Posted by Haja Mohideen
(Hajas) on 9/25/2016 2:42:21 AM
|
|||
ஏர்வாடி பகுதியில் குளங்கள் வறண்டன 5 ஆயிரம் ஏக்கர் வாழை, நெற்பயிர்கள் கருகின 150 கிராம விவசாயிகள் கலக்கம் நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் இந்த ஆண்டு மழை பெய்யாததால், குளங்கள், கிணறுகள் வறண்டு தண்ணீரின்றி 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, நெற்பயிர்கள் கருகி பாழாகி வருகின்றன. கடும் வறட்சி தலை தூக்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கால்வாய் பாசனம் வற்றாத ஜவநதி ஓடும் நெல்லை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் உள்ள 150–க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியிலுள்ள திருக்குறுங்குடி பெரியகுளம், செங்குலாக்குறிச்சி குளம், வடகச்சிமதில் குளம், புலியூர் குறிச்சி குளம், திருவரஞ்சனேரி குளம், வேட்டைக்காரன் குளம், ஆலங்குளம் ஆகிய குளங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடிக்கு மேற்கே நம்பிமலையில் இருந்து நம்பியாறு கால்வாய், செங்கலாக்குறிச்சி கால்வாய் மூலமாக தண்ணீர் கிடைக்கும். 150 கிராமங்கள் இந்த தண்ணீரைக் கொண்டு திருக்குறுங்குடி முதல் ஏர்வாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 150–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை, நெல், மரவள்ளி கிழங்கு, கடலை, பயறு வகைகள், பூசணி, தடியங்காய் உள்ளிட்ட காய்களும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக பெரும்பான ஏக்கர் நிலங்களில் வாழை ரகங்களான ஏத்தன்(நேந்திரம்), ரசக்களி, செந்தொழுவன், தொழுவன், கதளி, கற்பூரவள்ளி, படத்தி, சக்கை, ரோபஸ்டோ, நாட்டு வாழைகள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். கருகி வரும் வாழை தோட்டங்கள் இந்த ஆண்டும் இப்பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையிலும், வாழைப் பழங்கள் பூ விடும் நிலையிலும் உள்ளன. கடந்த 5 மாதங்களாக மழை பெய்யாததால், குளங்களில் இருந்து குறைந்தளவு தண்ணீர் மற்றும் கிணற்றுப் பாசனங்கள் மூலம் ஓரளவு தண்ணீர் பாய்ச்சி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். விவசாயிகள் கவலை தற்போது அனைத்து குளங்கள், கிணறுகள் வறண்டு விட்டன. மழை பெய்யாத நிலையில் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, நெற்பயிர்கள் கருகி வருகின்றன. பசுமையாக காட்சி அளித்து வந்த வாழைத் தோட்டங்கள் கலையிழந்து காணப்படுகின்றன. இப்பகுதியில் கடும் வறட்சி தலைதூக்கியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/1364130720265602/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |