காலை தினத்தந்தியில்.... காஜாமைதீன் கொலை வழக்கு தொடர்பாக ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் தனிப்படை போலீசார் சிலரைப் பிடித்து தொடர் விசாரணை நடத்தி வருவதாக, போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தகவல்: தினத்தந்தி ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 27, 2015
மாலைப் பத்திரிகைகளில்... காஜா மைதீனின் ஆட்டோவில் சென்ற பெண் விபச்சார அழகி என்றும், அவள் காஜாமைதீனின் ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்பவளாகவும் இருந்தாளாம். (தம்பி காஜாவோ பத்து நாட்களாகத் தான் ஆட்டோ ஓட்டினார்) அந்த விபச்சார அழகியை பிடித்து விசாரித்ததில் ஏர்வாடியைச் சார்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாம். அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்களாம். அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம், இன்று அல்லது நாளைக்குள் கொலையாளி கைது செய்யப்படலாம் என்றும், 5பேர் கொண்ட தனிப்படையிடம் 5 பேர் சிக்கியுள்ளனர் என்றும்....ஒரு செய்தி.... மூன்று லட்சத்தை நிவாரணமாக அறிவித்துவிட்டு, முதல்வர் தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று காண்பிப்பதற்காக, ஏர்வாடி மக்களை ஏமாற்றும் நாடகம் அரங்கேறுவது போல தோன்றுகிறது...
ஒருங்கிணைப்பு குழு, அனைத்து இயக்கங்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக பிரச்சனைகளை உண்டு பண்ணி சுதந்திரப் போராட்டத்தை வீரியமிழக்கச் செய்வதற்காக வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த காவல் துறை எனும் ஏவல்துறை. இந்த வேலையைத் தான் ஏர்வாடி காவல் நிலையம் + உளவுத்துறையும் தொடர்ந்து செய்து வருகிறது. அதன் விளைவாகத் தான் நாம் நமது சகோதரன் ஹாஜாவை இழந்தோம், இனியும் இந்த காவல் மற்றும் காவிகளின் சூழ்ச்சியில் இனி ஒரு உயிரைக் கூட இழக்க அனுமதிக்க மாட்டோம். அல்லாஹு அக்பர் !
எனவே இந்த பிளவுபடுத்தும் சூழ்ச்சி இனியும் தொடரக் கூடாது, ஏர்வாடி அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற ஊர் என்பதை மனதிற் கொண்டு ஏர்வாடி காவல் நிலையத்தின் காவலர்கள், அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட வேண்டும் என்பதை தமிழக முதல்வரின் தனிக்கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.
நீதியை.... நிதியைக் கொடுத்து விலைக்கு வாங்கி விட அதிகார வர்க்கம் பல வழிகளிலும் முனையும். சூழ்ச்சிக்கு இரையாகாமல் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!
- Peer Mohamed
NCHRO குழுவும் இன்று ஏர்வாடி வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வைஇட்டு விசாரித்து சென்று உள்ளார்கள், அவர்களும் நாளை தங்களது அறிக்கையை தர இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் நம் சகோதரனின் இரத்தத்தை வீணாக்க மாட்டான்.
|