Posted by Haja Mohideen
(Hajas) on 12/4/2016 2:24:56 AM
|
|||
குருடனை நம்பி ஒரு கூட்டம்.... 1. முகேஷ் அம்பாணி தன் தொலை தொடர்பு நெட்ஒர்க் ஐ விரிவு படுத்தும் விதமாக கடந்த 2 வருடமாக அணைத்து இடங்களிலும் optic fibire கேபிள்கள் பதிக்கப்பட்டது.... இவற்றை அறிவித்து விட்டு முகேஷ் அம்பானி மோடியின் 500, 1000 ஓழிப்புக்கு புகழாரம் சூட்டி, JIO சிம்மின் அடுத்த கட்ட பரிமாணத்தை எடுத்து சென்றது.. இப்பொழுது கொஞ்சம் யோசித்து ஒப்பிட்டு பாருங்கள் மோடியின் செயலையும், அதற்க்கு ஏற்றார் போல் பின் வரும் முகேஷ் அம்பானியின் செயலையும்.... இப்பொழுதும் உங்களுக்கு இந்த பணப்புழக்க தட்டுப்பாடு யாருக்காக உருவாக்கப்பட்டது என்பது புரியவில்லை என்றால் ........... ? கடந்த 3 மாதத்திற்கு முன் நடந்த ஸ்பெக்ட்ரம்(2G,3G4G) ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட பணம் 14.5 லட்சம் கோடிகள்..... அதில் 4G க்கு மட்டும் எதிர் பார்க்கப்பட்டது 11 லட்சம் கோடிகள்... ஆனால் கிடைக்க பெற்றது வெறும். 65,870 கோடிகள் மட்டுமே, இதற்க்கு சொன்ன காரணம் யாரும் ஏலத்தில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது... அதே 2009ல் அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி ஆ. ராசா வால் 3G ஏலத்தில் 2.75 லட்சம் கோடிக்கு ஏலம் விடப்பட்டு அன்றைய பிரதமரிடம் சேர்க்கப்பட்டது... அதற்க்கு பிறகு தான் CAG 2G யையும் ஏலத்தில் விட்டு இருந்தால் இதே போல் தொகை கிடைத்திற்கும் என்று சொல்ல , அன்றைய எதிர் கட்சிகள், ஊடகங்கள் எல்லாம் மாபெறும் ஊழல் என்று போர்க்கொடி தூக்கின.... அதன் பிறகு நடைபெற்ற எந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்திலும் ராசாவால் கொண்டு வரப்பட்ட தொகையை விட குறைவாகவே கிடைத்திருக்கிறது.... இப்பொழுது கடைசியாக நடந்த 4G ஏலம் ( 2G.3ஜி யை விட சிறந்தது... மிகுந்த தொழில் நுட்பம் கொண்டது தான் 4G)11லட்சம் கோடிகள் கொடுத்திருக்க வேண்டியது, வெறும் 65,870 கோடிகள் மட்டுமே திரட்டியது..... மீதம் உள்ள 10.34 லட்சம் கோடிகள் பின் வாசல் வழியாக சென்றதை இந்த அரசாங்கமும், ஊடகங்களும் அப்படியே மறைத்து விட்டது... இன்றைய நிலைமையில் அனைத்து தரப்பு மக்களும் இன்டர்நெட் பயன் பாட்டிற்குள் வரவேண்டிய கட்டாய நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி கொண்டு வர, இன்னொரு பக்கம் முகேஷ் அம்பாணி ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு வட்டத்தையும் தனதாக்கி கொள்ளும் வகையில் தனது JIO 4G சிம்மையும், அதன் இலவசங்களையும் வரும் 31.3.2017 வரை நீட்டிக்கிறார்.... அரசாங்கத்தால் இன்டர்நெட் கட்டயப்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் JIO வசம் தானாக போய் விழுவார்கள்.. அதில் உள்ள MERCHANT APPம் மக்களையும், வனிகர்களையும் JIO SIM பக்கம் சாய்க்கும்்... இப்படி அனைத்து மக்களையும் JIO SIM பக்கம் திருப்பி தொலை தொடர்பு துறையில் MONOPOLY யாக முகேஷ் அம்பானி வலம் வருவார்... ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களில் MONOPOLY யாக இருக்கும் முகேஷ் அம்பாணி இனி சில்லறை வணிக துறையிலும், தொலை தொடர்பு துறையிலும் மற்றும் மறைமுகமாக வங்கி துறையிலும். MONOPOLY யாக வலம் வருவார்... இப்பொழுது சொல்லுங்கள் இந்த மோசடி அரசாங்கம் யாருக்காக வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ???? இவர்கள் எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால்?......???நீங்கள் அடிமையாவதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்பதே நிதர்சனம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |