Posted by S Peer Mohamed
(peer) on 1/4/2017 2:10:24 PM
|
|||
அஸ்ஸலாமு அலைக்கும் நமது ஏர்வாடி சகோதரர்கள் பங்கேற்ற EPL என்னும் ஈமான் கிரிக்கெட் போட்டிகள் 01/01/2017 அன்று இனிதே நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்த நிகழ்ச்சி அல் நஹ்தாவில் ஜுலைஹா மருத்துவமனை அருகில் உள்ள விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. நான்கு அணிகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு விளையாடினர். முதல் ஆட்டத்தில் சகோதரர் நைனா தலைமையிலான Deira lions அணியும் சகோதரர் ஜெய்னுல் தலைமையிலான Sharjah sharks அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய Deira Lions அணி குறிப்பிட்ட 16 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சொஹைல் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார். Sharjah Sharks அணியின் பந்து வீச்சாளர்கள் ஹாரித் மற்றும் ஜெய்னுல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பின்னர் வெற்றிக்கு தேவையான இலக்கினை நோக்கி ஆடிய Sharjah Sharks, ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றியை ஈட்டியது. 6 விக்கெட்களை இழந்து 81 ரன்களை அந்த அணி 15.1 ஓவர்களில் பெற்றது. அல்தாப் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற முதுகெலும்பாக இருந்தார். ரிஸ்வான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் சகோதரர் ஹஸன் தலைமையிலான Burdubai panthers அணியுடன் சகோதரர் ரியாஸ் தலைமையிலான Abudhabi wolves அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய Abudhabi wolves அணி குறிப்பிட்ட 16 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 96 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முஹைதீன் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். Burdubai panthers அணியின் பந்து வீச்சாளர் மீரான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். பின்னர் வெற்றிக்கு தேவையான இலக்கினை நோக்கி ஆடிய Burdubai panthers , 8 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பக்கர் சிறப்பாக ஆடி 20 ரன்கள் எடுத்தார்.Abudhabi wolves அணியின் சாஹிப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் Sharjah sharks அணியுடன் Abudhabi wolves அணி மோதியது. இந்தப் போட்டி Sharjah sharks அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் தடுப்பு காரணமாக ஒரு சார்பு போட்டியாக மாறியது. முதலில் விளையாடிய Abudhabi wolves அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 44 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதில் ஏறத்தாழ பாதி ஓட்டங்களை ( 23 ) அந்த அணியின் ருமைஸ் மட்டும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 3 வீரர்கள் ரன் அவுட் ஆக நெளஷாத் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை எடுத்தார்.
வெற்றிக்கு தேவையான 45 ஓட்டங்களை நிதானமாக விளையாடி 11 ஓவர்களில் பெற்று Sharjah sharks அணி சாம்பியன் பட்டத்தினை வென்றது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 21 ரன்களுடன் தத்தளித்த அணியினை கேப்டன் ஜெய்னுல் (15) மற்றும் அல்தாப் (16) ஆகியோர் ஆட்டமிழக்காமல் விளையாடி கரை சேர்த்தனர். இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அல்தாப் தொடர் நாயகன் விருதினை வென்றார். அபுதாபி அணிக்கான இரண்டாவது பரிசு கோப்பையினை ஈமான் செயலாளர் சகோதரர் இப்ராஹிம் வழங்கினார். முதல் பரிசுக்கான கோப்பையினை ஷார்ஜா அணிக்கு அந்தக் கோப்பையினை ஸ்பான்சர் செய்த சிட்டி கோல்ட் சார்பாக சகோதரர் ரபிக் வழங்கினார். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு, குளிர்பானம் மற்றும் டீ வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த மற்றும் ஆதரவு தந்த சகோதரர்கள் அனைவருக்கும் ஈமான் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் ஈமானின் அனைத்து பணிகளிலும் சகோதரர்கள் அனைவரும் கலந்துக் கொள்வது இன்ஷா அல்லாஹ் நமது ஏர்வாடி அணி மறுமையில் வெற்றி பெற உதவிடும். PHOTOS: http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=71_2017_Cricket-I |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |