நன்றியுடன் விடைபெறுகிறேன் ...
கடந்த 5 ஆண்டுகளாக ஏர்வாடி பேரூராட்சியின் தலைவராக பணியாற்றி. ஏர்வாடி டவுன் பஞ்சாயத் என்கிற இந்த பக்கத்தின் வழியாக உங்களோடு வாழ்ந்த இந்த நாட்கள் என்றென்றும் மறக்கமுடியாதவை... மக்கள் என் மீது கொண்ட நம்பிக்கையை ...முழுமையாக காப்பாற்ற என்னால் முடிந்தளவு உழைத்தேன்.
எதிர்மறை சூழலிலும் நேர்மையை கடைபிடித்தேன்.. வானம் தொட முயற்சித்து கூரையையாவது தொட்டுப்பிடித்தோம். அரசியல்,மதம்,ஜாதியால் எங்கள் கவுன்சிலர்கள் பிரிந்திருந்தாலும் ஏர்வாடியின் முன்னேற்றம் என்ற கூரையின் கீழ் ஒன்றுபட்டு செயல் பட்டோம்..
ஒரே குடும்பமாய்..... .நன்றி என் கவுன்சிலர்களுக்கு! 5 ஆண்டு கால பணிகளை பத்திரிகைகள்பாராட்டின.. .T.V.க்களும்,வாட்சப்,முகநூல் பக்கங்களும், பல்வேறு ஊர்களை சார்ந்தவர்களும் பாரட்டினர். இந்த புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கும் எனது கவுன்சிலர்களுக்கும், துணைத்தலைவருக்கும், பேரூராட்சி பணியாளர்களுக்குமே சேரும்.
குறைகள் இருப்பின் அது என்னையே சாரும்.. எனக்கு வாக்களித்த பொது மக்களுக்கும், என்னை வெற்றி பெறச் செய்ய அயராது உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்... எனது இந்த பதிவு ஏர்வாடி டவுன் பஞ்சாயத் என்கிற இந்த பக்கத்தின் கடைசி பதிவு இனி இந்த பக்கத்தில் பதிவுகள் நிறுத்தப் படுகின்றன.
இனி வரும் காலங்களில் புதிதாக பொறுப்பேற்பவர்கள் புதிய பக்கம் தொடங்கி பேரூராட்சி செய்திகளை மக்கள் அறிய செய்திட வேண்டுகிறேன். மக்கள் தந்திட்ட இந்த அமானிதத்தை இறைவன் அறிய ஒரு சிறு பங்கமும் இன்றி திரும்ப ஒப்படைக்கிறேன் ....உங்கள் அனைவருக்கும் நன்றி..
நன்றியுடன் விடைபெறுகிறேன்.
https://www.facebook.com/photo.php?fbid=1784065665180997&set=a.1381105202143714.1073741829.100007327415233&type=3&permPage=1
|