Posted by Haja Mohideen
(Hajas) on 2/11/2017 4:10:02 AM
|
|||
*~நாம் எங்கே செல்கிறோம்~* *_சற்றே யோசிக்கலாமே_* சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், *'அம்மா’* என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே, *_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_* என்று சொன்ன *பாட்டி* ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~. *_ஆடிப் பட்டம் தேடி விதை_* என இன்றைக்கும் சொல்லும் *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~. *_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_* எனப் பாடிய *தேரன் சித்தர்* ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை. *_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு* 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~. _அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_ _அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_ *ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*. *வள்ளுவன்* *பாரதி* *_மம்மி_* அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_* _ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_. இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!* *தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து ~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~ *_~விளைவு?~_* *'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’* எனும் ~அம்மா~, *~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~* என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~ போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. *_'வயிறு உப்புசமா இருக்கா?_* *ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,* *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*. *~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~* *வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_ என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.* _பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? *'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_. *மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?* *_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_* *வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_ *பித்தக் கிறுகிறுப்புக்கு* *மூட்டு வலிக்கு* *மாதவிடாய் வலிக்கு* *குழந்தை கால்வலிக்கு* *வயசுப் பெண் சோகைக்கு* *வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு* *_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._* *சுழியத்தைக்* _(ஜீரோவை)_ *'பை’* என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது. *'ஆறறிவதுவே அதனொடு மனமே’* *~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாம்? https://www.facebook.com/groups/baithussalam/permalink/1238583159543732/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |