நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவின் கீழ் வரும் கடம்போடுவாழ்வு என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திலும் சுற்று வட்டார கிராமங்களிலும் பல நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. மேலும் நாங்குனேரி – களக்காடு சாலையும் எங்கள் கிரமத்தின் வழியாகவே செல்கிறது. கிரமத்தின் அருகில் பல பள்ளிகளும் உள்ளன.
எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில் மதுரை மேலூரைச் சேர்ந்த P.S.கிரானைட் நிறுவனர் P.S.பெரியசாமி அம்பலம் என்பவர் நிலங்கள் வாங்கியுள்ளார், அதில் 9 ஏக்கர் நிலம் சாலையின் ஒருபுறமும் 7 ஏக்கர் நிலம் சாலையின் மறுபுறமும் உள்ளது.
கடந்த 26.01.2016 அன்று P.S.கிரானைட் நிறுவனர்கள் மேற்படி நிலங்ளில் பூமிபூஜை செய்து பொக்லைன் இயந்திரங்கள், குழி தோண்டும் இயந்திரங்கள் மற்றும் இராட்சத இயந்திரங்கள் மூலம் எங்கள் கிராமமும் சுற்று வட்டார கிராமங்களும் அதிரும் படி நிலத்தில் துளையிட்டனர்.
எங்கள் ஊரைச் சேர்ந்த மக்கள் சென்று கேட்கையில் நிலத்தில் 20 அடி அழத்தின் கீழ் தோண்டி கிரானைட் கற்கள் எடுக்கும் தொழில் செய்ய போவதாக கூறினார்கள். எங்கள் கிரமத்தில் தனியார் நிறுவனம் கிரானைட் குவாரி தொழில் தொடங்க போவதாக விளம்பரமோ அல்லது அரசு சார்பில் முன்னறிவிப்போ ஏதுவும் செய்யப்படவில்லை.
கிரானைட் குவாரி நடத்தும் இடத்தின் அருகில் கடம்போடுவாழ்வு குளம், புளியங்குளம், வடுகச்சிமதில் ஆலங்குளம் ஆகிய குளங்களின் தண்ணீர் ஓடை சென்று கொண்டிருக்கிறது. அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்கள் நிரம்பி உள்ளன.
கிரானைட் குவாரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, கிராம மக்களின் வாழ்வாதாரம் முடங்கிப்போகும் பேராபத்து ஏற்படும். P.S. கிரானைட் நிறுவனத்தினர் எங்கள் கடம்போடுவாழ்வு கிரமத்தில் கிரானைட் குவாரி நடத்துவதற்காக மத்திய மாநில அரசுகளிடம் முறையான அனுமதியோ உரிமமோ பெற்றதாக தெரியவில்லை, சுற்றுச்சூழல் அமைச்சகத்திலும் முறையான அனுமதி பெற்றதாக தெரியவில்லை, தமிழ்நாடு கனிம வளத்துறையின் அனுமதியையும் பெற்றதாக தெரியவில்லை.
விதிமுறைகள் மீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ள எங்கள் கடம்போடுவாழ்வு கிராமத்தில் P.S.கிரானைட் நிறுவனத்தினர் கிரானைட் குவாரி நடத்த எந்த விதத்தில் அரசு அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள் என்பது தெரியவில்லை. ஒரு கிராமத்தின் வாழ்வு உங்கள் கையில் உள்ளது நண்பர்களே,
எங்கள் கிராமத்தின் கனிமவளம், நீர்வளம், விவசாயவளம், போன்ற இயற்கையான வளங்களை பாதுகாக்க நாங்கள் உங்களிடம் கேட்பது ஒரே ஒரு பகிர்வு (SHARE) மட்டுமே….
https://www.facebook.com/groups/170696456425726/permalink/513005085528193/
|