Posted by S Peer Mohamed
(peer) on 12/28/2015 12:12:59 AM
|
|||
இவரது நேர்மை: இவர் கடந்த 10 தினங்களாகத்தான் ஆட்டோ ஓட்டிவந்தர் அதனால் வழக்கமான வாடிக்கையாளர்கள் இவருக்கு கிடையாது. ஒருமுறை மற்றொரு ஆட்டோ டிரைவருக்கு அவரது வாடிக்கையாளரிடமிருந்து போன் வந்தது. அவர் வர முடியாததால் வேறொரு டிரைவரை அனுப்புவதாக கூறி காஜா முகைதீனை அனுப்பி வைத்தார். காஜா முகைதீனை கண்ட வாடிக்கையாளார்..”தம்பி நீ எப்போதிலிரிந்து ஆட்டோ ஓட்டுகிறாய்? நீ ஆட்டோ ஓட்டுவது எனக்குத் தெரியாது. உனது நம்பரை கொடு, இனிமேல் தேவைப்படும் போது நான் உன்னையையே கூப்பிடுகின்றேன்” என்றார் அதற்கு காஜா முகைதீன் கூறினார். “நீங்கள் என்னை அனுப்பிய எனது நண்பரின் வாடிக்கையாளர். உங்களிடம் நான் எனது நம்பரைத் தருவது சரியல்ல. தேவைப்படும்போது அவரையே கூப்பிடுங்கள். அவர் அனுப்பினால் நான் வருகிறேன்”
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்கள்; இதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன)?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்" என்று கூறினார்கள். (ஆதாரம் புகாரி) காஜா முகைதீனின் நன்னடத்தைக்கு ஆயிரக்கணக்கில் திரண்ட ஏர்வாடி ஊர்மக்களே சாட்சி. இது வரை ஏர்வாடியில் யாருடைய மரணத்திற்கும் இந்தளவு மக்கள் திரண்டதில்லை... காண்க வீடியோ:
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |