Posted by Haja Mohideen
(Hajas) on 4/20/2016 1:36:09 AM
|
|||
சுமார் அரை நூற்றாண்டை நெருங்கி நிற்கும் ஏர்வாடி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் இருக்கும் சீமை உடை மரங்களை அறியாதவர்கள் நமது ஊரில் யாருமே இருக்க முடியாது. நமது ஊரில் இருக்கும் சீமை உடை மரங்களில் இதைவிட பெரிய மரம், வெயில் நேரங்களில் மைதானத்தில் விளையாட வருவோர் விளையாடி முடித்து சற்று இவற்றின் அடியில் ஓய்வெடுப்பதும், மரத்தில் நடமாடும் கட்டை எறும்புகளிடம் கடிவாங்கி தேகம் வீங்கிப் போனவர்கள் நிறைய நபர்கள் உண்டு. நான்கு மரங்கள் இருந்த இடத்தில் இப்போது இரண்டு மரங்கள் இருந்து வருகிறது. சுமார் 50 வருடங்களை நெருங்கிய நிலையில், அங்கே இருக்கும் இந்த சீமை உடை மரம் உரிஞ்சிய நிலத்தடி நீரின் அளவு அளவிட முடியாதது. சீமை உடை மரங்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த காலத்திலும் இவை கம்பீரமாய் நின்று நமது மண்ணை நக்கல் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் படித்த ஆசிரியர்கள் பார்வையிலேயே இவை காலம் காலமாக இருந்து வருவது உண்மையில் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது. தாவரவியலில் "ப்ரோசோபிச் சூலிப்ளோரா" என்ற பெயரில் அழைக்கப்படும் சீமை உடை மரங்கள், மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், இதனால் இதற்க்கு வேலி காத்தான் என்ற பெயரும் வந்தது. பூமியில் சுமார் 55 மீட்டர் ஆழத்திற்க்குச் செல்லும் அதன் வேர்கள், இப்படிப்பட்ட ஒரு மரம் நமது ஊரின் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எப்படி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது? அறம் செய் பசுமை ஏர்வாடி கவனத்திற்காக...... https://www.facebook.com/groups/427861373951231/permalink/1047446555326040/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |