Posted by S Peer Mohamed
(peer) on 9/25/2016 4:19:40 PM
|
|||
கோவையில் பாஜக, இந்து முன்னணி பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டம் நடத்திய வேளையில் முஸ்லிம் தலைவர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டவைகளை பொது சமூகத்தில் பதிவு செய்ய வேண்டிய தருணம் இது... மூன்று பள்ளிவாசல்களில் குண்டு வீச்சு, முஸ்லிம்கள் மீது தாக்குதல், முஸ்லிமகளின் கடைகள் சூறை, முஸ்லிம்களின் வாகனங்கள் மீது தாக்குதல் என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த நேரம் அது... அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முகநூல் முஸ்லிம் மீடியாவுக்கு Message செய்து... நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம், இதுக்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும், கோவையின் பல பகுதிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைக்க வேண்டும், அனைவரையும் கோட்டைமேட்டில் குவிய முகநூல் முஸ்லிம் மீடியாவில் செய்தி வெளியிட சொன்னார்கள். கண்டிப்பாக இதுப்போன்ற பதிவுகளை நாங்கள் வெளியிட மாட்டோம். நீங்களும் தன்னிச்சையாக எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. எந்த பாதிப்பாக இருந்தாலும் காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது முஸ்லிம் இயக்கங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று பதிலளித்தோம். முகநூலுக்கே இந்த நிலை என்றால் முஸ்லிம் இயக்கங்களுக்கு எந்த நிலை... வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது இயக்கங்களை தொடர்பு கொண்டு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்று உச்சக்கட்ட கொந்தளிப்பில் கூறியுள்ளார்கள். முதல் நாள் இரவு திட்டம் தீட்டப்பட்டு கோவை மாவட்டம் முழுவதிலிருந்தும் வன்முறைக்காக கொண்டு வரப்பட்ட பாஜக, இந்து முன்னணி, RSS, VHP, இந்து மக்கள் கட்சி, ABVP உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ இயக்கங்களின் மொத்த பலத்தின் எண்ணிக்கை ஆயிரம், ஆயிரம் பயங்கரவாதிகளின் வன்முறை வெறியாட்டத்திற்கு பதிலடி கொடுக்க முஸ்லிம் இயக்கங்கள் நினைத்திருந்தால் ஒரேயொரு சிக்னல் கொடுத்திருந்தால் போதும்... கோவை மாவட்டத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த 1 லட்சம் முஸ்லிம் இளைஞர்களும் கோவையில் மையம் கொண்டிருப்பார்கள். உணர்ச்சி கொந்தளிப்பிலுள்ள 1 லட்சம் இளைஞர்களில் எங்கேனும் சிறு தீ பொறி பற்றினாலும் கூட கோவை மாநகரமே பற்றி எரிந்திருக்கும். ஆனால் எந்த ஒரு முஸ்லிம் இயக்கங்களும் மக்களை வன்முறைக்கு வன்முறை என்ற பாதைக்கு அழைத்து செல்லவில்லை, மாறாக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தொண்டர்களை அமைதிப்படுத்தி, மக்களின் உணர்சிகளை கட்டுப்படுத்தி, காவல்துறை உயரதிகாரிகளையும், அரசு இயந்திரங்களையும் தொடர்பு கொண்டு வன்முறையை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக வலியுறுத்தியே வந்தார்கள். இந்துத்துவ பயங்கரவாதிகளால் நாம் பாதிக்கப்பட்டாலும் அதற்கு பதிலடி என்று இறங்கினால் அது இந்துத்துவாவுக்கான பதிலடியாக மட்டும் நிற்காது. பொதுச்சொத்துக்கள் பாதிக்கப்படும், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், நம் தொப்புள் கொடி இந்து உறவுகள் பாதிக்கப்படுவார்கள். காவி பயங்கரவாதிகளால் நாம் பாதிக்கப்பட்டாலும் நம்மால் நம் கொடி இந்து உறவுகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முஸ்லிம் தலைவர்கள் மிகுந்த கவனத்துடன் இருந்தார்கள். பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டு விட்டால் அது இஸ்லாம் காட்டி தந்த வழிமுறையாக இருக்காது. இஸ்லாத்திற்கு எதிரான செயலாக அமைந்து விடும். யார் ஒரு மனிதை அழிக்கிறானோ அவன் மனித சமூகத்தையே அழித்தவன் போலாவான் என்ற குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி தயவுசெய்து அமைதி காருங்கள், தயவுசெய்து பொறுமை காருங்கள் என்று அனைத்து முஸ்லிம் தலைவர்களும் தொண்டர்களையும், சமுதாய மக்களையும் அமைதிப்படுத்தினார்கள். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களை மட்டுமல்ல மனித சமூகத்தையே நேசிக்கக்கூடிய சிறந்த தலைவர்கள் என்பதனை பொது சமூகத்தில் பதிவு செய்ய வேண்டிய தருணம் இது... |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |