இரவு பொருட்களை எல்லாம் pack செய்து அனுப்ப நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது .
காலையில் ஷூரா செய்தபடி பஜ்ர் தொழுகையை ஜமாத்தோடு நிறைவேற்றி விட்டு இறைவனின் கிருபை கொண்டு பயணத்தை இனிதே தொடங்கினோம் .
போகின்ற வழியில் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகவே , சற்று நேரம் பிடிக்கவே மீண்டும் பயணத்தை தொடங்கினோம்.
மதியத்திற்கு பின் டோக்கன் கொடுக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் ACE டிரஸ்ட் மற்றும் ஈமான் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்களை விநியோகிக்க சென்றோம் .
இரண்டாவது கிராமத்தில் பொருள் கொடுத்து முடித்த பின் வாகனத்தில் ஏறி கிளம்ப தயாராக இருந்தோம்.
வாகனத்தை நோக்கி வயதான இரு கால்கள் நடந்து வந்தது . வாகனத்தை நெருங்கிய அந்த முதியவர் மனதார கூறினார் அய்யா ! ரொம்ப ரொம்ப நன்றியா , நீங்கள் நல்லா இருக்கனும் .
ஆம் அந்த ஒரு வார்த்தை அன்றைய அனைத்து களைப்பையும் ஒரு நொடியில் போக்கி விட்டது .
நிச்சயமாக இதற்க்குகாக உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் அந்த மக்களின் தூஆ இருகின்றது !
உதவிய உள்ளங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக !
|