Posted by S Peer Mohamed
(peer) on 12/25/2015 2:25:00 AM
|
|||
கடந்த 21.12.2015 திங்கள் கிழமை இரவு ஏர்வாடி-காந்திநகரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கயவர்களால் அநியாயமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சகோதரர் ஹாஜா முஹைதீன் ஜனாஸா இன்று 25.12.2015 காலை 9.20மணி அளவில் ஏர்வாடி கொண்டு வரப்பட்டது, ஏர்வாடி அரசினர் மேல் நிலை பள்ளி முன்பு ஜானசா வருகைக்காக நமது சகோதரர்கள் கூடி இருந்தனர், அங்கிருந்து காஜா முஹைதீன் ஜனாஸா ஊருவலமாக தக்பீர்,கலீமா மற்றும் ஸகாதா முழுங்க ஏர்வாடி பஸ் திரும்பும் வழியாக திரும்பி மூன்றாவது தெருவில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஒரு சில நிமிடங்கள் உறவினர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்பு ஏர்வாடி இரண்டாவது தெரு மேல முஹல்லம் பள்ளி வாசல் முன்பு அணைத்து சகோதரர்களின் பார்வைக்காக சுமார் ஒரு மணி நேரம் வைக்கபட்டு பின்னர் பள்ளியினுள் எடுத்து செல்லப்பட்டு அங்கு சகோதரர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் இரங்கல் தெரிவிக்கும் வகையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசகங்கள் தெரிவித்து பின்பு சகோதரர் தெஹ்லான் பாகவி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திவைத்து பின்பு சகோதரர் இம்தாதி அவர்கள் துவா ஓதியா பின்பு அருகில் மேலமுஹல்லம் கபுர்ஸ்தான் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் (விதைக்கப்பட்டது) செய்யப்பட்டது. பின்பு சகோதரர் ஜவகிருல்லாஹ் அவர்களின் ஒரு சிறிய குர்ஆன் வசனம் மற்றும் அதன் தமிழாக்கம் //வல் அஸ்ர் ஹாஜா முஹைதீன் ஒரு வரலாறு ( சரித்திரம் ) ஏர்வாடி மக்கள் மனதில் என்றென்றும் சஹீத் காஜா முஹைதீன் மறக்கவே முடியாது அவருக்காகவும் அவருடைய குடும்பத்தார்காகவும் துவா செய்யுங்கள் சகோதர சகோதரிகளே....
2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |