அன்புடன் அழைக்கின்றோம்! ========================= அன்பார்ந்த முகநூல் சொந்தங்களே, சகோதர சகோதரிகளே, பாரம்பரிய மிக்க ஏர்வாடி மண்ணின் மைந்தர்களே!
நமதூர் ஏர்வாடியின் தோற்றம், சமயம், சமூகம், கலை, கல்வி, கலாச்சாரம், வியக்கத்தகும் பல்வேறு ஆளுமைகள், சரித்திர நாயகர்கள் மற்றும் கொடை வள்ளல்கள்களின் அரிய பல வரலாற்றை, இந்த தலைமுறை அறியாத பல வரலாற்றை, ஏர்வாடியின் வரலாற்றுத் தேடலை யர்பாத் எனும் பெயரில் ஆவணப்படமாக்கி அதனை வெளியிடுகின்ற நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை 09-07-2016, சனிக்கிழமை இரவு 7:00 மணியளவில், 6வது தெரு மீலாது மேடையின் முன்பு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்து சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் மண்ணின் மைந்தர்கள் இந்நிகழ்ச்சி் இனிதே நிறைவேற பிரார்த்திக்குமாறும், ஊரில் இருக்கும் தம் குடும்பத்தார்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பணிக்குமாறும் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் எனது மகன் Mohammed Aadhil ன் சார்பாகவும் என் சார்பாகவும் அன்போடு வேண்டுகிறோம்.
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டுமாக!
- Peer Mohamed
|