Posted by S Peer Mohamed
(peer) on 12/27/2015 6:14:58 AM
|
|||
75% இஸ்லாமிய மக்கள் வாழும் ஏர்வாடியில் இந்து முன்னணி ஆரம்பிக்கப்படுகிறது அருகே உள்ள கோவில் ரத வாசல் பொத்தயாடி இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு RSS ல் இணைக்கப்படுகின்றனர் 75% முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்கள் கொண்ட ஏர்வாடியில் இந்து முன்னணி தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு முத்துராமனால் சரஸ்வதி பூஜை பெயரில் முஸ்லிம் தெருக்களில் ஆட்டோ ஊர்வலம் நடத்தப்பட்டு அச்சமூட்டப்படுகிறது. அந்த நேரத்தில் குமரி மாவட்ட பாஜக எம் பி பொன் ராதா கிருஷ்ணனின் உறவினர் ஜவஹர் பணியமர்த்தப்பட்டு ஆட்டோ ஓட்டுனர் முத்துராமனை ரவுடியாக வளர விடுகிறார் அப்போது காவலர்கள் உதவியுடன் ஏர்வாடி முஸ்லிம் இளைஞர் அசன் ரபீக் சூரயடி எனும் ஊரில் கொல்லப்பட்டு கிணற்றில் சடலம் சிதைக்கப்ட்டு மிதக்கிறது கடைசியில் அனாதை பிணம் என்று போலீசாரால் எரியூட்டப்படுகிறது பின்னர் மக்கள் அசன் ரபீக் காணவில்லை என கூறி புகாரளிக்க அந்த அனாதை பிணம்தான் ரபீக் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சமீபத்தில் கிறிஸ்தவ நாடார் தெருவில் இந்து நாடார்கள் விநாயகர் சிலை வைத்து வழிபடும் தகராறில் தடையை மீறி பாஜக போலீஸ் உதவியுடன் முத்துராமன் விநாயகர் ஊர்வலம் வலுக்கடாடாயமாக முஸ்லிம் கிறித்தவ தெருக்களில் கொண்டு செல்லப்படுகிறது பின் சறிது நாட்களில் முத்துராமன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு உயிர் பிழைக்கிறார் போலீஸ் மக்களுக்குள் மோதல் ஏற்படுத்த உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் விடுகிறது பின் 2 மாதங்கள் கழித்து கிறிஸ்துமஸ் சாண்டா ஊர்வலத்தில் முத்துராமன் மற்றும் இந்து முன்னணியினர் கிறிஸ்தவ மக்களை தாக்கி எஸ் பி வந்து பேச்சுவார்த்தை நடத்தும் போது குமரி மாவட்ட பாஜக வினர் ஒரு வேனில் வந்து ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பின் அங்கு ஆட்டோவில் வந்த காஜா என்ற வாலிபரை கைக்குழந்தையுடன் இளம் பெண்னை சவாரி போகவேண்டும் என அழைத்து வந்து சாந்தி நகர் அருகே அரிவாளால் சராமாரியாக வெட்டப்பட்டு இளம் பெண்னுடன் தப்பி செல்கின்றனர் போலீஸ் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஆம்புலன்ஸ் இல்லாமல் தனியார் வேனில் காஜா வின் பிரேதத்தை அப்புறப்படுத்தி காஜாவின் பெற்றோருக்கு விபத்தில் இறந்துவிட்டார் என தகவல் அளிக்கிறது. கொதித்தெழுந்த ஊர் அனைத்து சமுதாய பொது மக்கள் சங்பரிவார் RSS அமைப்பினருடன் அசம்பாவித சம்பவங்களுக்கு துணை போகும் காவல்துறைக்கு எதிராக பிரேதத்தை வாங்காமல் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கடையடைப்பு போராட்டம். இன்று அதிமுக திமுக மதிமுக நாம் தமிழர் விசிக மமக எஸ்டிபிஐ சிபிஎம் போன்ற கட்சி மற்றும் ஏர்வாடி முஸ்லிம் கிறித்தவ இந்து பொதுமக்கள் சார்பாக 5000 பெண்கள் மற்றும் 4000 ஆண்களுடன் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும் சங்பரிவார கும்பல்களை தடை செய்யவும் கோரி உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக சில மர்ம நபர்கள் மற்றும் காவல்துறை சூழ்சிக்கு பலியான மக்கள் சாஜா வின் மரணத்தில் ஒன்றினைந்தது மெய்சிலிர்க்க வைத்தது மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய முத்துராமன் ரமேஸ் ஜோதி மணி என்ற மணிஜீ செந்தில் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க சர்வ கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது மேலும் நாளை இந்த பிரச்சினை தொடர்பான ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள திருமாவனவன் வைகோ சீமான் ஆகியோர் நெல்லை மேலப்பாளையம் வருகின்றனர் இதே ஏர்வாடி காவல் நிலையத்தில்தான் நெல்லை மாவீரர் கராத்தே செல்வின் அவர்களின் முதல் வழக்கும் பதிவானது தமிழகத்தில் புகழ்பெற்ற காவலர்களான திரு செந்தில்குமார் திரு சாம்சன் ஆகியோரும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது Thanks: Facebook / Saravanan Tamil |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |