கறுப்பு பணம் ஒழிந்துவிட்டது. * புதிய இந்தியா பிறந்து விட்டது. * மோடி சாதித்துவிட்டார்" * என நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே! * முதலில்,சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். * இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடிகள். * அதில்,500 மற்றும் 1000 ரூபாயில் இருக்கும் பணம் சுமார் 13 லட்சம் கோடிகள். * அதில் ,கறுப்பு பணம் 10 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். * அதாவது சுமார் 1.3 லட்சம் கோடி. அதிலும் சிலர் முன்கூட்டியே கறுப்பை வெள்ளையாக மாற்றியிருப்பார்கள். * செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், வங்கிகளில் ,அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தாக RBI தகவல் உள்ளது. * RBI இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். * ஆகவே,மீதம் உள்ள கறுப்பு பணம் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. * அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், இதிலும் சில கோடிகள், வெள்ளையாக மாறியிருக்கும். * எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், அழிக்கப்பட்ட கறுப்பு பணம் சில கோடிகள் மட்டுமே. * ஆனால்,வெளிநாடுகளில் இந்திய கறுப்பு பண முதலைகள்,பதுக்கியுள்ள பணம் 100 லட்சம் கோடிக்கும் அதிகம் இருக்கும். * நம்மூரு நத்தம் விஸ்வநாதனே, 1000 கோடியை எளிதில் குவிக்க முடிகிறது. * இந்த மாதிரி நத்தம் விஸ்வநாதன்கள், நாடு முழுக்க உண்டு. * அரசியல், சினிமா, தொழில்,பங்குச் சந்தை,ரியல் எஸ்டேட் எனப் பல வழிகளில் பணம் சேர்த்து , வரி கட்டாமல் பதுக்கிய பணம் வெளிநாட்டு வங்கிகளில், மிகப் பத்திரமாக உள்ளது. * கறுப்பு பணம் ஒழிப்பில், உண்மையிலேயே,பாஜக அரசுக்கு ,அக்கறை இருந்தால் ,இந்த 100 லட்சம் கோடியைப், பறிமுதல் செய்திருக்க வேண்டும். * ஆனால்,அதைச் செய்ய மாட்டார்கள்.செய்ய முடியாது. * காங்கரசும் செய்யாது. பாஜக வும் செய்யாது. * ஏன் ? * இவர்கள்தான்,அப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் போட,சட்டப்படி அனுமதித்தவர்கள். * அப்படிப்பட்ட பணத்தை மீட்க இயலாமல், சில கோடி பணத்தை மட்டும் அழித்துவிட்டுத்,தன்னைக் கறுப்புப் பண மீட்பராகக் காட்டிக் கொள்வது மக்களை ஏமாற்றும் செயல். * "இல்லை,இல்லை வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க, மோடி ஏதேனும் திட்டம் வைத்திருப்பார்" என நம்பினால் ,நீங்கள் இன்னும் அப்பாவியே! * வெளிநாட்டு சுவிஸ் வங்கி ஒன்று ,தங்களிடம் வங்கிக்கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை, அரசிடம் ஒப்படைத்தது. * அந்தப் பெயர்களை இன்றுவரை வெளியிட வில்லை ,மன்மோகன் அரசும்,மோடி அரசும். * பெயரையே வெளியிடாதவர்கள் எப்படி, அவர்களிடமிருந்து பணத்தை மீட்பார்கள்? * அது மட்டுமல்ல, இந்திய வங்கிகளில் 500 கோடிக்கும் அதிகமாக வாராக்கடன் வைத்துள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை அரசிடம் கேட்டது, உச்ச நீதிமன்றம். * அந்தப் பட்டியலைக் கொடுக்க மறுத்ததும் மோடி அரசுதான். * "மோடி என்ன செய்தாலும் குத்தம் சொல்வதுதான் உங்கள் வேலையா?" * என ,நீங்கள் எதிர்க்கேள்வி கேட்கக் கூடும். * நிச்சயம் அப்படி இல்லை. * தேர்தலில் வாக்களித்தபடி, விலைவாசி குறைப்பு, பெட்ரோல் விலைகள் குறைப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, நபர் ஒருவருக்கு 15லட்சம் டெபாசிட் ஆகியவற்றை செய்துகாட்டும் பட்சத்தில், நிச்சயம் மோடி மீது விமர்சனங்கள் வராது. * ஆனால் ,இதையெல்லாம் ஒருக்காலமும், மோடி அரசால் செய்ய முடியாது. * ஏனெனில் ,இங்கு உண்மையில் ஆட்சி செலுத்துவது, கார்பரேட் முதலாளிகள்தான். * "அது எப்படி? நாம மோடிக்குதானே ஓட்டு போட்டோம்? அவர்தானே பிரதமர்" என கேட்கும் அப்பாவியா நீங்கள்? * உங்களுக்கு இரு உதாரணங்கள் சொல்கிறேன். * 1. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் கம்பெனியிடம் கொடுத்தது மோடி அரசு. * அதற்கு ஊதியமாக, வசூலிக்கும் பணத்தில், கிட்டத்தட்ட 40% பணம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்படுகிறது. * அதற்குப் பதிலாக, மாணவர்களின் கல்விக்கடனில்,40 சதவீதத்தை தள்ளுபடி செய்திருக்கலாமே? * செய்தார்களா ?செய்யமாட்டார்கள். * ஏனெனில் ,மாணவர்களை விட, ரிலையன்ஸ் நலன்தான் அரசுக்கு முக்கியம். * 2. நம்ம விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் கேட்டால் ,வீட்டுப்பத்திரம், நிலப் பத்திரம் என அனைத்தையும் எடுத்து வரச் சொல்கிறது வங்கி. * ஆனால், ஆஸ்திரேலியாவில் திவால் ஆன நிலக்கரி சுரங்கம் + கம்பெனியை வாங்க, * அதானி நிறுவனத்திற்கு 6000 கோடி பணத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கிறது, SBI வங்கி. * அதானி நலன்தான், அரசுக்கு முக்கியம். * "எல்லாம் சரி, இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?" என்று கேள்வி எழுப்புகிறீர்களா? * அதற்கான பதில்: * நீங்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். மத்தவன் சொல்வதை கேட்காதீர்கள். *. இந்த சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை, சமூகத்தின் அடித்தட்டிலிருந்து,பார்க்கப் பழகுங்கள். * ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால், பயனடையப் போவது யார்? என ஆராயுங்கள். * அதற்கெல்லாம் தேச நலன்.... தேசப்பற்றி....ராணுவ தியாகம் என்று கூப்பாடு போட்டு அடித்தட்டு மக்களின் வாழ்கையை நசுக்காதீர்கள்.....
|