Posted by S Peer Mohamed
(peer) on 12/29/2015 3:06:54 AM
|
|||
துப்புங்க விஜயகாந்த்..... துப்புங்க..... * செம்பரம்பாக்கம் ஏரியை ஏன் சொல்லாம கொள்ளாம தொறந்துவிட்டீங்கன்னு முதலமைச்சரை கேள்வி கேட்கத்துப்பில்லாத ஊடகங்களை, துப்புங்க விஜயகாந்த்..... துப்புங்க..... * வெள்ள உதவிக்கு அரசு அதிகாரிகள் வராததை கேட்க துப்பில்லாமல், உதவி செய்த இளையராஜவிடம் போயி பீப்பு பாட்டைப்பத்தி கேட்ட ஊடகங்களை நோக்கி, துப்புங்க விஜயகாந்த்..... துப்புங்க..... * கொள்ளையடிச்ச காசுல கொஞ்ச காசை செலவழிச்சு மக்களை ஏமாத்த நமக்கு நாமேன்னு வலம் வந்தவர்களை படம் புடித்து பெரிதாக காண்பித்தவர்கள், சொந்த காசுல மக்களுக்கு உதவிகள் பல செய்தவர்களை இருட்டடித்த ஊடகங்களை நோக்கி, துப்புங்க விஜயகாந்த்..... துப்புங்க..... * சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நல்லது கெட்டதை எடுத்து சொல்ல துப்பில்லாமல், நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டவர்களின் வரலாற்றை போட்டிபோட்டு மக்களுக்கு பரப்பிய ஊடகங்களை நோக்கி, துப்புங்க விஜயகாந்த்..... துப்புங்க..... * தினந்தோறும் இலங்கை கடலில் துன்பப்படும் தமிழக மீனவர்களை பற்றி மக்களுக்கு சொல்லத்துப்பில்லாமல், சினேகாவுக்கு புள்ளை பொறந்ததையும், நகைக்கடையை நயன்தாரா தொறந்துவைச்சதையும் மக்களுக்கு பரப்பிய ஊடகங்களை நோக்கி, துப்புங்க விஜயகாந்த்..... துப்புங்க..... # ஐ சப்போர்ட் ஊடகங்களை நோக்கிய தூதூதூதூ...... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |