்சிகளையும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |