Posted by Haja Mohideen
(Hajas) on 6/11/2016 11:08:06 AM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரர்களின் கவனத்திற்கு ஓர் வேண்டுகோள்! புனித ரமலான் நம்மைத் தழுவிக் கொண்டிருக்கும் இச்சூழலில் அல்லாஹ்வின் இல்லமான பள்ளி வாசலில்
ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாட்டை செய்பவருக்கு ஏராளமான நற்கூலிகள் உண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சத்திய வாக்கு. நபிகளார் (ஸல்) கூறினார்கள்: நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக நாம் செலவு செய்யும் ஒவ்வொரு செலவும் அல்லாஹ்விடம் கணக்கற்ற கூலிகளை பெற்றுத் தந்து நாளை மறுமையில் நமது நண்மையின் எடையை அதிகப்படுத்தி நம்மை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சுவர்கங்களில் கொண்டு சேர்க்கும் என்பதில் எள்ளவும் ஐய்யமில்லை. எனவே நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக நமது லெப்பைவளவு பள்ளிவாசலில் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சிக்காக தாராளமாக உங்கள் பொருளாதார உதவிகளைத் தந்து உதவுங்கள் என அன்போடு உங்களை வேண்டுகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த புனித ரமலானின் எல்லா நற்பாக்கியங்களையும் அடைந்து ஈருலகிலும் மேன்மைப் பெற்ற நன்மக்களாக நம்மை ஆக்குவானாக! இப்படிக்கு: வங்கி கணக்கு எண்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |