Posted by S Peer Mohamed
(peer) on 12/22/2015 2:10:41 AM
|
|||
பழனிபாபா ஹாஜா முகைதீன் அன்பிற்கினிய சகோதரர். சிறு வயதில் சென்னையில் பேக் கம்பேனியில் வேலை செய்தவர் . சென்னையை முடித்து விட்டு ஏர்வாடி வந்து இங்கும் அதே தொழிலை தொடர்ந்தவர். பழனி பாபாவின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது முகநூல் பக்கத்தில் பழனிபாபா ஹாஜா முகைதீன் என வைத்துக் கொண்டவர்.பழனி பாபா பாசரை என்று வைத்து பல கூட்டங்கள் நடத்தி உள்ளார். முதலில் சற்று வேகமாக முகநூலில் பதிவுகள் இட்டாலும் சமீபகாலம் சற்று ஒதுங்கி இருந்தவர். வள்ளியூரில் கன்கார்டியா ஸ்கூல் அருகில் நமது ஊர் சகோதரர் ICSமுகைதீன் அவர்களிடம் சிறிது நாட்கள் வேலை செய்து விட்டு .சொந்தமாக கடை வைக்க என்னி வேலையை விட்டு விட்டு கடை தேடிக்கொண்டு இருந்தார்.சரியான கடை கிடைக்காததால் .கடை கிடைக்கும் வரை(கடந்த 10 நாட்களாக) ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் .
நேற்று இரவு 8மணி அளவில் பாச்சா ஹோட்டலில் டீ குடித்து விட்டு வெளியே வரும் போது தம்பி பழனிபாபா ஹாஜா முகைதீன் அங்கு வந்தார் . அவர் காக்கி சட்டை போட்டு இருந்ததால் என்னடே இது என கேட்டேன் ,இனி யாரிடமும் வேலைக்கு போகும் எண்ணம் இல்லங்க,அப்படி போனாலும் சொந்தமாதான் பார்ப்பேன் என கூறிசென்றார்.
ஆனால் மாலை 7.50ல் இருந்தே போலீஸ் வாகனம் கண்டி ஸ்டோர் அருகில் வந்து நின்றது.பின் நான் பாச்சா ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டு 8.50க்கு மீண்டும் IOB வந்த போது வரிசையாக போலீஸ் ஜீப்பும் ,வேனும் தெற்கு பக்கம் செல்கிறது.இன்று வைகுண்ட ஏகாதேசி ஆதனால போலீஸ் போகுது என சொல்லிக் கொண்டு இருக்கும் போது(10.10pm) நாகர் கோவிலில் இருந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் போண் செய்து ஏர்வாடியில் ஏதோ மர்டராமே என விசாரித்தார் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என கூறினேன். அதன் பின்னர் ஒவ்வொருவராகாக போண் செய்து கேட்கும் போது தான் விபரம் தெரிய வந்தது .உடனே நன்பர்களுடன் கொலை நடந்த இடத்துக்கு விரைந்தோம். TVS பார்ம் அருகே காந்தி நகர் செல்லும் பாதையில் போலீஸ் அதிரடிப்படை குவிக்கப்பட்டு யாரும் போகாதவாறு தடுத்துக் கொண்டு இருந்தனர் .பின்னர் எல்லோரும் சத்தம் போட்டு சண்டை போட்ட பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டோம்.
இந்த கொலையில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றது.போலீஸ் உள்ளூர்காரர்கள் மற்றும் இயக்கங்களிடம் எதுவும் சொல்லவில்லை.நான்குனேரி ,வள்ளியூர் போன்ற இடங்களில் ஓர் சம்பவம் நடந்தாலும் உடனே தமுமுக ஆம்லன்ஸை அழைக்கும் போலீஸ் இன்று அவர்களிடம் எதுவும் கூறாமல் ,எங்கிருந்தோ ஒரு தகர டப்பா போல இருந்த ஆம்னி யை அழைத்து இருக்கின்றார்கள் ,அந்த வாகனத்தில் முன்புறம்,பின்புறம் நம்பர் பிளட்கள் கூட கிடையாது ,பின்புறக் கதவை கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது .இப்படி ஒரு வாகனத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
சமீபத்தில் பொத்தையடியில் இந்து முன்னனியை சேர்ந்தவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சகோதரர் ஹாஜா மற்றும் வேறு ஒரு சகோதரரின் பெயரையும் சேர்க்க ஏர்வாடி போலீஸ் முயற்ச்சி எடுத்ததாகவும் தெரிய வருகின்றது.
அமைதிப் பூங்காவாக திகழும் ஏர்வாடியை தீவிரவாதிகளின் கூடாரமாக சித்தரிக்க காவிகளுடன் காவல்துறையும் கைகோற்கின்றதோ? அதன் விளைவுதான் சகோதரர் ஹாஜாவின் கொலையோ? Hameed Hamsha MA / Facebook |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |