Posted by S Peer Mohamed
(peer) on 12/31/2015 1:26:24 AM
|
|||
சரியான பாதையில் செல்கிறதா வழக்கு? கைது செய்யப்பட்டுள்ள ஏழு காவி பயங்கரவாதிகளோடு மட்டும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது அப்பட்டமான ஏமாற்று வேலையாகும். 1) முத்துராமன் தாக்கப்பட்ட பின்னர் கைக்காட்டியில் இந்துத்துவவாதிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் பழிக்குப் பழி வாங்குவது குறித்து பகிரங்கமாகப் பேசிச் சென்றனர். 2) ஆட்டோவில் ஏறி சகோதரனை சதி செய்து அழைத்துச் சென்ற அந்த பெண் குறித்து எந்தத் தகவலும் இல்லை. 3) ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெரும் புள்ளி ஒருவரை காப்பாற்றும் விதமாகவே 4) கைது செய்யப்பட்டவர்கள் அளித்துள்ள தகவல் என்ன? 5) காவல்துறையின் சில செயல்பாடுகள் குறித்த கேள்விகள் இப்படி பல கேள்விகளும், சந்தேகங்களும் இந்த கைது மற்றும் வழக்கு விஷயத்தில் தீர்க்கப்படாமல் இருப்பதால் நம்முடைய போராட்டங்களின் வீரியத்தை நாம் குறைத்துவிடக்கூடாது. எய்தவர்கள் காப்பாற்றப்பட்டு நம் சகோதரன் கொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏதோ சதி செய்கிறார்கள். ஏழு காவித் தீவிரவாதிகளை கைது செய்ததது குறித்து நம் சகோதரர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தால், ஏர்வாடி அனைத்து ஜமாத்தார்களே! இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சகோதரர்களே! குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்! அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்! - Nellai Eruvadi Sunnath Jamath
ஒப்புதல் வாக்குமூலத்தில் கதிர்வேல்சாமி, மகேஷ் என்ற இருவரும் தாங்கள் தான் காஜாவை கொன்றோம் என்று கூறியுள்ளார்கள் முத்துராமன் பிரச்சினையில் பழிவாங்க காஜாவை கொலை செய்ய மற்ற குற்றவாளிகளோடு திட்டம் தீட்டியதாகவும் ஏற்கெனவே ஒருமுறை முயன்று அதில் சூழல் சரியாக அமையாததால் காஜாவை கொல்ல முடியாமல் போனது என்றும் கூறியுள்ள இவர்கள் சம்பவத்தன்று சவாரி சென்றுவிட்டு வந்த காஜாவை காந்திநகர் அருகில் வழிமறித்து மகேஷ் டிராக்டர் பழுதாகி நிற்பதாகவும் தன்னைக் கொண்டு டிராக்டர் நிற்கும் இடத்தில் விடச்சொல்லி அழைத்துச் சென்றதாகவும் அங்கே சென்றவுடன் மகேஷ் இறங்கியதும் அங்கே தயாராக நின்ற கதிர்வேல்சாமி பின்னால் நின்று காஜாவை அரிவாளால் வெட்டியதாகவும் அவரோடு மகேஷ்ம் இரும்பு ராடால் காஜாவை தாக்கி கொன்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். பெண்ணை காஜா ஏற்றிச் சென்ற மேட்டரே வரவில்லை. சில சந்தேகங்கள் முத்துராமன் வெட்டப்பட்ட வழக்கில் குற்றவாளி(?)களிடம் பக்கம் பக்கமாக பத்து பக்கத்துக்கு மேல் தெளிவான பிரிண்டில் ஒப்புதல் வாக்குமூலம் தயார் செய்த காவல்துறை காஜா வழக்கில் வெறும் ஒன்றரை பக்கத்துக்கு ஒப்புதல் வாக்குமூலம் ஏதோ பெயருக்கு வாங்கியுள்ளது. அதுவும் சில இடங்களில் எழுத்தே விழவில்லை. பிரிண்டிங் லட்சணம் அவ்வளவு கேவலம். . தெளிவாக பிரிண்ட் போட முடியாதா இல்லை வேண்டுமென்றே வழக்கை கொலையாளிகளுக்கு சாதகமாக உருக்குலைக்கும் சூழ்ச்சியா ? #நம் ஊரின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களுக்கு இச்செய்திகளை கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் தெளிவான சீனியர் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அனைத்து விடயங்களையும் கேஸ் டிரைலுக்கு வருகிறபோது அவ்வழக்கறிஞர் வழக்காடி கேஸை நிலைநிறுத்தவேண்டும். (முழு திட்டமிடல், தான் தாக்கப்பட்டதற்கு பழி எடுக்க வேண்டும் என்பதெல்லாம் முத்துராமன் தான் இதில் முக்கியம் என்பதை அவர்கள் கொடுத்த வாக்குமூலத்திலே வந்துவிட்டது பத்திரிக்கை செய்தியாக) அப்துல் காதிர் மன்பஈ Abdul Kader Manbayee
பெற்றோர்களின் வேதனை....
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |