Posted by Haja Mohideen
(Hajas) on 4/10/2016 10:13:37 AM
|
|||
மதம் கடந்த மனிதநேயம்... கேரளாவில் ஒரு ஹிந்து கோவிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 106 பேர் பலியானதோடு, 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கேரளாவைச சேர்ந்த லூலூ குழுமத்தின் அதிபர் MA. YUSUFALI தனது வருதத்தை பகிர்ந்து கொண்டதோடு மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிட்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் இடிபாடுகளின் சேதங்கள் சீரமைக்க உடனடி உதவியாக ஒன்றரை கோடி ரூபாய கொல்லம் மாவட்ட ஆட்சியர் நிதிக்காக வழங்க தனது கேரள பிரதிநிதிக்கு அறிவுறுத்தியுள்ளார்... மதம் பார்க்காமல் மனித நேயம் சார்ந்து உதவும் யூசுபலியின் செயல் நெகிழ வைக்கிறது... https://www.facebook.com/photo.php?fbid=1082291408498014&set=gm.876509102494713&type=3&permPage=1 கொல்லம் கோவில் விபத்து: முஸ்லிம் தொழிலதிபர் 'யூசுப் அலி' ரூ. 5 கோடி உதவி..! உயிரிழந்த 110 குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம் காயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோருக்கும் தலா ரூ 50 ஆயிரம் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு ரூ 1.5 கோடி, கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான யூசுப் அலி அவர்கள், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெருமளவு மருத்துவ உதவிகளை செய்துள்ளார். உயிரிழந்த 110 குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 1.10 கோடியும், படுகாயம் அடைந்த 300 க்கும் மேற்பட்டோருக்கும் தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ 1.5 கோடியும், சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு ரூ 1.5 கோடியும் மொத்தம் ரூ 4 கோடிக்கும் மேல் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |