Posted by S Peer Mohamed
(peer) on 2/29/2016 1:33:42 PM
|
|||
கடம்போடுவாழ்வு ஊராட்சியில் இயங்கிவரும் கிரானைட் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்யக்கோரி 26.02.2016, வெள்ளிக்கிழமை களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது நெல்லை மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கிருஷ்னன் தலைமையில், களக்காடு பேரூராட்சி தலைவர் P.C.ராஜன் தி.மு.க, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, விசிக, எஸ்.டி.பி.ஐ மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக நாங்குநேரி தொகுதி செயலாளர் நாகூர்_மீராசா அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தனது ஆதரவையும், குவாரிக்கு எதிரான தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இதில் 4 கிராமத்தை சார்ந்த பெண்கள், பொதுமக்களும், அனைத்து கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |