முன்மாதிரி முஹல்லா ப்ராஜெக்ட்

Posted by Haja Mohideen (Hajas) on 1/11/2017 11:53:09 PM

முன்மாதிரி முஹல்லா ப்ராஜெக்ட்


இயக்கங்களால் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய உள்ளங்களை முஹல்லா ரீதியாக பிணைத்து இஸ்லாம் மேலோங்க எடுத்து வைக்கப்படும் முதல் படிக்கட்டு)

முன்னுரை: இப்பணி ஒட்டு மொத்தமாக உம்மத்தை மாற்றியமைக்கும் பணியே தவிர ஒட்டு போடும் பணி அல்ல 
இந்த இலட்சியத்தின் முக்கிய அம்சங்களாவன-:
1, இது சமுதாயத்தை மையமாக கொண்டது.மற்றொரு அமைப்பை உருவாக்கும் பணியல்ல 
2, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்ட அந்நிய வழிகளை உபயோகிப்பதில்லை . சமுதாயத்தின் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வது அதை பயன்படுத்துவது. இதற்காக மஸ்ஜித், மதரஸா, பைத்துல்மால் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்வது.
3, எந்த தனிப்பட்ட கொள்கைகளையும் அமைப்பையும் சாராது ஒட்டு மொத்த உம்மத்தின் நலன் கருதி செயல்படுவது. 
4, இதன் வழிமுறை தூய்மையானதாகவும் புனிதமிக்கதாகவும் இருக்கும். 
5, இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளான ஈமான் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், தாவா, இஜ்திஹாத், ஜிஹாத் போன்றவற்றிலிருந்து வலுவை பெற்றுக்கொள்வது.

செயல் திட்டம் 
பகுதி 1, திட்ட நோக்கு ஆரம்பமாக Task force அமைப்பதற்கான முயற்சிமேற்கொள்ளப்பட்டு, இதன் மூலமாக இப்பணியை செயல்படுத்த தேவையான வழிமுறைகள் ஆராயப்படும். இதில் முஹல்லாவை சேர்ந்த முஹல்லா பற்றி பரிச்சயமுள்ள சமுதாய நோக்கமிக்க உறுப்பினர்கள் பங்கு பெறுவர். முன்னோட்டமாக சமுதாய நோக்குடன் முஹல்லாவை புனரமைப்பது சம்பந்தமான விவாதங்களும் கருத்துபரிமாற்றங்களும் நடைபெறும். திட்டத்தின் இலக்கு, இலக்கை அடைவதற்கான வழிமுறை, வழிமுறையில் முன்னுரிமை வளங்களை (மனித வளம், பொருள் வளம்) அடையாளம் காண்பது முதலில் கண்டறியப்படவேண்டும்.

a, ஊழியர்களை தேர்ந்தெடுத்தல் Task force, முஹல்லாவில் உள்ள தகுதியான நபர்களை கண்டறிந்து இப்பணிக்காக ஊழியராக சேர்க்க வேண்டும். வாழ்வின் அனைத்து பிரிவிலிருந்தும் ஊழியர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும் அர்ப்பணிப்பும் தொண்டுள்ளமும் இவர்களை இணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் இப்பணியில் பங்குகொள்ளுமாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலிருந்தும் பல்வேறு கொள்கைகளிலிருந்தும் ஊழியர்கள் பங்கு பெறவேண்டும்

b. அறிஞர்களை நியமித்தல் ஊழியர்களின் ஒத்துழைப்போடு Task force சிறந்த இஸ்லாமிய அறிஞர்களை ஆலோசர்களாக நியமிக்க வேண்டும் இந்த அறிஞர்கள் பிரிவுகள் அடிப்படையில் சிந்திப்பதை (தவிர்ந்தவர்களாக) விட்டும் மேலானவர்களாக இருக்கவேண்டும் அதேநேரம் அனைத்து தரப்பு அறிஞர்களும் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

c. முஹல்லாவின் கணக்கெடுப்பு முஹல்லா பற்றி விரிவானதொரு கணக்கெடுப்பு செய்தல் ஊழியர்களின் ஆரம்பகட்டபணிகளுள் ஒன்றாக இருக்கவேண்டும். மக்கள்தொகை நெருக்கம் சமுதாயத்தின் சமூக பொருளாதார கல்வி கலாச்சார நிலைமை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும். இத்தகவல்கள் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை தெளிவாக ஊழியர்களுக்கு உணர்த்தும்

d. முன்னுரிமை வகுத்தலும், அந்தந்த முஹல்லாக்களின் நிலைமைகள் மற்றும் தேவைகள் பொறுத்து இவை செயல்படுத்தப்படும் மனித பொருள் வளங்களை உத்தேசித்து நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டம் தீட்டப்படும் e. மீள்பார்வை Task force ஊழியர்கள் அறிஞர்களின் ஒத்துழைப்போடு குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை பணியினை பரிசீலனைசெய்து தேவைப்படின் மாற்றங்கள் செய்யப்படும் மற்ற முஹல்லா அமைப்பினருடன் தொடர்பு கொள்வது கலந்துரையாடல் செய்வது இப்பரிசீலனையில் அடங்கும் மண்டல குழுவினருக்கு பணியின் முன்னேற்றம் தெரியப்படுத்தப்பட்டு தேவையான வழிகாட்டுதல்கள் பெறப்படும்.

பகுதி 2 செயல் திட்டத்திற்கான செயல்பாடுகள் 
(பரிந்துரை) 1, முஹல்லா கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கீழ்கண்டவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
a, மொத்த மக்கள் தொகை 
b, முஸ்லிம்களின் மக்கட்தொகை, மக்கள் நெருக்கம் 
c, சமூக குறிப்புகள்(முஸ்லிம்) கல்வி, வேலை, வருடவருமானம்,நில/சொத்து உரிமைகள், சுகதாரம்,திருமணம்,விவாகரத்து போன்றவை.

d, நிறுவனங்கள் (முஸ்லிம்/பொது) 
1, கல்வி, மத, சமூக கலாச்சார நிறுவனங்கள் 
2, மற்ற புராதான, வரலாற்று அமைப்புகள்.

e, முஸ்லிம் அமைப்புகள், அறிஞர்கள் மற்றும் அவர்களின் தாக்கங்கள் 
f, அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் 
g, முஸ்லிமல்லாதவர்களின் விரிவான கணக்கெடுப்பு 
1, தலித்& இதர பிற்பட்ட சமுகத்தினர்

2, வகுப்புவாத அமைப்புகள் தலைவர்கள், நிதிஉதவி, நிறுவனங்கள், தாக்கங்கள். 
h, பொருளாதார வாழ்க்கை. - விவசாயம் (நிலம்,வேலை) - தொழிற்சாலை - பணிகள் (தனியார் மற்றும் பொது) -

முஸ்லிம்களின் பங்களிப்பு 
I, வெளிநாடு வாழ் இந்தியர்கள் - முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் - முஹல்லா சீரமைப்பு - நீண்டகால திட்டத்திற்கான செயல்திட்டம்: மாதிரிப்படிவம் மக்கள் எழுச்சி/விழிப்புணர்வு திட்டம்
A, ஒற்றுமை முயற்சி முஸ்லிம்களிடையே புரிந்துணர்வையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவது சிறு பிரச்சனைகளை மறந்து ஒரே சமுதாயமாக வாழ வழிசெய்வது மார்க்கம், அறிவு, இஜ்திஹாத் இம்மூன்றையும் இம் மறுமலர்ச்சிக்கு பயன்படுத்துவது. 
B. வரலாறு இஸ்லாமிய எதிரிகளிடம் இருக்கும் வலுவான ஆயுதம். இது தனது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அறியாமல் இருப்பதும் முஸ்லிம்களின் பலவீனத்துக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் ஒரு காரணம். மதவாத சக்திகளின் சதித்திட்டங்களுக்கு துனைபோகும் வகையில் பள்ளிகளில் சொல்லிதரப்படும் வரலாறுகளில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவறாக சித்தரிக்கப்படுகிறது .இதை முறியடிப்பதற்கு முஹல்லாவை மையமாக வைத்து ஒரு நீண்டகால திட்டம் தீட்டப்படவேண்டும் இஸ்லாமிய வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம்,தத்துவம்,கலை,இலக்கியம்,கட்டிடக்கலை போன்ற துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு, இந்தியாவில் இஸ்லாம், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டுகள் போன்றவை எளிய முறையில் மக்களை கவரக்கூடிய வகையில் அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்தப்படவேண்டும் அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும் இதை பிற சமுதாயங்கள்,மதங்கள்,கலாச்சாரங்களின் பிண்ணனியில் விளக்க வேண்டும். மனுவாதிகளின் தீய கலாச்சாரங்களின் வஞ்சக வரலாறுகள்,கற்பனைக் கதைகள் குறியாக மக்களிடம் எடுத்துரைக்கப்படவேண்டும் எளிய புத்தகங்கள், ஒலி-ஒளி தயாரிப்புகள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உதவியுடன் தயாரிக்கப்படவேண்டும். அதற்காக அந்தந்த தளங்களில் இருக்கும் பிற அமைப்புகளின் உதவியையும் பெற்று கொள்ளலாம். 
C, கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் ஒவ்வொரு உள்ளூர் முஹல்லாக்களும் தங்களது முஹல்லாக்களில் படிப்பறிவின்மை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் ஊழியர்களின் உற்சாகமான பங்களிப்போடு முதியோர் பெண்கள், கல்வி படிப்பை நிறுத்தியவர்களுக்கென சிறப்பு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் அடிப்படை புத்தகங்கள், பிற கல்வி சாதனங்கள் இதற்கென தயாரிக்கப்படவேண்டும் மாலை/இரவு நேர பள்ளிகள் உழைக்கும் 
மக்களுக்கென ஏற்பாடு செய்யப்படவேண்டும். D, ஆரோக்கியமான வாழ்வு பிரச்சாரம் பொதுமக்களிடையே ஆரோக்கிய வாழ்வு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் சுகாதாரம், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி முறைகள், முதலுதவி போன்றைவகள் தெரிவிக்கப்படவேண்டும். உள்ளூரில் நிலவும் பொதுவான சுகாதாரகேடுகள் ,நோய்கள் கண்டறியப்பட்டு தடுப்பு முறை திட்டமிடப்படவேண்டும். E,கலாச்சார சீரழிவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பல கடவுள் நம்பிக்கை, மேற்கத்தேய கலாச்சாரத்தின் தீய விளைவுகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்கும் வகையில் இவை ஏற்பாடு செய்யப்படவேண்டும் பல்வேறு விதங்களில் இந்த தீய கலாச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்தின் உள்ளே வருகின்றன கல்வித் திட்டம், பொது ஊடகங்கள், இதழ்கள், நாகரீகம் போன்ற போர்வையில் இவை சமூகத்தை கெடுக்கின்றன இவற்றின் தீய விளைவுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு இந்த தீயகலாச்சாரங்களுக்கான மாற்று பரிகாரங்களும் கண்டுபிடிக்கப்படவேண்டும் 
F, இஸ்லாமிய சமூக நீதிமுறை மக்களுக்கு தெளிவாக பிரச்சாரம் செய்யப்படுவதோடு, நடைமுறையில் இந்த கொள்கைகள் செயலாக்கம் பெறவேண்டும். வசதியில் குறைந்தவர்கள் சமூகத்தில் முன்னேறி நல்லநிலையை அடைவதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படவேண்டும் நபிகளாரின் வழிமுறைகள் ஸஹாபாக்களின் நடைமுறைகளிலிருந்து பெறப்பட்ட இஸ்லாமே சமூக நீதி கொள்கைகள் சமூகத்தின் முன் வைக்கப்படவேண்டும். ஜகாத் நிதியம், பைத்துல்மால், நிவாரண நிதியகம் மற்றும் இதர தர்மநிறுவனங்கள் அறிஞர்களின் துணையுடன் நடத்தப்படவேண்டும்

3. முஹல்லா சீரமைப்பு துறைகள் 
A. முஹல்லா பாதுகாப்பு பிரிவு- இதில் உள்ளூர் இளைஞர்களும், ஆர்வமுள்ளவர்களும் அடங்குவர். முஹல்லா, மஸ்ஜித்கள், மதரஸாக்கள், அறிஞர்கள், வணிகநிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை பாதுகாப்பதற்கு பயிற்சிகள் அளிக்கப்படும் இதற்காக எந்த தியாகமும் செய்வதற்கும் தயாராக இவர்கள் இருப்பார்கள் உடற்பயிற்சி, தற்காப்பு கலைகள், ஆயுதம், ஆயுதமற்ற தாக்குதல், குழப்பநிலை மேலாண்மை, வாகனம் ஒட்டுதல் மற்றும் முதலுதவி ஆகியவற்றில் இவர்காளுக்கு பயிற்சியளிக்கப்படும்.
B. சமூக சேவை பிரிவு முஹல்லாவில் பல்வேறு நலத்திட்டங்களை இப்பிரிவு செயல்படுத்தி கண்காணிக்கும் முஹல்லாவின் பொதுவான திட்டங்களுடன் சேர்ந்து செயல்படுவதோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான தேவையான பொருள்வளங்களையும், ஆள்வளங்களையும் தரும். இதில் குறிப்பாக இளைஞர்களை பெரும்பான்மையாக உள்ளடக்கிய தன்னார்வ தொண்டர்கள் இருப்பார்கள்
C. கைத்தொழில் பயிற்சி பிரிவு சுயதொழில் தொடங்குவதற்கு வசதியாக உள்ளூரில் இருப்பவர்களுக்கு தேவையான பயிற்சிகளை இப்பிரிவு வழங்கும் பெண்கள்/குடும்பத்தலைவிகள், பயிற்சி பெற்ற/ பெறாத வேலை செய்பவர்கள், வெளிநாட்டில் வேலைக்கு முயற்சிப்பவர்கள் என தனித்தனியாக செயல் திட்டம் வகுக்கப்ப்டும் வெளிநாட்டில்/வசிக்கும் உள்நாட்டில் சகோதரர்களின் முதலீடுகளை வாங்கி இவ்வாறு பயிற்சி பெற்றவர்களை கொண்டு சிறுதொழில்/ குடிசைதொழில் தொடங்கப்படும். 
D. சட்டப்பிரிவு சிவில் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள், ஷரிஅத் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் இதில் இடம் பெறுவர் இலவச சட்ட உதவிகள் வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் முஸ்லிம் குடும்பங்கள் / சமுதாயங்கள் இடையே எழும் பிரச்சனைகள் ஷரிஅத் சட்டத்திற்குட்படு தீர்த்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிமையியல் (civil) நீதிமன்றங்களை அனுகவேண்டாம் என முஸ்லிம்கள் அறிவுறுத்தப்படுவர் உரிமையியல் நீதிமன்றத்துக்கு வரும் முஸ்லிம்களுக்கு, தேர்ந்த ஆலோசனை இப்பிரிவில் வழங்கப்படும் . முஸ்லீம் சமூகத்திற்குள் முடிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் முஸ்லீம் சமூகத்துள்ளேயே இஸ்லாமிய அடிப்படையில் முடிவெடுக்கப்படும். 
E. கூட்டுறவு சங்கம் சிறு/குடிசைத்தொழில் மற்றும் வீட்டுத்தயாரிப்புகள் இக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கப்படும் இது தரகர்கள் தலையீடை தடுப்பதோடு பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு வழிவகுக்கும் Regional coordination center எடுக்கும் முடிவின்படி இக் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்படும்.
F. ஊடகப்பிரிவு முஹல்லா பற்றி முழுமையான கணக்கெடுப்பு நடத்தி மக்களின் ஆர்வம், எண்ணம் பற்றி தெரிந்துகொள்ளப்படும் தொண்டர்கள் முஹல்லா உறுப்பினர்கள் பார்ப்பது, கேட்பது மற்றும் படிப்பது பற்றி அறிந்து கொள்ளவேண்டும் இஸ்லாமிய எழுச்சியை கவனத்தில் கொண்டு ஊடகம் முழுமையான முறையில் பயன்படுத்தப்படவேண்டும் 
இதற்காக கீழ்கண்டவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். 
1, முஹல்லா கமிட்டிக்கு சொந்தமாக கேபிள் Tv Network 
2, ஆடியோ /வீடியோ, நூலகம் 
3, குழந்தைகள் மற்றும் முஸ்லிம் அல்லாதவருக்கான ஆடியோ/வீடியோ சாதனங்கள் 
4, முஹல்லா நூலகத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்பு 
G. நூலகப் பிரிவு ஒவ்வொரு முஹல்லா/Regional center ரும் நூலகம், படிப்பகம் மற்றும் புத்தக வழங்கல் பிரிவு இருக்க வேண்டும் தகுதி படைத்த குறிப்பிட்ட இஸ்லாமிய மற்றும் பொது நூல்கள் மாநில மற்றும் இதரமொழிகளில் கண்டிப்பாக இருக்க வேண்டும் பெண்கள், குழந்தைகள் மற்றும் New literates ஆகியோருக்கு தனி கவனம் செலுத்தவேண்டும்.
H. தகவல் தொழில் நுட்ப பிரிவு நவீன (தொழில் நுட்ப) யுகத்துக்கேற்ப இளைய சமுதாயத்தை இப்பிரிவு உருவாக்கும் ஒவ்வொரு முஹல்லாவுக்கும் இனையதளங்களோடு இணைந்து இருக்கும்.

i. பைத்துல்மால் நிதி வளங்களை சேகரிப்பதற்கு முஹல்லாவில் பைத்துல்மால் உருவாக்கப்படும் வட்டியில்லா கடனுதவி திட்டம்,

இஸ்லாமிய முதலீட்டு சேவை , பரஸ்பர உதவி சேவை ஜகாத் நிதி, திருமண நிதியகம், அறக்கட்டளைகள் இதன் கீழ் இயங்கும் Regional center உடன் இனைந்து செயல்படும். 
1, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி கடனுதவி
2, அனாதைகள்/தேவையுடையோரின் கல்விக்கு பொருப்பு 
3, மார்க்க கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு 
4, முஸ்லிம் கட்டிடக்கலை நிபுணர்களின் உதவியோடு குறைந்த செலவில் வீடு கட்ட கடனுதவி 
5, சுயதொழில் தொடங்க மானியம் 
6, எதிர்பாராத சந்தர்ப்பங்களில் சமூக பாதுகாப்பு உதவி.
J. நல்லுறவு குழுக்கள் சமூக நல்லினக்கத்துக்கும் அழைப்புபணிக்கும் உகந்த சூழ்நிலை ஏற்படுவதற்கும் இக்குழு பங்காற்றும் சமூக பிரச்சனைகளை பிற சமுதாயங்களை சேர்ந்த தலைவருகளுடன் இனைந்து களைவதற்கு வழிவகுக்கும் முஸ்லிமல்லாத மக்களை அழைத்து தாவா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது சமூகத்தில் பின்தங்கிய (தலித்) மக்களுக்கு உதவிகள் வழங்குவது. 
K. கலை, கலாச்சார பிரிவு இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கலை, மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை இப்பிரிவு வலியுறுத்தல் தகுதியுடைய இளைஞர்கள் கண்டறியப்பட்டு ஆர்வமூட்டப்படுவர் இதர முஹல்லா Regional center உடன் கலாச்சார பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்படும் வயது அடிப்படையிலும் ஆண்/பெண் என தனித்தனியாக பொழுதுபோக்கு கழகங்கள் ஏற்பாடு செய்யப்படும் தற்காப்புகலை, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். 
L. Regional coordination center பல்வேறு முஹல்லாக்களை இம்மையம் ஒருங்கினைக்கும் உம்மத்தை நிர்வாகத்துக்குட்பட்ட இடங்களில் முன்னேற்றதோடு கீழ்கண்ட விசங்களிலும் இம்மையம் கவனம் செலுத்தும் - பாதுகாப்பு, (பிறப்பு-இறப்பு பற்றிய புள்ளி விபரம்) சம்பந்தமான திட்டமிடுதல் - கூட்டுறவு சங்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு - பைத்துல்மால் - மொபைல் மருத்துவ சேவை - குடும்ப ஆலோசனை - விவசாய, தொழில் நிபுணர்களிடம் ஆலோசனை - பாதுகாப்பு பிரிவு - நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை, திட்டமிடல் மேலாண்மை, சந்தைமேலாண்மை போன்றவை. - இளைய தலைமுறை தொண்டர்கள் கிராமங்களிடையே பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்வது

M. முஹல்லா சீரமைப்பு - சங்கங்கள் 
A, குழந்தைகள் சங்கம் - குறிக்கோள்கள் ஒழுக்கப் பயிற்சி இஸ்லாமிய கலாச்சார, பரம்பரை சம்பந்தமான Orientation இஸ்லாமிய வரலாறு சம்பந்தமான சரியான விளக்கங்கள் Talent தேடுதல் கல்வி வளர்ச்சி இலவச டியூசன் விஞ்ஞான மற்றும் வரலாற்று குழுமங்கள் அறிஞர்களுடன் கலந்துரையாடல் விளையாட்டு, உடற்பயிற்சி, தற்காப்பு கலைகள் போன்றவற்றை வளர்த்தல் இளைஞர் சங்கம் - குறிக்கோள்கள் உம்மத்தின் நலனுக்காக தன்னார்வதொண்டர்கள் உருவாக்குதல் சுயநலமற்ற தொண்டார்வம் உள்ளவர்களாக இளைஞர் சமுதாயத்தை உருவாக்கல் கட்டாய சேவை (ஒவ்வொரு உறுப்பினரும் தேவைகளை பொறுத்து ஒரு வாரம் முதல் ஒரு வருடம் வளர கட்டாய சமூக சேவைக்காக அர்பணித்தல் வரலாற்று குழுமங்கள் விளையாட்டு & உடற்பயிற்சி தற்காப்பு கலைகள் மல்யுத்தம் துப்பாக்கி பயிற்சி நீச்சல் மற்றும்இதர பயிற்சிகள் கல்வி போட்டி தேர்வுகள் முஹல்லாவில் உள்ள இலவசகல்வி நிறுவனங்களுக்கு இலவச சேவை தொழிற்பயிற்சி சுயதொழில் திறமை முஹல்லா பாதுகாப்பு மஸ்ஜித்கள் மதரஸாக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தலைவர்கள் அறிஞர்களின் பாதுகாப்பு பெண்கள் சங்கம் - குறிக்கோள்கள் உம்மத்தின் நலனுக்காக பெண்களை இணைத்தல் கொள்கைத் தெளிவு அர்ப்பணிப்பு பெண்கள் சிறார் மத்தியில் கல்வி விழிப்புணர்வு இஸ்லாம் முஸ்லிம் வரலாறுகளை பற்றிய விழிப்புணர்வு சுகாதாரம் குடும்ப நலன் முன் மாதிரி பெற்றோர் குடும்ப பட்ஜெட் ஆய்வு கோரிக்கை பற்றிய சரியான பார்வை குடும்ப பிரச்சனைகளுக்கு ஆலோசனை தன்னார்வ பணியில் ஈடுபடுதல் சுயதொழில் பொருட்களை விற்பதற்கான கூட்டுறவு அங்காடிகள் அடிப்படை தற்காப்புமுறைகள் கலவரங்களின்போது கையாள வேண்டியவை முஹல்லா முதியோர் பேரவை அறிவுரைகள் வழிகாட்டுதல்களுக்காக பல்வேறு குழுக்களில் இயக்கங்களில் உள்ள முதியோர்கள் அறிஞர்கள் உம்மத்தின் மறுமலர்ச்சிக்காக ஒற்றினைத்தல் செயல்திட்டங்களை ஆய்வு செய்வதற்கான கூட்டங்கள்






Other News
1. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
2. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
3. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
4. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
5. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
6. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
7. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
8. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
9. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
10. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
11. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
12. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
13. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
14. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
15. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
16. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
17. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
18. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
19. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
20. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
21. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
23. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
24. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
25. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
26. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
28. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
29. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
30. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..