வாழ்த்துக்கள்...
----------------------
முதலில் ஏர்வாடி பஞ்சாயத்தின் தலைவர் ஜனாப் ஆஷாத்,துனைத்தலைவர்,மற்றும் பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பெருமை..
---------------
பக்கத்து ஊர்களின் நன்பர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏர்வாடி பஞ்சாயத்தையும் ,அவர்களின் செயல்பாடுகளையும் பற்றி அவர்கள் பேசும் போது பெருமையாக இருக்கின்றது .நமது பஞ்சாயத்து தலைவரை பற்றி இவர் போன்ற தலைவர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என அவர்கள் கூறும் போது ,ஒரு முறையில் அவர் எனக்கு சொந்தமாக்கும் என சொல்வதை விட எனது கிளாஸ்மெட் என கூறிக்கொள்வதில் பெருமையாக இருக்கும்.
சாதனை...
---------------
இவர் வந்த பின்னர் ஏர்வாடியில் சிமெண்ட்,தார் சாலைகள்,கற்கள் பதித்த தெருக்கள், புதிய குடிநீர் தொட்டிகள்,வாறுகால் என அனைத்தும் செய்தாலும் அவற்றுக்கெள்ளாம் மணிமகுடம் வைத்தாற்போல் பஞ்சாயத்தின் வருவாய்க்கென மட்டும் அல்லாமல் ஏர்வாடியின் வசதி இல்லாதவர்களும் பயன்பெறும் வண்ணம் திருமண மண்டபம் நேற்றயதினம் திறக்கப்பட்டுள்ளது. சந்தோசம். ஆண்டாண்டு காலத்திற்கும் தலைவர் ஆஸாத் அவர்களின் பெயர் நிலைத்திருக்கும் .
பிரார்த்தனை
----------------------
மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற பழமொழி போல சில மதியீனர்களின் செயலால் ஏர்வாடியில் நிறைவேறாமல் இருப்பது பஸ்ஸ்டாண்ட். ஆஸாத் அவர்களின் ஆட்சி காலத்திலேயே அதுவும் நிறைவேற இறைவனை பிரார்த்திப்போம்.
ஆதாங்கம்.
-----------------
தனிப்பட்ட முறையில் இவர் மீது எனக்கும் சில ஆதங்கங்கள் உண்டு. எங்கள் வட்டகையில் சிமெண்ட் கல் பதித்து தருவதாக கூறியது.ஆற்றுத்தண்ணீருக்கான கூடுதல் நல்லி வைத்து தருவதாக கூறியது.இவைகள் நடைபெறாமல் இருப்பதால்...
வேண்டிக்கொள்வது.
-------------------------------
பஞ்சாத்து நிர்வாகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள். மக்களால் அறியப்படல் வேண்டும். அது குடிநீர் தொட்டிகள் திறப்பு விழாவாக இருந்தாலும்,பாலங்கள்,விளக்குகள்,அல்லது நேற்று நடந்ததை போன்று திருமண மண்டப திறப்பு விழாவாக இருந்தாலும் ஏர்வாடி பொது மக்களும் அழைக்கப்பட வேண்டும்.பேஸ்புக்கில் அழைத்தோமே,என்லாம் .அது பேஸ்புக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே. அழைப்பிதழ் கொடுத்தோமே ,ஆம் அது பணக்காரங்களை மட்டுமே,உன்னை தான் நேர்ல கூப்பிட்டேனே,ஆமாம் அது நேரில் பார்க்க நேர்ந்ததால்.அப்போ என்னதான் செய்ய சொல்லுறே?
”தண்ணி பில், வீட்டு வரி செலுத்தாதவங்க நாளைக்குள் கட்டி விடவும் “ அதுக்கு ஒரு ஆள் மைக்கில் சொல்லிக்கொண்டு வாரார் இல்லையா ? அப்படி.மன்னிக்கவும் இது பொது நிகழ்ச்சி, ஏர்வாடி பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே...
மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்கள்.... வாழ்க பல்லாண்டுகள்.