Posted by S Peer Mohamed
(peer) on 1/14/2017 12:39:32 AM
|
|||
தமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை பண்டைக் கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வாள், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை கையாள்வதில் மட்டுமின்றி, துள்ளித்திரியும் காளைகளை துணிந்து அடக்கும் இளைஞர்கள் பற்றி கலித்தொகையில் கொல்லேறு தழுவல் என குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறியலாம். ஜல்லிக்கட்டு எப்படி துவங்கியது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வீர விளையாட்டாகவே இன்றளவும் கருதுகின்றனர். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் தை மாத துவக்கத்தை தென் மாவட்ட மக்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர். அதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப் பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும். எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்னதாக காளைகள், காளை யர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்துவதே தனி கலை. நாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர். அதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆவதாக அவற்றின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. அதேசமயம் பிடிபட்டு விட் டால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். எனவே தான், ஜல்லிக்கட்டு தமிழர் களின் வீரத்தோடு மட்டுமின்றி உணர்வோடு கலந்ததாகவும் விளங்கி வருகிறது. பயிற்சிக்கு பின் அரங்கேற்றம் தொடங்கும் காளைகள் சுமார் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் அந்த காளைகளை இந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) தொகுப்பில் 2013-12-11 அன்று வெளிவந்தது ! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |