இந்த முறை ஊர் வந்த போது காலையில் வழக்கமாக
நடை பயிற்சி செய்யும்போது பொன்னாக்குறிச்சி குளக்கரையில் ஏர்வாடி
வள்ளியூர் சாலையில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு
குப்பைக்கிடங்காக மாறிவருவதை பார்த்து கவலை
அடைந்தேன் .
ஓடுகள் , வீட்டுக்கழிவுகள் , ரப்பர் , பனை நுங்கு குவியல்கள் ,
இப்படி எல்லாக்குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன.
ஏர்வாடி பேரூராட்சி செயல் அதிகாரியிடம் பேசினேன் .
பார்க்கவில்லை என்றார் . நீங்கள் பார்த்து விட்டு பேசுங்கள்
என்றேன் .
சில நாட்கள் கழிந்தபின் அவர் சொன்னார் ,
மாஸ்டர் மகால் அருகிலுள்ள வாய்க்காலை
தமிழக அரசு பொதுப்பணி துறை தூர்வாரி
சுத்தம் செய்தபோது அந்த கழிவு குப்பைகள் அரசு
பொதுப்பணி துறையால் பொன்னாக்குறிச்சி
குளத்தில் தவறாக கொட்டிவிட்டார்கள் என்ற அதிர்ச்சி
தகவலை சொன்னார்.
குளத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் கிணறு மற்றும்
நீர்த்தேக்க தொட்டி உள்ள நிலையில் இது சுகாதார கேடு
ஏற்படுத்தும் என்பதை அவரும் ஒத்துக்கொண்டார் .
என்றாலும் அவைகளை பேரூராட்சி ஏற்பாட்டில்
அப்புறப்படுத்தி விடுகிறோம் என்று உறுதியாக
சொன்னார். பொறுப்பாகவே அவர் பதில் அளித்தார் .
நானும் மும்பை திரும்பி விட்டேன் .
கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து குளம்
குப்பை கிடங்காக மாற்றப்படுவது குறித்து
யாருமே கவலை பட்டதாக தெரிவில்லை .
யாராவது இதை அரசின் கவனத்திற்கு கொண்டு
சென்றால் நல்லது என்பது எனது அன்பான
வேண்டுகோள் .