Posted by Haja Mohideen
(Hajas) on 10/3/2016 12:20:57 AM
|
|||
உள்ளாட்சி தேர்தல்
ஏன்டா ஊரில் மீண்டும் ஒரு இளைய சமூகத்தை கைல கொடிய புடிக்க வச்சி முஹர்ரம் என்ற பெயர்ல பேருல பண்றாங்களே அதே நினைச்சா அட இல்லைடா அப்பம் ஊர்ல சின்ன பசங்க வரை பரவி இருக்கிற குடி பழக்கத நினைச்சா அட இல்லைடா அப்பம் ஏதோ பெரிய பிரச்சனை போல நீயே சொல்லுடா ? உள்ளாட்சி தேர்தல நம்ம ஆட்களே நம்ம ஆட்களா எதிர்த்து நிக்கிறாங்கடா ஓகோ ! அப்படியா சங்கதி ஒன்னா தெருல இருந்து ஒன்பதாவது தெரு வரை , கட்டளை தெருல இருந்து லெப்பைவளவு வரை அதுக்கு இல்லைடா நம்ம சகோதரர்கள் இந்த உள்ளாட்சி தேர்தல்லயாவது அவங்களுக்குள்ள ஒரு கூட்டணி வச்சிட்டு இறங்கி இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும். அடே அதுலாம் அவங்க அவங்க விருப்பம்டா நமக்கு நம்ம ஊர்க்கு நல்லது நடந்தா சரி ஒன்னு புரிஞ்சுக்கோ நம்ம ஆறாந் தெர்ல அண்ணாவி உதுமான் அவங்களும் முஹைதீன் பிச்சை அவங்களும் போட்டியிட்டாங்க ரெண்டு பேருமே வந்து ஒட்டு கேட்டாங்க ஒருத்தர் ஜெயிச்சாங்க . ஆனா ரெண்டு பேருமே அவங்க செய்ய போறதே சொன்னாங்களே தவிர ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக்கல. அதை மாதிரி இந்த முறை எனக்கு தெரிஞ்சு 90% புதுமுகம் தான் நீ அவங்களை இந்த இயக்கம் அந்த இயக்கம்ன்னு பார்க்காதா தனி நபரா மட்டும் பாரு இவங்கள்ட என்ன திட்டம் இருக்கு இவங்க நல்லவங்களா மட்டும் பாரு ஓகேனா ஓட்டை போடு. அதே தேர்தல் நேரத்துல இவங்க அவங்களை குறை சொல்றாங்க அவங்க இவங்களே குறை சொல்றாங்க இவங்க அவங்க மானத்தை வாங்குறாங்க அவங்க இவங்க மானத்தை வாங்குறாங்க வச்சிக்கோ தயவு செஞ்சு ஒரு முஸ்லீம்க்கு போடு. ?????என்னாடா சொல்றா போட்டியிடுறது முஸ்லிம் தானே டா ? அது போட்டியிடுற வரைக்கும் என்னைக்கு தன் சகோதரன் மானத்தை வாங்கனும்ன்னு நினைச்சிட்டாங்களோ அப்பம் அந்த முஸ்லிம் என்னும் வட்டத்தை விட்டு போய்டாங்கன்னு அர்த்தம். எப்படிடா ? ஆமா ரசூலுல்லாஹ் (ஸல்) தெளிவா சொன்னங்க இந்த மாதம் (துல்ஹஜ்) எப்படி புனிதமானதோ இந்த நகரம் எப்படி புனிதமானதோ அது போல ஒரு சகோதரனுடைய மானம் புனிதமானது. அப்படிப்பட்ட மானத்துல விளையாடுவது காபாவை கேலிகூத்தா ஆக்குவது போன்று அது போன்ற சமயத்தில் வாயை மூடி இருக்கிற ஒரு சாமானிய மனுசனுக்கு போட்டுட்டு போ சரி இப்பம் ஒரு வார்ட்ல 10 முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுறாங்க ஒரு பாஜககாரன் போட்டியிடுறான் நம்ம வாக்கு சதவீதம் 90 அவனுக்கு வெறும் 10 சதவீதம் தான் ஆனா நம்ம ஆட்கள் 10 பேரும் 90 சதவீத ஓட்டை 9 சதவீதமா பிரிச்சி 1 சதவீத ஒட்டு விசயத்தில அவனை ஜெயிக்க வச்சிட்டா என்ன பண்ண ? அடே உன் சூட்சமம் எனக்கு புரிஞ்சிட்டுடா இப்பம் உனக்கு என்ன நான் ஏதாவது கட்சிகாரங்க பேரை சொல்லி அவங்க பகையை சம்பாதிக்கணும் நீ அதை பார்த்து சந்தோஷபடனும். வேண்டாம்டா எல்லா சகோதர்கள்கிட்டையும் இஹ்வானியதோடு தான் பழகுறேன் அதுக்கு வெட்டு வச்சிராதடா அப்பம் இதுக்கு தீர்வு தான் என்னாடா ? அதுக்கு தீர்வு அவங்ககிட்ட தான் கேட்கணும் . என்னடா இப்படி சொல்ற ? வேற என்னத்த சொல்ல சொல்ற ? எந்த கட்சிக்கும் நாம அறிவுரை வழங்குற அளவுக்கு அவங்க இருக்காங்கன்னு நினைச்சா கண்ணை மூடிட்டு உலகம் இருட்டுன்னு சொன்ன கதை தான். வெறும் 10 சதவீத வாக்கை வச்சி வர முடியும் என்று பாசிச சக்தி யோசிச்சி அவங்ககிட்ட ஒரு நீண்ட நெடிய திட்டம் இருக்குனா அந்த பாசிசத்தை அழிக்க நினைக்கிற நம்ம கட்சிகாரங்ககிட்டையும் ஒரு நீண்ட நெடிய திட்டம் இருக்கதானே செய்யும். அப்படி இல்லேன்னா அத்தகைய கட்சிகள்யாவும் திட்டமிடல் இல்லா கட்சிகள்னு மக்களே முடிவுக்கு வந்துருவாங்க ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன்டா நானா இயக்கமா என்றால் என்னை தூக்கி எறிந்துவிட்டு இயக்கத்தை பிடிப்பேன் இயக்கமா இஸ்லாமா என்றால் இயக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாத்தை பிடிப்பேன். இந்த நிலை என்று வருமோ அன்று வெற்றியும் வரும். சரி பார்ப்போம்டா அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுகு...... Peer Mohamed கசப்பான உண்மைகளை Mohamed Siddiq Good message https://www.facebook.com/photo.php?fbid=1232718633436258&set=gm.1373711782640829&type=3&permPage=1 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |