Posted by S Peer Mohamed
(peer) on 9/25/2016 2:33:39 PM
|
|||
அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஈமானிய மொட்டுக்களின் நான்காவது நிகழ்ச்சியாகும் இது.
ஈமானிய மொட்டுக்களின் ஒரு பகுதியாக பொதுமக்களிடையில் நீர் சேமிப்பினை வலியுறுத்தும் வகையில் “ நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி” என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. ஏர்வாடி அரசினர் ஆண்கள் பள்ளி ஆசிரியர் சகோதரர் தங்கவேல் அவர்கள் நம்பியாற்றினை என் எஸ் எஸ் மூலம் சுத்தப்படுத்த எடுத்த முயற்சிக்கும், பள்ளிக்கு புதிய வகுப்பறைகளை கொண்டு வர எடுத்த நடவடிக்கைக்கும் அவருக்கு விருது வழங்கப்பட்டது. ஏர்வாடி பஞ்சாயத்து மூலமாக பேரூராட்சி திருமண மண்டபம், சாலைகள் நிர்மாணித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததற்கும், ஊழலற்ற பஞ்சாயத்து என பத்திரிகைகளால் பாராட்டும் வகையில் செயல்பட்டதற்கும் பஞ்சாயத்து தலைவர் சகோதரர் ஆசாத் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஏர்வாடியின் வரலாற்றினை ஆய்வுகள் செய்து யர்பாத் என்ற சிறந்த ஆவணப்படத்தினை தயாரித்த சகோதரர் ஆதில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சுவனம் நமது வீடுகளில் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் மௌலவி நூஹ் மஹ்ளரி. நமது குடும்பத்தினர் அனைவரும் சுவனவாதிகளாக மாறுவதற்கான வழிமுறைகளை எளிய முறையில் தமது உரையில் விளக்கினார். கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற படிப்பினைகளை அவர் விளக்கிய விதம் அருமையாக இருந்தது. அனைத்து போட்டிகளிலும் வென்ற மொட்டுக்களுக்கு சிறப்பான பரிசுகள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. சகோதரர் மாஹின் அவர்களின் நன்றியுரையுடன் மக்களின் மனம் கவர்ந்த இரண்டு நாள் இனிய நிகழ்வுகள் நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சிக்காக குழந்தைகளை பயிற்றுவித்த மக்தப் மதரஸா ஆசிரியப் பெருமக்களும் பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு இரவு பகலாக தங்களது உடலையும் பொருளாதாரத்தினையும் வழங்கி பாடுபட்டு வெற்றி பெற உழைத்த கீழ்கண்ட சகோதர சகோதரிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
மற்றும் பெண்கள் பகுதியில் தன்னார்வலர்களாக பணியாற்றிய அகமது மதரஸா மாணவிகள் மற்றும் 4 சகோதரிகள் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |