Posted by Haja Mohideen
(Hajas) on 1/18/2017 12:24:36 AM
|
|||
ஏர்வாடி முஸ்லிம்களின் சிந்தனைக்கு...! சல்லிக்கட்டுக்கு ஆதரவான வள்ளியூர் போராட்டமும், ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்! பகிருங்கள்! நாம் மார்கத்தால் முஸ்லீம்கள். ஒவ்வொரு இனத்துக்கும் சில தனி அடையாளங்களும், கலாச்சாரங்களும் இருப்பது போல, தமிழர் பண்பாட்டுக் கலாச்சாரங்களில் ஒன்றே வீரமிகு ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு. வீர விளையாட்டுகளை மார்க்கம் அனுமதிக்கவே செய்கிறது. இந்த சந்தர்பத்தில் இவ்வாறான மேதாவித்தன விவாதங்களில் ஈடுபடுவது, தமிழர்களின் வீரத்தை பரைசாற்றும் சல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுதும் கொழுந்துவிட்டு எறியத் துவங்கியுள்ளது. வள்ளியூரில் இன்று (18/01/2017 மாலை 4:30 மணி) நடைபெற இருக்கும் போராட்டத்தில் ஏர்வாடி முஸ்லிம்களாகிய நாம் முழுமையாக, பெரும் திரளாக பங்கு பெறவேண்டும். இதனால் பிற சமூகங்களுக்கும் நமக்கும் இடையே ஓர் நல்லுறவு ஏற்படுவதோடு, எனவே சல்லிக்கட்டு & சமூக ஒற்றுமை இரண்டையும் கருத்தில் கொண்டு முடிந்த அளவுக்கு அனைவரும் பங்கு கொள்வோம். வள்ளியூரில் நடைபெறும் இன்றைய போராட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய கலாச்சார அடையாளமாகிய தொப்பியுடம் கலந்து கொளவது இன்னும் நம்மை தனியாக அடையாளப்படுத்திக் காட்டும். தொப்பி கூடுமா? கூடாதா? என்று யாரும் விவாதிக்க வந்துவிட வேண்டாம். சல்லிக்கட்டு நம் பாரம்பரிய வீரத்திற்கான போராட்டம் மட்டுமல்ல.. சல்லிக்கட்டு வெல்லட்டும்! புறப்படுங்கள்! இவண்: |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |