Posted by Haja Mohideen
(Hajas) on 12/1/2016 10:23:44 AM
|
|||
"ரேசன் கடைகளை மூடும் பணிகளை தொடங்கி விட்டனர்" ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் மோடி அரசு WTO வில் கையெழுத்திட்டு விட்டதை அம்பலப்படுத்தி கடந்த மே மாதம் மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மே பதினேழு இயக்கத்தின் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் பெருமளவில் சென்று சேர்ந்ததால், பாஜகவின் வர்த்தகத் துறை அமைச்சரவையிலிருந்து நிர்மலா சீத்தாராமன், ரேசன் கடைகளை மூட கையெழுத்திடவில்லை என பொய் அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பினார். இன்று பல ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், ரேசன் கடைகளிலும் இந்த விண்ணப்பப் படிவத்தினை மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் 10000 ரூபாய் உங்கள் Account க்கு கொடுப்போம் என்று வதந்திகளை பரப்பி விட்டு ஏமாற்றி மக்களை கூட்டம் கூட்டமாக வரிசையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். எதற்காக இந்த படிவம் கொடுக்கப்படுகிறது என்பது கூட தெரியாமல் தங்கள் ஆதார் அட்டைகளை Xerox எடுக்க மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து ஆதார் கார்டு எண்களையும் வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த படிவத்தில் Bullet Mark ல் இருக்கிற இரண்டாவது Point ன் படி, அதாவது Direct Benefit Transfer ன் மூலமாக இந்திய அரசு/மாநில அரசு பணத்தை நேரடியாக என் வங்கிக் கணக்கில் அளிக்குமாறு கோரி மக்களே எழுதிக் கொடுப்பது. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்தியாவின் ஏராளமான மக்களை பசியிலிருந்து காத்து வருவது நியாய விலைக் கடைகள்தான். Direct Benefit Transfer என்பது ரேசன் கடையில் வழங்கப்படும் அந்த நியாய விலைப் பொருட்களை நிறுத்தி விட்டு, அந்த பொருட்களுக்கான மானியத்தை உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துகிறோம். பொருட்களை நீங்கள் வெளிச் சந்தையில் முழு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்பது. இன்னும் சில காலத்தில் அரசு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு எந்த பொருளையும் வழங்காது. நம்மிடமிருந்து நாம் பயன்படுத்துகிற அனைத்துப் பொருட்களுக்கும் வரியைப் பிடுங்கிற அரசு, இந்த அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கியாக வேண்டும் என்பது நமது உரிமை. நமது உரிமையை சலுகையாக பார்க்கிற மனநிலைக்கு அரசு நம்மை தள்ளியுள்ளது. வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட உள்ள மானியமும் பொருளாதார சரிவு என்று நீலிக் கண்ணீர் விட்டு ஒருநாள் முழுமையாக நிறுத்தப்படும். அதுவும் Subject to eligibility என்ற வார்த்தைகளை கவனிக்கவும். 500, 1000 தடை என்பதன் வாயிலாக எளிய மக்களின் மீது மோடி அரசு தொடுத்த போர் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. தங்கள் இத்தனை கால சேமிப்பினை எடுத்துப் போய் வங்கிக் கணக்கில் சேர்த்த மக்களிடம் அந்த Account ல் இருக்கும் பணத்தையே காரணம் காட்டி மானியங்கள் மறுக்கப்படும். ரேசன் கடைகள் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கருவிகள், மின்சாரம், இடுபொருட்கள் போன்றவற்றின் மானியங்களும் நிறுத்தப்பட உள்ளது. தடையற்ற வெளிநாட்டு கம்பெனிகளின் இறக்குமதிக்கும் அனுமதியளித்தே WTO வில் இந்தியா கையொப்பமிட்டிருக்கிறது. அதாவது வெளிநாட்டு உணவு நிறுவனங்கள் நேரடியாக உணவுப் பொருட்களை நமது சந்தையில் இறக்குமதி செய்யும். Wallmartம், கடனை வாங்கி தூக்கில் தொங்கும் நம் விவசாயியும் ஒன்றாக போட்டி போடவேண்டுமென்று மோடியின் சமூக நீதி சொல்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கிற கவர்ச்சிகர விளம்பரங்களுக்கும், Exclusive Day by Day Offer களுக்கும் மயங்கி, மோடி அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் Cashless Transaction மூலமாக Visa காரனுக்கும், Mastercard காரனுக்கும் ஒரு Service chargeஐ செலுத்தி விட்டு நாமெல்லாம் வெளிநாட்டு Showroom களில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான் திட்டம். மண்ணெண்ணெய் இனி ரேசன் கடைகளில் வழங்கப்படாது என்றும் மானியம் Direct Benefit Transfer முறையில் தான் வழங்கப்படும் என்றும் கடந்த மாதம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். முதல்கட்டமாக 9 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த இலக்கு உணவுப் பொருட்கள்தான். இந்தியாவின் 31 சதவீத வீடுகளில் மின்சார இணைப்பு என்பது கிடையாது. அவர்கள் அனைவரும் மண்ணெண்ணெய் விளக்குகளை நம்பித்தான் வாழ்கிறார்கள். அதாவது 30 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் எதிர்காலம் மண்ணெண்ணெய் விளக்குகளில்தான் ஒளிரிக் கொண்டிருக்கிறது. ஏராளமான வீடுகளில் எரிபொருளாகவும் மண்ணெணெணெயைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தில்தான் முதல்கட்டமாக இந்திய அரசு கையை வைத்திருக்கிறது. ரேசன் கடைகளை மூடுகிறோம் என சொன்னால் மிகப் பெரிய எதிர்ப்பை மக்களிடம் சந்திக்க நேரிடும் என்பதால், Direct Benefit Transfer என்ற கவர்ச்சியான பெயரைச் சொல்லி ஏமாற்றி இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டிய மக்களை வரிசையில் நிறுத்தியிருக்கிறது. எதற்காக இந்த Form ஐ எழுதிக் கொடுக்கிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் ஏதோ பணம் வரப் போவதாக நினைத்துக் கொண்டு மக்களும் Xerox கடைகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு புரிந்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த Form வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, மக்களை வெளிநாட்டு நிறுவனங்களின் அடிமையாக மாற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசின் சதிகளை தெரிந்திருந்தும் மக்களிடம் அம்பலப்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது தொழிலாளர்களின் நண்பன் என சொல்லிக் கொள்ளும் சிபிஎம் கட்சி. 500, 1000 ரூபாய் தடை செய்யப்பட்தின் பின்னணியில் சதித் திட்டங்களை அம்பலப்படுத்தாமல், ரேசன் கடைகள் மூடப்படப் போவதையும் அம்பலப்படுத்தாமல், விவசாய மானியங்கள் நிறுத்தப்படப்போவதையும் அம்பலப்படுத்தாமல் வெறுமனே மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று போலிப் போராட்டங்களை சிபிஎம் கட்சி மற்ற எதிர்கட்சிகளோடு சேர்ந்து நடத்தி வருகிறது. Direct Benefit Transfer என்று சொல்லப்படக்கூடிய அயோக்கியத்தனத்திற்காகத் தான் ஆதார் கார்டு கொண்டுவரப்பட்டது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திருட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேசன் கடைகள் மூடப்படும் அயோக்கியத்தனத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்ட முற்போக்கு, ஜனநாயக இயக்கங்கள் தயாராக வேண்டும். மிகப் பெரிய மக்கள் விரோத நடவடிக்கையை சத்தமே இல்லாமல் மோடி கும்பல் உலக வங்கி, IMF, WTO போன்ற முதலைகளுடன் சேர்ந்து நிறைவேற்றி வருகிறது. இதை எதிர்க்காமல் Fidel castro க்கு வீரவணக்கம் மட்டும் சொல்லிவிட்டு கடந்து செல்வதால் எந்த மாற்றமும் வராது. https://www.facebook.com/groups/baithussalam/permalink/1166583930076989/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |